Friday, June 02, 2006

ஒற்றைச் சிறகில் நின்ற மயிலார்

சோழிங்க நல்லூர்

மே 15, 2006



சென்னையை அடுத்த சோழிங்க நல்லூரில் பிரத்யங்கரா தேவி கோயில் மிகப் பிரசித்தம். பிரத்யங்கரா மற்றுமன்றி சித்திவினாயகர், முச்சந்தி வினாயகர், ஆக்சென்சர் அம்மன் (அதாங்க அந்தக் கம்பனி வாசல்ல பந்தல் போட்டு வச்சிருக்காங்களே) முதலான சிலபல சக்திவாய்ந்த தெய்வங்களும் உள்ளன.



இப்படிப் பட்ட ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த தலத்தில் தான், ('தமிழ்மண'க்கும் நேரத்தில் மட்டும்) செய்யும் தொழிலே தெய்வம் என்னும் 'கொள்கை'ப் பிடிப்புடைய பொன்ஸின் அலுவலகமும் உள்ளது. இவ்வாறான வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தலத்திற்கு, தமிழ்ப் பதிவுலகின் பிஞ்சில் பழுத்த ஆன்மீகச் செம்மலும், தமது மர்மமான மயிலாருடன் பல்வேறு புண்ணியஸ்தல யாத்திரைகளை அடிக்கடி மேற்கொள்ளும் ஜி.ரா எனப்படும் கோ.ராகவன் சமீபத்தில் விஜயம் செய்தது, பதிவுலகில் பலரும் அறிந்ததே..



'கல்கி' வார இதழில் கைப்புள்ள கட்சி பற்றி வெளிவந்த பொன்னான நாளில், வ.வா.சவின் மின்னல் வேக வளர்ச்சியையும் தலைவர் கைப்புள்ளையையும் பாராட்டவேண்டும் என்று ஜி.ராவின் மயிலார் ஒற்றைச் சிறகை மட்டும் விரித்து அடம்பிடித்த காரணத்தால் வேறு வழியின்றி ப.ம.கவின் பெங்களூர் கிளை கொபசெ ஜி.ராவும், வ.வா.ச.வின் அனைத்திந்திய கொபசெ பொன்ஸை அவரது அலுவலகத்திலேயே (அட, அலுவலக கேன்டீனிலேயே) சென்று சந்தித்தார்.



பழைய ஆறிப்போன செய்தியாக இருந்தாலும், வலையுலக அன்பர்களின் வேண்டுகோளுக்காகவும்(?!), (கனவு) கண்டதை எல்லாம் சந்திப்பு என்று எழுதும் சிலரின்(சிபியின் அல்ல) கொட்டத்தை அடக்கவும், மீண்டும் பழைய நினைவுகளைத் தூசி தட்டி, உங்கள் பார்வைக்கு:* ராகவன் அலுவலகத்தில் வ.வா.சவைச் சேர்ந்த 'புகழ் பெற்ற' மக்களை உள்ளே விடுவதில்லை என்னும் காரணத்தால், சங்கத்தின் கொள்கைகளைப் போன்ற பரந்த மனதும், நிறைந்த இடமும் கொண்ட பொன்ஸின் அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

  • ராகவன் வழக்கம் போல, இதுவரை வலைபதிவுகளில் இடம்பெற்ற எந்தப் புகைப்படத்துடனும் ஒத்துப் போகாத முற்றிலும் புதிய தோற்றத்தில் வந்திருந்தார்.. அடையாளம் தெரியாமல் "திரு திருவென" முழித்து நின்ற பொன்ஸை எப்படியோ (திரு திரு ?!) அவரே தெரிந்துகொண்டார்

  • மதிய உணவு வேளையாதலால் கிட்டத் தட்ட 500 பேர் பங்கு கொண்ட இந்தக் கூட்டத்தில், ஜி.ரா, பொன்ஸைத் தவிர மற்றவர்களை வலை பதிவர்களுக்கு மட்டுமல்லாது, பொன்ஸுக்கே (அதென்ன 'கே'? அட, எங்க கம்பனியாச்சே!) வேறு யாரையும் தெரியாது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது

