Monday, March 12, 2007

மகளிர் சக்தி - அறிமுகம்

கூகிள் வாசிப்பகத்தைப் பயன்படுத்தி தனக்கேயான, தனிப்பட்ட திரட்டியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ரவிசங்கர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அதிலும் துறை சார்ந்த திரட்டி பற்றி ஆண்டிறுதியில் கூறியிருந்ததை மெய்ப்பிப்பது போல், இப்போது பெண்களுக்கான திரட்டி ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.

தமிழ் எழுதும் அறுபது சொச்சம் பெண்களின் உரல்களைச் சேர்த்து, மகளிர் திரட்டியாக எழுந்து நிற்கிறது மதி உருவாக்கிய மகளிர் சக்தி.

பல்வேறு காரணங்களால், தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் இடுகைகளைத் தவற விடுபவர்கள், இந்தச் சுட்டியினை உங்களின் கூகிள் வாசிப்பகத்தில் இணைத்துக் கொண்டு பெண் பதிவர்களின் இடுகைகளை விடாமல் படிக்கலாம்.


இந்தச் சுட்டியினை உங்கள் பதிவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சமீபத்தைய ஐந்து இடுகைகளை உங்கள் பக்கத்திலேயே கூட பார்க்கலாம். புது பிளாக்கரில் உங்கள் பக்கம் இருந்தால், மகளிர் சக்தியை இணைக்க, இங்கே உள்ள "சக்தி கொடு" பொத்தானைப் பயன்படுத்தலாம்.


என் பதிவின் பக்கப்பட்டியில் இருக்கும் "சக்தி கொடு" பொத்தானையும் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். தோழிகள் எல்லாருடைய பதிவுகளையும் இதில் சேர்த்திருக்கிறோம். இருப்பினும் யாராவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்கள். அத்தோடு, தோழிகள் அனைவரும் இந்தப் பக்கப் பட்டியைத் தங்கள் பதிவில் இணைத்துக் கொண்டால் மிகநன்றாக இருக்கும்.

[பிகு: இது பிளாக்கரின் விட்ஜட் உருவாக்கும் ஆப்ஷனைப் பயன்படுத்தி உருவாக்கியது. சமீபத்தில் வந்த மறுமொழிகள் தொடங்கி, வேறு பலவற்றையும் இது போன்ற விட்ஜட்டாக கொடுக்கலாம். வேறெதும் விட்ஜெட் வேண்டும் என்று நினைத்தால் பின்னூட்டமிடுங்கள். முடிந்தால் அதுவும் உருவாக்கி கொடுக்கலாம் :) ]

19 comments:

ரவிசங்கர் said...

மகளிர் சக்தி - நல்ல யோசனை. பலரின் பதிவில் இணைக்க உங்கள் widget உதவும். அண்மைய மறுமொழிகளுக்கும் ஒரு widget உருவாக்கித் தந்தால் பலரும் படிக்கலாம். வேறு யோசனைகள், வேண்டுகோள்களை பின்னர் தெரிவிக்கிறேன். widget செய்வது எப்படி? என்னென்ன மாதிரி widgetகள் செய்ய முடியும் என்று சுருக்கமாக ஒரு நுட்பப் பதிவு போட்டாலும் நன்றாக இருக்கும்.

விடாதுகருப்பு said...

சொன்னா கோச்சுக்கப்படாது. என் காதில் கத்தி கொடுன்னு விழுந்துச்சு.

புதுமைப் பெண்களே, பாரில் நிமிர்ந்து நில்லுங்கள்.

வாழ்த்துகிறேன்.

மாதங்கி said...

வாழ்த்துக்கள் மதி.

Anonymous said...

பொன்ஸ், கலக்கல்... சூப்பரா இருக்கு விஷயம்.

கலக்கிட்டீங்க, நீங்களும் சக்தி க்ரூப்பும் சேர்ந்து!

இப்பவே பாக்குறேன், என் பதிவுக்கு "சக்தி கொடுக்கிறது" எப்படின்னு!

நன்றி நன்றி நன்றி!

Anonymous said...

நல்ல செய்தி. பெண்களுக்கு சக்தி கொடு என்பதுதான் எனது வேண்டுதலும். நல்லா இருங்க :-)

சாத்தான்குளத்தான்

பொன்ஸ்~~Poorna said...

ரவிசங்கர், செய்யலாம்.. உண்மையில் நானே ஹான்ஸ் எழுதிய விட்ஜட் உருவாக்கத்திலிருந்து தான் இதைச் செய்தேன். பெரிய மாற்றங்கள் செய்ய முடியாத விட்ஜட் இது. நீங்கள் சொல்வது போன்ற மறுமொழிகள், பதிவுகளுக்கான விட்ஜட்கள் செய்ய இன்னும் கற்கவில்லை.. படித்துக் கொண்டே இருக்கிறேன். சீக்கிரமே செய்துவிடுவோம் :)

கருப்பு என்ற பெயரில் பின்னூட்டி இருப்பது உண்மையான பதிவர் தானா என்று தெரியவில்லை. நதியக்கா பதிவு போல, இங்கும் ப்ரோபைல் தெரியாமல் தவறான பக்கத்திற்கே செல்கிறது. போலியென்று யாரேனும் சொன்னால் நீக்கிவிடுகிறேன்.

