Wednesday, March 07, 2007

பா.கே.ப.பி

அதாங்க, கார்த்திக் பிரபு தொடங்கி, மோகன்தாஸ் என்னிடம் ஒப்படைத்த, பார்த்ததில், கேட்டதில் படித்ததில் பிடித்தது சங்கிலித் தொடரின் சுருக்கம்..

இவர்கள் இருவரது பதிவையும் பார்த்துவிட்டு, இப்படி வரிசையாக பட்டியலிட்டு ஒரு பதிவு எழுதத் தான் வேண்டுமா என்று கொஞ்ச நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்தேன். நம்ம பட்டியலுக்கு ஒரு ப்ளாக் போதுமா? ;) இருந்தாலும், எழுதித் தான் பார்ப்போமே என்று இப்போ தொடங்கியாச்சு..

பிடித்தது என்பது மாறிக் கொண்டே இருந்திருக்கிறது. வாழ்க்கை, மாற்றங்களால் ஆனது. விருப்பங்களும், பிடிப்புகளும் கூட. இன்று பிடித்தது நாளை பிடிக்காமல் போகலாம், அவள் விகடன் விளம்பரம் போல...

எனக்குப் பிடித்த எல்லாமும் என்று நீள் பட்டியலிட அவ்வளவாக விருப்பமில்லை. நினைவு தெரிந்து முதன்முதலில் பிடித்தது, சமீபத்தில் பிடித்தது என்று இரண்டிரண்டு விசயங்களாகப் பட்டியல் போடப் போகிறேன்:

பார்த்ததில் பிடித்தது:
1. நினைவு தெரிந்து நான் விரும்பிப் பார்த்த சின்னத்திரைத் தொடர், ப்ளைட் 172.




மௌலியின் நகைச்சுவையும், அவர் ஜாலியான ஆங்கிலமும் என்று இந்தத் தொடரை நாங்கள் மொத்தமாக ரெகார்ட் செய்து வைத்திருந்தோம். அவ்வப்போது போட்டுப் பார்த்துச் சிரிப்பது ஒரு நல்ல பொழுது போக்கு..

2. சமீபத்தில் பார்த்ததில் பிடித்தது, நம்ம ஹாப்பி பீட் தான்..




கேட்டதில் பிடித்தது
1. சின்ன வயதில் பாட்டி சொன்ன ஈக்கதை.

ஈ ஒன்று தன் வீட்டு வாசலில் இருந்த அதிக தண்ணீரில் வழுக்கி விழுந்து தன் பெயரை மறந்துவிடும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற விலங்குகள், மனிதர்கள், பொருட்கள் என்று கிட்டத் தட்ட இருபது பேரிடம் தன்னுடைய பெயர் என்ன என்று கேட்டுப் பார்த்துவிட்டு, கடைசியாக, ஒரு குதிரையைக் கேட்டு, குதிரை "ஹீஹீ" என்று கனைத்ததில் தன் பெயர் ஈ என்று நினைவுக்கு வந்து வீடு திரும்பிவிடுவதாக முடியும் அந்தக் கதை என்னுடைய சிறுவயது விருப்பம்.

அப்போது அந்தக் கதையைப் பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பேன். உச்சரிப்புக்காகவும், புதிய பொருட்கள், விலங்குகளின் பெயர்களை அறிமுகப்படுத்தும் விதமாகவும் வரும் அந்தக் கதை எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று.

2. சமீபத்தில்: போக்கிரி படத்தில் "நீ முத்தமொன்று கொடுத்தால், முத்தமிழ்" பாட்டு.





படித்ததில் பிடித்தது.
1. முதன்முதலில் நானாகப் படித்து, அப்படிப் படித்ததில் பிடித்த புத்தகம், சிறுவர்மலர். அதில் வந்த பல காமிக்ஸ் சிறுகதைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்



2. சமீபத்தில் படித்ததில் பிடித்தது : இரா.நடராசனின் ஆயிஷா.


பா.கே.ப என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது வாரமலர் அந்துமணி. அந்துமணி என்றவுடன் நம் எல்லாருக்குமே நினைவுக்கு வருவது, மருதக்கார தம்பி, ராயல் ராம். [அது ஏன் என்பதை ராமிடமே கேட்கவும் :)]. எனவே, இந்த விளையாட்டை ஆட ராமை அழைத்து விட்டு நான் இப்போ அப்பீட்டு....

13 comments:

Ayyanar Viswanath said...
This comment has been removed by a blog administrator.
G.Ragavan said...

ஓ! இப்ப இப்பிடி ஒரு தொடரா? நல்லாயிருக்கு.

சிறுவர் மலர் சின்ன வயசுல நெறைய படிச்சிருக்கேன். இப்பல்லாம் எடுத்தா மூனு நிமிசத்துல வெச்சிர்ரேன். அதுல பலமுக மன்னன் ஜோன்னு ஒரு பாத்திரம் வரும். அது ரொம்பப் பிடிக்கும். இப்பல்லாம் அது வர்ரதில்ல. ஏன்னு கேட்டுச் சொல்லுங்களேன்.