  • ராகவன் புதிய தொழிற்நுட்பத்தைச் சேர்ந்த புதுமாதிரியான டிபன் பாக்ஸ் வைத்திருக்கிறார். ப்ளாஸ்டிக்கால் ஆன (ப்ளாஸ்டிக் தானே ஜி.ரா?) அந்த மூன்றடுக்கு சிற்றுண்டி டப்பாவைத் திறக்கும் விதமே புதுமை.. ஒவ்வொரு அடுக்கும் திருகுக் குழல்களோடு அடுத்த அடுக்கின் மேல் பொருந்துவதால், உள்ளே எடுத்து வரப்படும் திரவ உணவு எதுவும் வெளியே சிந்துவதில்லை. புதுமையான அந்த சிற்றுண்டி (பேருண்டி) டப்பாவைச் சற்று உற்று பார்த்துவிட்டு அதன் பின் தான் சொந்த டப்பாவைத் திறக்கவே முடிந்தது.

  • அத்தனை முன்னேற்பாடு இல்லாத காரணத்தால் மெனு பெரிய விதத்தில் சிறப்பாக இல்லை. கூட்டணி பற்றியும் பேச விழைந்ததால் ஜி.ரா மட்டும் ஏதோ ஒரு கூட்டை எடுத்து வந்ததாக நினைவு.. இங்கிருந்து அந்த உணவைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், பொன்ஸ் விடும் பெருமூச்சுகள் கணினித் திரையைப் பாழாக்கிவிட வாய்ப்பிருப்பதால், ஓவர் டூ ஜி.ரா. நியாபகம் இருந்தா எடுத்து விடுங்க..

  • அதிக பட்சம் ஒரு மணி நேரமே நீடித்த இந்தச் சந்திப்பின்போது,
    • மால்கேட்டிலிருந்து மெயிலே வராத போது, கைப்புள்ள கல்கியில் வந்தது எப்படி?

    • இளவஞ்சி வாத்தியாரின் எந்தெந்த வகுப்புகளுக்கு யார் யார் போவது, எந்தெந்த வகுப்புகளை யார் யார் கட்டடிப்பது?

    • ராகவன் அலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள் காய்ந்து விட்டனவா?

    • அதே நேரத்தில் சென்னையில் இருந்த தருமியைச் சந்திக்க முடியுமா? (கடைசி வரை முடியவில்லை, ஜூனியர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல் 'தருமி ரொம்ப பிஸி..')
    • வ.வா.ச., ப.ம.க நல்லிணக்கக் கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


    என்பது போன்ற நாட்டுக்குத் 'தேவையான' முக்கியமான சங்கதிகள் விவாதிக்கப்பட்டன. மேலும் பல பேசப் பட்டிருந்தாலும், மேலான விஷயமான மெனுவே மறந்து போனதால், மற்ற சங்கதிகள் சுத்தமாக ப்ளாங்க்!! ராகவனுக்கோ மயிலாருக்கோ நினைவிருந்தால் சொல்லட்டும்.



சாப்பாடு முடிந்ததும், அலுவலக வளாகத்தை அதிகம் சுற்றாமலேயே பார்த்துவிட்டு ஜி.ராவும் மயிலும் விடைபெற்றுச் சென்றனர். (அப்பாடா.. ஒருவழியா எழுதிட்டேன் ஜி.ரா. இனியும் நீங்க என்னை மிரட்ட முடியாது!!)

42 comments:

நாமக்கல் சிபி said...

//(கனவு) கண்டதை எல்லாம் சந்திப்பு என்று எழுதும் சிலரின்(சிபியின் அல்ல) கொட்டத்தை அடக்கவும்//

:-)))))))

துளசி கோபால் said...

???????????????????

பொன்ஸ்~~Poorna said...

சிரிக்காதீங்க சிபி... நான் ரொம்ப்ப்ப கோபத்துல இருக்கேன்..

