Saturday, March 31, 2007

ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்...

கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:

முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று ;)


1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் சாப்பிட்டுக் கொண்டே வாசிப்பது இயல்பாகவே ஆகிவிட்டது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். வளர்ந்த பின்னர், அதாவது இந்த இடங்களில் நுழைய வசதியில்லாமல் போன பின்னர், எல்லா நேரங்களிலும் என் கையில் புத்தகம் இருந்த நாட்கள் உண்டு. ஓடும் ரயிலில், பேருந்தில், எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகையில், முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். பாலை அடுப்பில் வைத்துக் கொண்டே புத்தகம் படித்து பலநாள் புதுமனை புகுவிழா நடத்தி இருக்கேனாக்கும்.

2. பேசுவது: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், "அட நான் கூட இப்படித் தானே!" என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன் :)).

3. வாகனம் ஓட்டுவது: ஆளில்லாத சாலையில், அது என்ன வண்டியாக இருந்தாலும், வண்டி எடுத்து தனியே ஓட்டிக் கொண்டே போக பிடிக்கும். சைக்கிள் ஓட்டிய காலங்களில் சென்னையின் புறநகரான மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகள் முழுக்கவும் இப்படிச் சுற்றி இருக்கிறேன். கூடியவரை புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது வழக்கம். இப்போது கூட தினமும் ஒரே வழியில் பயணிப்பது அலுத்துப் போய் வெவ்வேறு வழிகள் கண்டுபிடித்துக் கொண்டே போவேன்.

4. கோபம்: ரொம்பவும் கலகலப்பானவள் தான், அதிகம் யார் மேலும் கோபம் வராதுதான். ஒருமுறை என் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய ஆட்டோக்காரரைக் கூட அந்தக் கணம் திட்டத் தோன்றாத காந்தீயவாதிதான் ;), ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன். பல சமயங்களில் நெருங்கிய நண்பர்கள் தான் இத்தகைய கோபத்துக்கு ஆளாவர்கள். அப்புறம் கூப்பிட்டு வெகுநேரம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும்? இப்போதெல்லாம் இந்தக் காரணமற்ற கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.

5. அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை. ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன். ஐந்து வயதில் அடம்பிடித்து கேரம் போர்டு வாங்கி விளையாடி, ஆறுவயதில் அந்த போர்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு பல்லாங்குழி விளையாடப் போய்விட்ட கிறுக்குத்தனத்தை இன்றும் என் அப்பா சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். தையல், பின்னல் போடுவது, மொழி கற்பது, பாட்டு கற்பது, கலர்கலர் வளையல், காதணி சேர்ப்பது, சின்னச் சின்ன பென்சில் சேர்ப்பது, தபால்தலை சேகரிப்பு, சுட்டிவிகடன் பொம்மைகள் செய்வது என்று எல்லா பொழுதுபோக்குகளும் ஒருசில நாள் ஆசை தான். வாசிக்கும் பழக்கம் மட்டும் தான் இத்தனை நாள் தொடர்ந்திருக்கிறது. விந்தையான விசயம் அதுதான் என்று தோன்றுகிறது.

இன்னும் ஐந்து பேரைக் கூப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை. எல்லாரும் எழுதிவிட்டார்கள் போலத் தெரிகிறது. அதனால் இத்தோட ஜூட் :).

34 comments:

தமிழ்நதி said...

பைத்தியத்திற்கும் தெளிவுக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லை என்று எங்கோ வாசித்திருக்கிறேன். நம்ம ஆளுங்களோட கிறுக்குத்தனங்களை வாசித்தபிறகு அது உண்மைதான் என்பது புரிகிறது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஏதாவது எழுது எழுது என்று விரல்களும் மனமும் சொல்லிக்கொண்டேயிருந்தன. என்ன எழுதுவதென்று அறியாதிருந்தேன். இப்போது உங்கள் பதிவையும் வாசித்தபிறகு சிநேகிதியின் வேண்டுகோளை நிறைவேற்றுவதென்று தீர்மானித்துவிட்டேன். எனது கிறுக்குப்பதிவை எதிர்பாருங்க மக்கா.

பங்காளி... said...

முதல் ரெண்டும் முன்னால ரொம்ப இருந்துச்சி...இப்ப அவ்ளவா இல்லை. மத்த மூணும் அப்படியே இருக்கு...அப்ப நானும் கிறுக்குதானோ, ரொம்ப நன்றி பொன்ஸ், உங்க தயவால என்னை(!) கண்டுகொண்டேன்.....

நாமக்கல் சிபி said...

இண்ட்ரஸ்டிங்க்!

உங்களைப் பத்தி நிறையத் தெரிந்து கொண்டோம்!