கார்த்திக் பிரபு said...

நன்றி பொன்ஸ் , லேட்டா போட்டாலும் ஹாட்டா போட்ருக்கீங்க.


ராமை அழைத்ததற்கு நன்றி , தொடரட்டும் , ராகவனையும் விளையாட்டுல சேருங்க

சிறுவர் மலர் ஜோவை நானும் விரும்பி படிப்பேன் ,அந்த மாதிரி திறமை(முகம் மாற்றும்)இருந்தால் எப்படி இருப்பேன் என கற்பனை பண்ணிப் பார்ப்பேன்

சென்ஷி said...

//சிறுவர் மலர் ஜோவை நானும் விரும்பி படிப்பேன் ,அந்த மாதிரி திறமை(முகம் மாற்றும்)இருந்தால் எப்படி இருப்பேன் என கற்பனை பண்ணிப் பார்ப்பேன் //

ஹைய்யோ.. எவ்ளோ குஷியா இருக்குற விஷயம் சிறுவர்மலர் படிக்குறது.. (சின்ன வயசுல)
எனக்கு பிடிச்சது ஜோவும், சோனிப்பையனும் :))
பேய் ஸ்கூல்ன்னு ஒன்னு வருமே ஞாபகம் இருக்கா?

சென்ஷி

பொன்ஸ்~~Poorna said...

அய்யனார், உங்களின் மெயில் ஐடி இருந்ததால், உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன் :)

ஜி.ரா, கார்த்திக், சென்ஷி,
சிறுவர்மலர் படிப்பது ஒரு சுகமான அனுபவம். இப்போதெல்லாம் நான் படிப்பது சுட்டி விகடன் தான். சிறுவர்மலர் மறந்தாச்சு..

ஜி.ரா, நீங்களும் எழுதுங்களேன்.. கார்த்திக் கூப்பிடறார் பாருங்க :)

சென்ஷி, பேய்ஸ்கூல், சோனிப் பையன் எல்லாம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. வேற என்ன படிச்சேன்னு சரியா நினைவில்லை. உங்களுக்கு நினைவிருக்கிறதெல்லாம் சொல்லுங்களேன்.. அப்புறம், சிறுவர் மலரில் இந்த யானை, பூனை கரடி எல்லாம் பேசுவதைத் தான் எங்க வீட்ல ரொம்ப வெறுப்பாங்க :) "இப்படி அபத்தமான புத்தகத்தை ஏன் படிக்கிறே?"ன்னு கேள்வி வரும். நம்ம அதெல்லாம் கண்டுக்கவே மாட்டோம்ல :)

சென்ஷி said...

//சிறுவர் மலரில் இந்த யானை, பூனை கரடி எல்லாம் பேசுவதைத் தான் எங்க வீட்ல ரொம்ப வெறுப்பாங்க :) "இப்படி அபத்தமான புத்தகத்தை ஏன் படிக்கிறே?"ன்னு கேள்வி வரும். நம்ம அதெல்லாம் கண்டுக்கவே மாட்டோம்ல :)//

:))))

சரி.. என்னாச்சு.. உங்க பதிவு தமிழ்மணத்துலேந்து நேரடியா திறக்க முடியல.. :((

dondu(#11168674346665545885) said...

//சின்ன வயதில் பாட்டி சொன்ன ஈக்கதை.//

'கொழு கொழு கன்றே கன்றின் தாயே' பாடல்தானே?
இந்தக் கதை எனக்கு இன்னொரு கதையை ஞாபகப்படுத்தியது. அது பற்றி நான் போட்ட பதிவு இதோ.

http://dondu.blogspot.com/2006/08/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

இலவசக்கொத்தனார் said...

//சின்ன வயதில் பாட்டி சொன்ன ஈக்கதை.//

இதை முழுவதுமாக தர முடியுமா? இங்கு இல்லை என்றாலும் தனி மடலிலாவது? எனக்கு 20 ஞாபகம் இல்லையே...

இராம்/Raam said...

//பா.கே.ப என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது வாரமலர் அந்துமணி. அந்துமணி என்றவுடன் நம் எல்லாருக்குமே நினைவுக்கு வருவது, மருதக்கார தம்பி, ராயல் ராம். [அது ஏன் என்பதை ராமிடமே கேட்கவும் :)]//


பத்தவைச்சிட்டியே யானையக்கா?? அந்த துன்பவியல் சம்பவத்தை நானே மறந்து போயிட்டேன், எரிஞ்சு அணைச்சு போன கிளியாஞ்சட்டி விளக்குலே கொஞ்சம் எண்ணையை ஊத்தி பத்திவைச்சிட்டியே யக்கோவ் :(


//எனவே, இந்த விளையாட்டை ஆட ராமை அழைத்து விட்டு நான் இப்போ அப்பீட்டு.... //

ஆணி பிடுங்க சொன்னாய்ங்களேன்னு புடுங்க போனா அது அனுமர் வாலை விட பெரிசா இருக்கிற கடப்பாறையா இருக்கு.... ஹிம் இன்னிக்கு நைட் தூங்கமே தான் போஸ்ட்க்கு தட்டச்சணும் :(

Unknown said...