கனவு.. நீங்க வேறயா?!! போட்டோ வேற பார்த்து நான் பெருமூச்சு விடணுமா?!!ம்ஹும்

குமரனுக்கும் (புன்)சிரிப்பா இருக்கு நம்ம நிலைமை :)

என்னக்கா? ஒரு 15 நாள் முந்தி இந்தியாவில் நடந்தது.. கொஞ்சம் லேட்டாய்டுச்சு :)

VSK said...

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சந்திப்பை, மறக்காமல் வரலாற்றில் பதிவு செய்த [மிரட்டப்பட்ட பின்னால் என்று கூடவே சேர்த்துக்கணுமோ!!] பொன்ஸுக்கு நன்றி!!

Chellamuthu Kuppusamy said...

சோழங்கநல்லூர், சோழிங்கநல்லூராகி, ஷோலிங்கநல்லூராகி இன்று சோளிங்க நல்லூராகவும் மாறிவிட்டது. :)

நன்மனம் said...

// குமரன் (Kumaran) said...
:-)

துளசி கோபால் said...
??????????????????? //

Already posted on my behalf but still registering my......

:-)

Udhayakumar said...

//ராகவன் அலுவலகத்தில் வ.வா.சவைச் சேர்ந்த 'புகழ் பெற்ற' மக்களை உள்ளே விடுவதில்லை என்னும் காரணத்தால், சங்கத்தின் கொள்கைகளைப் போன்ற பரந்த மனதும், நிறைந்த இடமும் கொண்ட பொன்ஸின் அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
//

பொன்ஸ், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தீவிரவாதிகளும் வ.வா.ச வும் வேறல்ல என்பதால்தான் இந்த ஏற்பாடு. ஆனால் தீவிரவாதிகளை சனி மற்றும் ஞாயிறு நாட்களில் அனுமதிப்போம்.

இப்படி எல்லாம் சொன்னா எங்க இமேஜ் என்ன ஆகுறது???? இருங்க, நான் எங்க வாத்தி இளவஞ்சி, ஜிரா எல்லோரையும் வரச் சொல்லி உங்களை கவனிச்சுக்கறேன்.

Unknown said...

//சிரிக்காதீங்க சிபி... நான் ரொம்ப்ப்ப கோபத்துல இருக்கேன்..//

:-(

தருமி said...

பிஸியா இருந்தது தருமியா, பயணத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்த பிகிலா என்பதைக் கனம் வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன்.

ரிஷி said...

Sapadu sandippu appadinu heading vachi irukkalam :)

G.Ragavan said...

// செய்யும் தொழிலே தெய்வம் என்னும் 'கொள்கை'ப் பிடிப்புடைய பொன்ஸின் அலுவலகமும் உள்ளது. //

முருகா...இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை.

// :* ராகவன் அலுவலகத்தில் வ.வா.சவைச் சேர்ந்த 'புகழ் பெற்ற' மக்களை உள்ளே விடுவதில்லை என்னும் காரணத்தால், சங்கத்தின் கொள்கைகளைப் போன்ற பரந்த மனதும், நிறைந்த இடமும் கொண்ட பொன்ஸின் அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. //

அது என்ன புகழ் என்று சொல்லும் துணிவுண்டா?

என்னை உங்கள் அலுவலகத்தினர் கண்டதும் வரவேற்றார்கள். பொன்ஸ் என்றதுமே அந்த மரியாதையில் முக்காலே அரை வீசம் குறைந்து போனதை ஏன் எழுதவில்லை?

G.Ragavan said...

// * ராகவன் வழக்கம் போல, இதுவரை வலைபதிவுகளில் இடம்பெற்ற எந்தப் புகைப்படத்துடனும் ஒத்துப் போகாத முற்றிலும் புதிய தோற்றத்தில் வந்திருந்தார்.. அடையாளம் தெரியாமல் "திரு திருவென" முழித்து நின்ற பொன்ஸை எப்படியோ (திரு திரு ?!) அவரே தெரிந்துகொண்டார் //

தலையில் கனமில்லாதவர்களைக் கண்டு கொள்வது எப்படிக் கடினமோ...அதுபோல தலையில் கனமுள்ளவர்களைக் கண்டுகொள்வது மிக எளிது என்று தெருவள்ளுவர் சொல்லியிருப்பது தெரியாதத.