அதில் நிறைய ஏற்கனவே தெரிந்ததுதான்!
:))


//கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.
//
எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை!

வினையூக்கி said...

//5. அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை. ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன்
//

:) :) :) :)
:) :) :) :)

Radha Sriram said...

//ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். //
:):):)

இது எனக்கும் கொஞ்சம் உண்டுங்க பொன்ஸ்..ஆனா இவ்வளோ தீவிரமா சண்டை போட்ருகேனா தெரியல...அனா மனசுகுள்ள டிபேட் செஞ்சுகிட்டே போவேன் !!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும்.//

நானும் கூடத்தான். நாம கண்ணாடி போட்டதற்கான காரணம் அது எல்லாம் தானே. B-)

தருமி said...

ரோட்ல போகும்போது பேசுவீங்களா ... அதான் இப்போ ஹெல்மட் போட்டுக்கிறீங்களோ..?

-L-L-D-a-s-u said...

//எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன்//

இப்படியெல்லாம் கிறுக்குத்தனமா?

பட்டியலில் சேர்த்தாச்சு

பொன்ஸ்~~Poorna said...

நதி,
நீங்க எப்படியும் எழுதுவீங்கன்னு நினைத்திருந்தேன். சீக்கிரம் எழுதுங்க :)

பங்காளி, ராதா, முத்துலட்சுமி,
என்னை மாதிரியே இத்தனை பேர் இருக்கிறது ரொம்ம்ம்ம்ம்ப மகிழ்ச்சியா இருக்கு! :)

சிபி,
//எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை! //
அப்படியா.. ம்ஹும்... பெருமூச்சுதான்! திருந்துறேன்..

வினையூக்கி, நன்றி

தருமி, ஹெல்மெட்டுக்குள்ளும் பேசுவோமே. என்ன, சிக்னல்ல நிக்கும்போது பக்கத்து வண்டில இருக்கிறவங்க பயந்துடுறாங்க.. ;)

LLதாஸ், நன்றி, நன்றி!! பிறவிப் பயன்.. ம்ஹூம்.. இந்த இடுகை எழுதியதுக்கே பயன் கிடைச்சிட்டது :-DDDDDD

நாமக்கல் சிபி said...

//அப்படியா.. ம்ஹும்... பெருமூச்சுதான்! திருந்துறேன்//

திருந்தினா சரி!

:))

enRenRum-anbudan.BALA said...

பொன்ஸ்,
//ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன்
//

நான் கொஞ்சம் உஷாரா இருக்கறது பெட்டர் :)

//ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன்.
//
இது வேறயா ? பார்த்தால் தெரியலையே ;-)

Anyhow, Very Interesting !!!

வல்லிசிம்ஹன் said...

புத்தகம், படிப்பது,எங்கேயோ (பக்கத்தில போறவங்க வரவங்க கண்ணிலேயே படமாட்டாங்க)பார்ப்பது
இது நம்ம எல்லாரிட்டயும் இருக்கு பொன்ஸ்.

இதுவும் பாட்டும் என்னை அலைக்கழிக்கும் விபரீத பொழுதுபோக்குகள். ஆனால் தனியாப் பெசலை இது வரைக்கும்.
என்னோட பழகுறவங்கதான் தனக்க்குத்தானா பேச ஆரம்மபிச்சுடறாங்க.

சென்ஷி said...

//நாமக்கல் சிபி பிளிறினது said...
இண்ட்ரஸ்டிங்க்!

உங்களைப் பத்தி நிறையத் தெரிந்து கொண்டோம்!

அதில் நிறைய ஏற்கனவே தெரிந்ததுதான்!
)


//கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.
//
எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை!//

நண்பரே சொன்னப்புறம் அப்பீல் என்ன வேண்டிக்கிடக்கு...

//பைத்தியத்திற்கும் தெளிவுக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லை என்று எங்கோ வாசித்திருக்கிறேன்.//

நான் இப்போதான் படிச்சேன் :)

சென்ஷி

Anonymous said...

கோபம் குறைந்தமாதிரி தெரியல்லையே?....

வெள்ளத்தனைய அப்படின்னு ஒரு குறள், ஒரே ஒரு தடவ சொன்னேன், நீங்க அத எத்தனிதடவ நெனச்சி மாஞ்சு போனீங்க?.

மிதக்கும்வெளி said...

தலைப்பைப் படித்தவுடனே திருப்தியாக இருந்தது. வேறெதையும் படிக்கவில்லை.

Jazeela said...

உங்க பதிவைப் படிக்கும் போது நம்பள மாதிரி கிறுக்கு நெறய இருக்குன்னு நினச்சி சந்தோஷப்படுறேன் ;-)

பொன்ஸ்~~Poorna said...

