Wednesday, October 04, 2006

முதல் முயற்சி






flash-இல் இது என் முதல் முயற்சி.. குடைக்குள் மழை.. இதைச் செய்ய தூண்டுதலாக இருந்தது பினாத்தலாரின் இந்தப் பதிவே.

இன்னுமொரு முயற்சி:



தமிழ் எழுத்துருக்கள் சரியாக வராததால்,
"எந்த ப்ளாட்பார்மல கீறே?"

23 comments:

நாமக்கல் சிபி said...

:))

அட! ஃபிளாஷ்லயும் கலக்குறீங்க?

G.Ragavan said...

ஆபீசுல ஒழுங்கா வரலை..வீட்டுல போய்ப் பாக்குறேன்.

மனதின் ஓசை said...

நடத்துங்க...நடத்துங்க...

ஆமா, எல்லத்துலயும் வேகம்தானா? flashல இருக்கர வேகத்த சொன்னேன்.. :-) என்ன பேசுராங்கன்னே புரிய மாட்டேங்குது..

Unknown said...

சென்னையில் மழைக் காலம் தொடங்கிருச்சுன்னு சொல்லுறீங்களா அக்கா?

முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்

மங்கை said...

பொன்ஸ்

உங்க நாய் குட்டிய பார்த்துட்டு அதே மாதிரி வேணும்னு அடம் பிடிக்கிறா என் பொண்ணு.. இப்ப இது வேறயா?

இலவசக்கொத்தனார் said...

ஒண்ண்மே புரியலை....

கைப்புள்ள said...

Flash முதல் முயற்சி நல்லாருக்கு. இன்னொரு முயற்சி தான் என்னான்னே எனக்கு தெரியலை. அந்த எடத்துல ஒரு டப்பா மட்டும் தான் தெரியுது. எனக்கு மட்டுமா...இல்ல எல்லாருக்கும் இப்படித் தானா?

Sivabalan said...

பொன்ஸ்,

நல்ல முயற்சி!!

வாழ்த்துக்கள்!!

மணியன் said...

பொன்ஸ், எனது firefox உலாவியில் ஒன்றும் தெரியவில்லை :( Select all செய்தால் எழுத்துக்கள் தெரிகின்றன. Flash pluginஎல்லாம் இருந்தும் வேலை செய்யவில்லையே ! என்னவென்று பாருங்கள்.

Boston Bala said...

முதலாவது சிறப்பாக வந்திருக்கிறது.
இரண்டாவது விளங்கவில்லை.

முதல் முயற்சிக்கு கலக்கியிருக்கீங்க!
தொடர்ந்து ஃப்ளாஷில் பின்னுவீர்கள் என்னும் நம்பிக்கையுடன்

G.Ragavan said...

அலுவலகத்தில் நெட்ஸ்கேப். அதில் ஒன்றும் வரவில்லை. வீட்டில் ஐ.ஈ. அதுல ஒழுங்கா வருது.

பொன்ஸ் கலக்குறீங்க....நல்லாயிருக்கு. இன்னும் நிறைய வெளியிட எனது பாராட்டுகள். வாழ்த்துகள்.

Muthu said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா?

துளசி கோபால் said...

படா ஜோர்:-)))))

Anonymous said...

இப்ப நீங்க ப்ளாஷ் கத்துக்கலைன்னு யார் அழுதது.. அவங்கள காட்டுங்க‌

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்திய, ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி.. இதை இத்தோட விடுவதாக இல்லை.. இன்னும் கொஞ்சம் flash, photoshop எல்லாவற்றையும் போட்டு வேலை வாங்கிவிட்டு தான் மறுவேலை :)


மணியன், கைப்பு, IE இல் முயன்று பாருங்களேன்.. மத்தபடி ஏன் பிறவற்றில் வரவில்லை என்று தெரியவில்லை.. முயற்சிகள் தொடர்ந்தால், நானே கண்டுபிடிக்கலாம் :)

மனதின் ஓசை, கொஞ்சம் வேகம் குறைக்க முயல்கிறேன். பார்ப்போம்..

பொன்ஸ்~~Poorna said...

//இப்ப நீங்க ப்ளாஷ் கத்துக்கலைன்னு யார் அழுதது.. அவங்கள காட்டுங்க‌ //
அனானி, அந்த வானம் அழுதாத் தான், இந்தப் பூமியே சிரிக்கும்.. ;)

பெருசு said...

படா ஜோர்:-)))))

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ்,

நல்ல முதல் முயற்சி. சில மேம்பாடுகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

1. முதல் ப்ளாஷில் ப்ரேம் ரேட் ரொம்ப அதிகம். கடைசி ப்ரேமில் ஒரு ஸ்டாப் கமேண்ட் கொடுத்து, மறுபடி தொடங்க ஒரு பட்டனையும் கொடுத்தால் முடிந்தது மேட்டர்.

2. தமிழில் எழுதும்போது, உங்கள் திரையில் என்ன பார்க்கிறீர்களோ அதுவே ஜேபெக் கம்ப்ரெஷனாக வரும் என்பதால், கவலையில்லை. ஆனால், Text field / variable ஆகக்கொடுத்திருந்தால், எழுத்துரு எம்பெட் செய்ய வேண்டும் அல்லது பயனரின் கணினியில் இருக்கவேண்டும். (எனக்கு எப்போது வராத எழுத்துரு பிரச்சினை கொள்கை ட்ரேக்கரில் மட்டும் வந்தது இதனால்தான்).

3. மழை பொழிவதை ஒரு மூவி க்ளிப்பாக சேமித்துக் கொண்டால், பெருமழை, அடை மழை எல்லாம் C & P தான்.

வாருங்கள், கலக்குங்கள்!

பழூர் கார்த்தி said...

ஃப்ளாஷ்ல பூந்து விளையாடிருக்கீங்க.. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் !!

***

தமிழ்டூன்ஸ் என்ற வலைப்பதிவிலும் சில கார்ட்டூன்கள் உள்ளன.

***

நானும் என் பங்குங்கு ஒரு கார்ட்டூன் முயற்சி செய்திருக்கிறேன், பாருங்கள்

வெற்றி said...

பொன்ஸ்,
இப்போது பார்க்க முடியவில்லை. பார்த்தபின் கருத்துச் சொல்கிறேன்.

மணியன் said...

இன்று IEஇல் பார்க்க முடிந்தது. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!!

தருமி said...

இதை இத்தோட விடுவதாக இல்லை..//

what cannot be spit has to be swallowed...பெரியவங்க சொல்லியிருக்காங்க'ல்லா! :(

கைப்புள்ள said...

//இன்று IEஇல் பார்க்க முடிந்தது. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!!//

அட கடவுளே! எனக்கு IEயில் தெரியலைன்னு இப்பத் தான் நெருப்பு நரியைப் பதிவிறக்கம் செஞ்சுப் பாத்தேன். முதல் படம் எளிமையாப் புரிஞ்சுது. ரெண்டாவது நீங்க எழுதிருக்குறதை வச்சித் தான் புரிஞ்சிக்க முடியுது...படத்தைப் பாத்து புரிஞ்சிக்க கஷ்டமா இருக்கு.