தலைக்கனம் காணார் காணற்க கண்டார்
தலைக்கனம் உடைய அவர்

G.Ragavan said...

// * ராகவன் புதிய தொழிற்நுட்பத்தைச் சேர்ந்த புதுமாதிரியான டிபன் பாக்ஸ் வைத்திருக்கிறார். ப்ளாஸ்டிக்கால் ஆன (ப்ளாஸ்டிக் தானே ஜி.ரா?) அந்த மூன்றடுக்கு சிற்றுண்டி டப்பாவைத் திறக்கும் விதமே புதுமை.. ஒவ்வொரு அடுக்கும் திருகுக் குழல்களோடு அடுத்த அடுக்கின் மேல் பொருந்துவதால், உள்ளே எடுத்து வரப்படும் திரவ உணவு எதுவும் வெளியே சிந்துவதில்லை. புதுமையான அந்த சிற்றுண்டி (பேருண்டி) டப்பாவைச் சற்று உற்று பார்த்துவிட்டு அதன் பின் தான் சொந்த டப்பாவைத் திறக்கவே முடிந்தது. //

we are techno savys. எப்பவும் மிகப்புதுமையான தரமான பொருட்களைத்தான் பயன்படுத்துவோம். அப்பத்தான் அந்தப் பொருட்களுக்கும் பெருமை.

வெளியில் பிளாஸ்டிக் இருந்தாலும் உள்பக்கம் எவர்சில்வர். உள்ள என்ன இருந்ததுன்னும் நினைவு படுத்திச் சொல்லலாமே.

மனதின் ஓசை said...

யக்கோவ், அந்த ஜார்ஜு புஷ்ஷ சங்கம் சம்பந்தமா சந்திச்சி பேசினத எப்பக்கா பதிவா போடப்பொறீங்க?

G.Ragavan said...

// மேலும் பல பேசப் பட்டிருந்தாலும், மேலான விஷயமான மெனுவே மறந்து போனதால், மற்ற சங்கதிகள் சுத்தமாக ப்ளாங்க்!! ராகவனுக்கோ மயிலாருக்கோ நினைவிருந்தால் சொல்லட்டும். //

மயிலார் ரொம்பக் கோவமா இருக்காரு. ஒத்தச் சிறகுன்னு சொல்லீட்டீங்களா...அதான். ஒரு சிறகப் பிடுங்குனதோட இல்லாம ஒத்தச் சிறகுன்னு சொல்ல பொன்சுக்கு என்ன துணிச்சல்னு கேட்டுக்கிட்டு இருக்காரு. அனேகமா இன்னைக்கு நைட்டு பாஸ்போட்டு விசா எதுவுமில்லமலே அமெரிக்கவுக்குப் போற திட்டத்துல இருக்காரு. மன்னிப்பு கேட்டு வேண்டியதக் குடுத்துச் சமாதனஞ் செஞ்சுக்கிருங்க.

வல்லிசிம்ஹன் said...

பொன்ஸ், எப்போ திரும்பி வரீங்க?சின்னப் பசங்க எல்லாம் சேர்ந்துப்பாங்க சரிதான்.நம்ம கிட்டே சொன்னால் ஒரு ஓரமா நின்னு என்ன பேசராங்கனு பாக்கலாமில்லீயா? ப்ளாக் வேர்ல்டில என்னதான் நடக்கிறதுன்னு தெரியும். நீங்க பொயிருக்கிற ஊரில் சரவணபவன், சஙீதா எல்லாம் கிடையாதா?:-)))

இலவசக்கொத்தனார் said...