சிறுவர்மலர் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே எங்களுக்குக் கிடைத்தது “பூந்தளிர்”… அதில்தான் காட்டு விலங்குகளையும் செல்லப் பிராணிகளைப் போல அன்பாகக் காட்டுவார்கள் :-)
அப்புறம் வந்ததுதான் சிறுவர்மலரின் பலமுகமன்னன் ஜோ, சோனிப்பையன், பேய் பள்ளி, எல்லாம்…
இப்போதும் நெட்டில் சுட்டி விகடன் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் ;-)

யோசிப்பவர் said...

//சிறுவர்மலர் படிப்பது ஒரு சுகமான அனுபவம். இப்போதெல்லாம் நான் படிப்பது சுட்டி விகடன் தான். சிறுவர்மலர் மறந்தாச்சு..
//
சிறுவர்மலர் சிறு வயதில் படித்தது போல் இப்பொழுது சுவாரஸ்யமாக இல்லை என்பது உண்மைதான். இதற்கு நமது (எனது!) வயது ஏறிக்கொண்டே போவதுதான் உண்மைக்காரணமா? இல்லை உண்மையிலேயே சி.ம. அப்படியாகிவிட்டதா என்று யோசித்து கொண்டிருக்கிறேன்.

சுட்டி விகடன் ஓ.கே. ஒரே மாதிரி பகுதிகளாக போடாமல் கொஞ்சம் அடிக்கடி மாற்றி கொண்டேயிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும்(விலையை குறைத்தால் இன்னும் ரொம்ப நன்றாயிருக்கும்!!!)

பூந்தளிர் கபீஷ், காளி போன்றவை படித்திருக்கிறீகளா?;-)

Beemboy-Erode said...

நண்பர் பொன்ஸ் எனது நீன்டநாள் ஆசை Flight 172 பார்க்கவேண்டும் என்று, google தேடி பார்த்ததில் google video-வில் சுமரான பிரின்ட் கிடைத்தது, நீங்கள் DVD வைத்துஇருந்தால் ஒரு காப்பி அல்லது எங்கு கிடைக்கும் என்று தெரிவிங்கள். நன்றி

முடிந்தால் என்னுடைய புது BLOG கிற்கு வருகைதர வேண்டுகிரன்
beemboy-erode.blogspot.com

பொன்ஸ்~~Poorna said...

//சரி.. என்னாச்சு.. உங்க பதிவு தமிழ்மணத்துலேந்து நேரடியா திறக்க முடியல.. :(( //
சென்ஷி, புரியலையே..

டோண்டு சார், அதே கதை தான். உங்க பதிவு பார்த்தேன். எனக்கென்னவோ குழந்தைகளுக்கு உச்சரிப்புக்கான இந்தக் கதைக்கும் அறுவைக்கென்றே புனையப்பட்ட அந்தக் காஷ்மீர் கதைக்கும் இடையில் நிறைய வித்தியாசம் தெரிகிறது. துளசி அக்கா இந்த ஈக்கதையைச் சொன்னதாலேயே உங்களுக்கு நினைவுக்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். துளசிதளத்தின் அந்தக் கதைச் சுட்டியையும் இணைத்திருக்கலாமே!

கொத்ஸ், சின்ன வயதில் நான் சொன்னதே எங்கோ பதித்து வைத்திருக்கிறோம். முடிந்தால் அதையே எடுத்துப் போட ஆசை.. துளசி அக்கா வேறு எழுதி இருக்காங்களாமே! பார்க்கலாம். வலையில் இல்லை என்றால் தருகிறேன்.

இராம்,
:))))))) போஸ்டு.. பெரூஊஊசா இருக்கு ராமு.. முடிஞ்சா சீக்கிரமே வாரேன்..

அருட்பெருங்கோ, நம்ம கேஸ்தானா நீங்களும் :) மகிழ்ச்சி :))

யோசி,
பூந்தளிர் கபீஷ் எல்லாமே படித்திருக்கேன் :) ஆனால் விரும்பி படித்தது சி.ம. இப்போ அதுவும் இல்லை..
சுட்டிவிகடன் விலைகுறைக்கணுமா, பரிந்துரைக்கலாம். ஆனால், அந்த விலைக்கே வாங்கிப் படிக்கலாம்னு தான் தோணுது :)

பீம்பாய்,
அப்படிக் கிடைக்குமான்னு தெரியலை. என்னிடம் இப்போ விசிடி இல்லை. தேய்ந்து போய்த் தூக்கிப் போட்டுவிட்டோம். உங்க ப்ளாக் பார்த்திட்டேனே.. :)