எ.அ. பாலா, சென்ஷி, ஜெஸிலா, நன்றி..

வல்லியம்மா, 'எங்கயோ பார்ப்பது' சில சமயம் நானும் செய்வதுண்டு.. இயல்பு தானோன்னு விட்டுட்டேன்.. ;)

அனானி, உங்க எண்ணிக்கை தப்பாக்கீதுபா.. நான் தான் ஒரே ஒரு தரம்(தருமி பதிவில்) சொன்னேன். நீங்க பலதரம் நினைச்சிகிட்டே இருந்து, வெள்ளம் வடிஞ்சி ஒருவாரம் ஆனப்புறமும், அந்தம்மா உங்க ஆசைப்படி வெளில போறேன்னு சொன்னபிறகும், அனுமதிக்கும் இடங்களில் எல்லாம் அதையே பேசிகிட்டிருக்கீங்க ;) இது போன்ற விசயங்களை ரொம்ப யோசிச்சிட்டேருந்தா, இதயத்துக்கு நல்லதில்லையாம். அடுத்தடுத்த குறளைப் படிக்கத் தொடங்கலாமே நீங்க?! ;)

சுகுணா, இந்தத் தலைப்பெழுதும் பொழுது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். இந்தப் பதிவால் ரொம்ப மகிழ்ச்சி அடையக் கூடியது நீங்க தான்னு அப்பவே தோன்றியது ;)

Anonymous said...

ஏதோ, கோபம் குறைந்தா சரி....அடுத்த குறள் உபயோகப்படுத்தும் இடம் வரட்டும், நான் எடுத்து விடுகிறேன்.....

பொன்ஸ்~~Poorna said...

ஏ யப்பா!, திடீர்னு என்னப்பா இத்தினி அனானி பின்னூட்டம்?

பிஏ, சமாதான, எதிரி அனானிகளே,
நண்பர்கள் மற்றும் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தத்தில் தவிக்கும் குறள் அனானி - இவர்கள் மனம் புண்பட வாய்ப்பிருப்பதால், உங்கள் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன :(. வேறொரு சமயம் விளையாடலாம் :)

Anonymous said...

அலுவலகத்தில் எனக்கு பின்னால் அமர்ந்திருக்கும் உ.பி அம்மணி தானே பேசும் இயல்புடையவர்...அதாவது அவருக்கு அட்வைஸ் கொடுத்துக்கொள்வார்...இப்போது கிளம்பும்போது கூட...ரீனூ...கம்மான் யார் என்று பிளிறிக்கொண்டே செல்கிறார்...பாடல் கேட்கும்போது கூடவே பாடும் இயல்புடையவர்...ஆனால் கொஞ்சம் சத்தமாக...ஆனால் காதில் ஹெட்செட் இருப்பதால் அவர் பாடும் சத்தம் அதிகம் என்று அவருக்கே தெரியாது....நேற்றுத்தான் இந்த உண்மையை உடைத்தேன்...;)))

உங்கள் வியர்டில் புதுப்புது வழி கண்டுபிடிக்கும் மேட்டர் மட்டும் கொஞ்சம் பரிச்சயமா தோனுது...

:))))

யோசிப்பவர் said...

// பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். //

அட, இதையெல்லாம் எப்படி சொல்றதுன்னு வெட்கப்பட்டேன். நீங்க சொல்லிட்டீங்க!!!;)


//எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில்,//
இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையா?!?!

யோசிப்பவர் said...

நாமக்கல் சிபி,
//
//அப்படியா.. ம்ஹும்... பெருமூச்சுதான்! திருந்துறேன்//

திருந்தினா சரி!

:))

//


யோவ்!, நீர் திருந்தவே மாட்டீரா?!!!;)))

- யெஸ்.பாலபாரதி said...

//மிதக்கும் வெளி பிளிறினது said...
தலைப்பைப் படித்தவுடனே திருப்தியாக இருந்தது. வேறெதையும் படிக்கவில்லை.
//

ரிபீட்டே! :))

VSK said...

இதை ஒப்புக்கொள்ள இத்தனை பேரு வந்து மல்லுக்கட்ட வேண்டியிருக்கு!

பரவாயில்லை.

இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே!
:)

கவிதா | Kavitha said...

எல்லாரும் லூசு, கிறுக்கோடு நிக்கறீங்க.. நான் ஒரு படி மேலே போயிருக்கேன்.-:)))))))
என்னை ஒரு பதிவர், "சைக்கோ" ன்னு சொன்னாருங்கோ.. அப்பத்தான் எனக்கே தெரிஞ்சிது.. ஓ, உண்மையா இருக்குமோன்னு ஆராய்ச்சி செய்துக்கிட்டு இருக்கேன்.. !!!