//தமிழ்ப் பதிவுலகின் பிஞ்சில் பழுத்த ஆன்மீகச் செம்மலும்//

இந்த உள்குத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

//ராகவன் அலுவலகத்தில் வ.வா.சவைச் சேர்ந்த 'புகழ் பெற்ற' மக்களை உள்ளே விடுவதில்லை என்னும் காரணத்தால்,//

in famous list என்பதற்கும் infamous list என்பதற்கும் இருக்கும் ஒரு கேப்பில் லாரி ஓட்ட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

//ராகவன் புதிய தொழிற்நுட்பத்தைச் சேர்ந்த புதுமாதிரியான டிபன் பாக்ஸ் வைத்திருக்கிறார்.//

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். வந்தாரை அவர்தம் சாப்பாடு கொண்டு வரச்சொல்லி அதையும் பொறாமையாய் பார்க்கும் பொன்ஸகம்.... இப்போ் சோத்துக்கு செத்ததால இப்படிப் பார்த்தா சரி. அப்போ என்ன கேடு?

ஆமாம் உங்க ஆபிஸுக்கெல்லாம் வந்தா நாங்களே சாப்பாடெல்லாம் எடுத்துக்கிட்டு வரணமா? என்னடா அக்குறும்பு இது...

Geetha Sambasivam said...

அது சரி உங்க வீட்டுக்கு வந்தால் கூட நாங்க சாப்பாடு எடுத்துக்கிட்டுத்தான் வரணும் போல இருக்கு. நல்ல விருந்தோம்பல்ப்பா! புதரகத்திலே எப்படி?

Geetha Sambasivam said...

இங்கே வரவரைக்கும் சாப்பாடு பத்தியே கனவு, பதிவு எல்லாமா? Home Sweet Home.

பொன்ஸ்~~Poorna said...

எல்லாத்துக்கும் பதில் இருக்கு என்கிட்ட.. இருந்தாலும் மாலை வரை பொறுங்க..

கம்பனி மானத்தையும், தாய்நாட்டு மானத்தையும், சங்க மானத்தையும் காப்பாத்த வேண்டி இருக்கு!! வாரேன்

நாகை சிவா said...

கொத்துஸ் சொல்லவது போல் இது கொஞ்சம் கூட சரி இல்லங்க பொன்ஸ்.
உங்களை காண வந்தவருக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுக்க கூடாதா.........

Anonymous said...

ஓ!!!நடக்கட்டும்..நடக்கட்டும்..

Sud Gopal said...

ஓ!!!நடக்கட்டும்..நடக்கட்டும்..

நாகை சிவா said...

ஏனுங்க 1996ல் அவங்கள பாத்திங்கள, அதாங்க அவங்க....
ஆங் அவங்களே தான்,
அந்த சந்திப்பை எப்ப எழுத போறிங்க....

அந்த சந்திப்பை பதிவில் காணும் ஆவலுடன் இருக்கும் இன்னும் பழுக்காத ஆன்மிக செம்மல் -
- சூடானில் இருந்து நாகை சிவா

நாகை சிவா said...

சரிங்க.... நீங்க சொல்லுறதுனால நாம் பொறுமையாக இருக்கேன். இல்லாட்டி இன்னும் பத்து பின்னூட்டங்கள் இடலாம் என்று இருந்தேன். அது சரி, எந்த மாலை, ISTயா, CSTயா, இல்ல EST...

கீதாக்கா! அவங்க ஏதோ தெரியாம வாய விட்டுடாங்க. என்ன சொல்லி சமாளிக்கலாம் என யோசிக்க மாலை வரை நேரம் கேட்கிறார். நம்ம மகளிரணி தலைவிக்கு அதுக் கூட கொடுக்க மாட்டோமா.... அதனால் அவர்கள் பதில் சொல்லும் வரை காத்து இருப்போம்.

கைப்புள்ள said...

//மால்கேட்டிலிருந்து மெயிலே வராத போது, கைப்புள்ள கல்கியில் வந்தது எப்படி?//

எல்லாம் எங்க திருவிளையாடல் தான்னு சொல்ல வேண்டியது தானே பொன்ஸ்?

பொன்ஸ்~~Poorna said...