மதியிடம் சொல்லிடலாம் மாதங்கி :)

மதுரா, சக்தி கொடுத்திட்டீங்க போலிருக்கு தமிழச்சிகளுக்கு! :) நல்லா வருதில்ல...

ஆசிப், இன்னும் இன்னும் சக்தி வேணும் பெண்களுக்கு, உங்க கவுஜல வர்ற மாதிரி, பட்டங்களைப் பிடித்திழுக்க ;)

மலைநாடான் said...

சக்தி பெருகட்டும்.

லக்கிலுக் said...

பெண்களுக்கு மட்டும் தான் "சக்தி கொடு" என்று தெளிவாக சொல்லியிருக்கக் கூடாதா? அவசரப்பட்டு அமுக்கி என் டெம்ப்ளேட் ஒரு வழி ஆயிடுச்சி :-(

பொன்ஸ்~~Poorna said...

நன்றி மலைநாடன்,

லக்கி, இது பெண்களுக்கு மட்டுமே என்று சொல்லவே இல்லையே.. தமிழில் எழுதும் தோழிகளின் பதிவுகளைத் தவற விட்டுவிடாமல் படிக்க இந்த கூகிள் வாசிப்பக திரட்டி உதவும்.. உங்களுடையது மாதிரி பாப்புலர் பதிவுகளில் இருந்தால், நல்லது தானே! :)))))

செந்தழல் ரவி said...

பட்டன் சக்தி கொடு என்று இருப்பது பொருத்தம் அல்ல...

"சக்தி எடு" என்று வையுங்க :)))

மிகவும் அழகான வெப்சைட், நல்லதொரு முயற்சி...

மிதக்கும் வெளி said...

பெண்பதிவாளர்கள்ன்னா 'பெண்' பதிவாளர்கள்தானா? இல்லை, பெண் பெயரிலும் எழுதும் பதிவாளர்களுமா?

பொன்ஸ்~~Poorna said...

ரவி, சக்தி எடுவா?! அடப்போங்க, நல்லா இல்லை :( ! இந்தப் பேரு தான் நம்ம சூப்பர் ஸ்டார் பாட்டு.. அதான் வச்சிட்டேன் :)

சுகுணாதிவாகர், உங்களுக்கெல்லாம் தனியா ஒரு திரட்டி செஞ்சிதரோம்.. சுகுணாவைப் பதிவுக்குக் கூட்டிவந்தால், மகளிர் சக்தியில் சேர்த்துக்கிறோம் ;)

தமிழ்நதி said...

உருப்படியான வேலை. அது சரி... இந்தப் பென்குவின் ஆட்டம் எங்கே பிடித்தீர்கள். மிக நன்றாக இருக்கிறது(இப்போது மனிதர்களைவிட நாய்,பூனை,யானை,பென்குவின்தான் பிடிக்கிறது)

ஜெஸிலா said...

நல்ல முயற்சி பொன்ஸ். எல்லா பெண்களையும் favourites ல் போட்டுக் கொண்டு படிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. ஏதாவது எழுதிருக்காங்களா இல்லையான்னு பார்க்க அவங்க வலைப்பூக்குள்ள போய்ட்டு வர வேண்டியிருக்கு. இந்த சக்தி கொடு எனக்கும் கொஞ்சம் சக்தி கொடுக்கட்டும்.

பொத்தானை அழுத்தினால் அதில் வலைப்பூ முகவரி தர முடியவில்லை. editல் உள்ள codesஐ நம் templateல் சேர்க்கலாமா? எந்த இடத்தில் சேர்க்க வேண்டும்?

வேதா said...

இதில் என் வலைப்பக்கத்தை எப்படி சேர்ப்பது பொன்ஸ்?

பொன்ஸ்~~Poorna said...

வேதா, சேர்த்திட்டம்ங்க.. வரலைன்னா சொல்லுங்க..

செல்லி said...

வாழ்த்துக்கள்! நல்ல முயற்சி.

உண்மைத் தமிழன் said...

மேடம்ஸ்.. இப்பதிவில் தமிழ்மணம் லோகாவிற்குக் கீழுள்ள லோகோக்களை வலைத்தளத்தில் இணைப்பது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழ்மணத்தை இணைப்பது பற்றியான ஒரு வலைத்தளத்தில் சொல்லப்பட்டிருந்தபடி செய்து பார்த்தேன். பலனில்லை. யாராவது உதவி செய்ய முடியுமா? உங்களுடைய சக்தி கொடு பகுதியை இணைத்துவிட்டேன். மிக்க நன்றி.. மேற்கொண்டு எப்படி இவற்றை இணைப்பது என்பது தெரியவில்லை. யாராவது சொல்லுங்களேன்..

அன்புடன்
தமிழ்சரண்

காட்டாறு said...

பொன்ஸ், ரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க. என்னுடைய பதிவிலும் மகளிர் சக்தி அலட்டலாக உட்கார்ந்திருக்கிறார். என்னையும் சக்தியுள் ஐக்கியமாக்கிடுங்க.