சென்ஷி said...

//♠ யெஸ்.பாலபாரதி ♠ பிளிறினது said...
//மிதக்கும் வெளி பிளிறினது said...
தலைப்பைப் படித்தவுடனே திருப்தியாக இருந்தது. வேறெதையும் படிக்கவில்லை.
//

ரிபீட்டே! )//

டபுள் ரிப்பீட்டே :)

சென்ஷி

G.Ragavan said...

நீங்களுமா! சரி. சரி. நம்ம கூட்டணியே இப்படித்தான் இருக்கும் போல.

புத்தகத்த இப்பிடியெல்லாமா படிப்பீங்க? அதெப்படி முடியுதுங்க? நமக்கெல்லாம் புத்தகம் படிக்கிறதுங்குறது அமைதியா செய்யனும். இப்பல்லாம் வேற வழியில்லாம பஸ்லயும் படிக்கிறதுண்டு. ஆனா வீட்டுல சாஞ்சு உக்காந்துக்கிட்டு பிளாக் டீ போட்டுக்கிட்டு புத்தகத்துக்குள்ள முங்குனா...அடடடடா!

ஒங்களோட நீங்களே சண்டை போட்டீங்களா? இயக்குனர் ஷங்கர் பாத்திருந்தா அந்நியள்னு படம் எடுத்திருப்பாரு. தப்பிச்சுட்டாரு.

லிவிங் ஸ்மைல் said...

// 2. பேசுவது: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், "அட நான் கூட இப்படித் தானே!" என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். /////


நீங்க பரவாயில்ல எதுனா ஒரு பொருளோட பேசுறிங்க.. சில சமயம்( தனியா இருக்குற எல்லா சமயமும்) ஏதோ விசயம் பத்தி எதிராளி ஒருத்தரிடம் பேசும் தோரணையில் தனியாவே பேசிட்டு இருப்பேன்...


எனக்குனானே இருண்டு சார்பிலயும் இருந்து ஒரு விசயம் குறித்து தீவிர ஆலோசனி செய்து மண்டய காயவச்சிக்குவேன்..


சில சமயம் எக்ஸ்ட்ரீமா போயி, சந்தோசம்னா அர்த்தமற்ற சொற்களாக குழந்தையை கொஞ்சம் தோரணையில் பிதற்றுவேன்.

டென்சனா இருந்தா அதே பாணியில் அர்த்தமற்ற சொற்களால் என் அடிமையை திட்டுவது போல திட்டி தீத்துக்குவேன்..

வெறும் வியர்டுன்னு இத சொல்லமுடியதுன்னு தான் என் லிஸ்டில் விட்டேன். நீங்கள் நெருங்கிட்டதால் உண்மையை ஓபன் பண்ணிட்டேன்.

மற்றபடி நீங்க பிளிறிய வியர்டு சூப்பர்

சினேகிதி said...

\\உங்கள் பதிவையும் வாசித்தபிறகு சிநேகிதியின் வேண்டுகோளை நிறைவேற்றுவதென்று தீர்மானித்துவிட்டேன். எனது கிறுக்குப்பதிவை எதிர்பாருங்க மக்கா. \\

ammmani solli mullusa 4 naal aachu :-))

Pons 1,2,4&5 enakum porunthum :-)) intha wierd pathivukala vasika vasika appa ithu wierd palakam ilai pola ellarkum iruku endu solla thonuthu:-))

athuvum mukiyama intha books padikira pazakama:-)) naan en friends ellarum sernthu marathila eari veedu thaalvaratila irunthellam gogulam vasichurukiram.

Anonymous said...

உண்மை தான் பொன்ஸ், நீங்களும் என்னை போல வியர்டோ தான்..ஹி ஹி ஹி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எல்லோர் கிறுக்குத்தனத்தையும் படித்தபோது , நான் தனியாளில்லை , ஒரு பட்டாளமே இருக்கென தெம்பு வந்தது.

நாமக்கல் சிபி said...

//இயக்குனர் ஷங்கர் பாத்திருந்தா அந்நியள்னு படம் எடுத்திருப்பாரு. தப்பிச்சுட்டாரு//

நாங்களும் தப்பிச்சோம்!

ஆவி அம்மணி said...

தங்களை அழகுத் தொடருக்காகஅன்புடன் அழைக்கிறேன்

MSV Muthu said...

//முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும்
//

என்னது சைக்கிள் மிதிச்சுக்கிட்டே கூட படிப்பீங்களா?! முத்திப்போச்சுன்னு தான் அர்த்தம்! :)