எஸ்கே, வரலாற்றுச் 'சிரிப்பு'மிக்கன்னு சொல்லாத வரைக்கும் சரிதான் :)

குப்பு, ஊர்க்காரங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.. மாத்திடறேன்.. இதே மாதிரி நம்ம ஒரு சந்திப்பு போட்டுரணும்.. அதே கான்டீன்ல :)

நன்மனம் = அட்டென்டென்ஸ் நோடட்

//நான் எங்க வாத்தி இளவஞ்சி, ஜிரா எல்லோரையும் வரச் சொல்லி உங்களை கவனிச்சுக்கறேன். //
உதை,.. சாரி, உதய், என்ன கவனிக்கப் போறீங்க? நான் தான் உங்க ஜி.ராவையே கவனிச்சு அனுப்ப வேண்டியதாப் போச்சு!! உள்ளவே விட மாட்டேங்கறாங்க.. கவனிப்பு?!!! ம்ஹும்

பொன்ஸ்~~Poorna said...

//எங்க ஊரு வழிய திரும்பி இந்தியா போனா நிச்சயம் ஒரு குரல் குடுங்க. //
கனவு, உங்க ஊரு எதுன்னு மொதல்ல சொல்லுங்க.. ட்ரிப்பை மாத்திடுவோம்

தேவ், அக்கா மேல பாசமான ஆளு நீ ஒருத்தன் தான்.. கோபத்துல கூட பங்கெடுத்துக்கிடறியேப்பா!!

//பிஸியா இருந்தது தருமியா, பயணத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்த பிகிலா என்பதைக் கனம் வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன். //
அப்படின்னா, எங்கும் பயணம் செல்லாத ஜி.ராவை ஏன் பார்க்கலை?!! இதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ரிஷி, சாப்பாடைப் பத்தி எழுதவே இல்லையே?!! பொதுவா இங்க சந்திப்புன்னா சாப்பாடுதான் முதல்ல எழுதுவாங்க!!

பொன்ஸ்~~Poorna said...

வாங்க வாங்க ராகவன், இந்தப் பதிவுக்கு நீங்க தான் கோ ஆத்தரா இருந்திருக்கணும்.. நீங்களே இத்தனை தாமதமா வந்திருக்கீங்க(அன்னிக்கு சாப்பிட வந்த மாதிரியே ;))!!

நல்லா நாலு பின்னூட்டம் போட்ட்ருக்கீங்க!! ஏற்கனவே சங்கத்துல கேட்ட கேள்விகளுக்கே நான் இன்னும் பதில் சொல்லலை.. இதுல நீங்க வேறயா?
உங்க திருக்குறள் கூட tech savvyயா இருக்கு!!

மயிலோட தகராறா?!!எனக்கா?!! அது வேறயா?!! கடவுளே.. மயில் கிட்ட சொல்லுங்க. இங்கேர்ந்து நாலு இறகா வாங்கி அனுப்பறேன்னு..

அப்புறம் உங்க டிபன் பாக்ஸ்ல இருந்தது:
1. தாராளமா சாதம்
2. தயிர்
3. பீன்ஸோ, அவரையோ பொரியல் (எதுன்னு சொல்லுங்க, மறந்துட்டேன்.. ஹி..ஹி)
4. கேரட் பீன்ஸ் கூட்டு..

சரியா?ஏதாச்சும் விட்டுப் போச்சா? இப்போ உங்க சான்ஸ், நான் என்ன எடுத்து வந்தேன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

பொன்ஸ்~~Poorna said...

மனதின் ஓசை, உங்களுக்குத் தெரியலைங்க.. புஷ்ஷைப் பார்க்கிறது எல்லாம் சுலபம்.. ராகவனைப் பார்க்கிறது தான் ரொம்ப கஷ்டம் :) அதான்.. இத்தனை பெரிய கதை :)

வல்லி, இங்க ஒண்ணும் இல்லீங்க.. சரவணன், சங்கீதான்னு ரெண்டு பேர் இருக்காங்க.. ஆனா அவங்களுக்கும் சமையல் தெரியாது :)

//அது சரி உங்க வீட்டுக்கு வந்தால் கூட நாங்க சாப்பாடு எடுத்துக்கிட்டுத்தான் வரணும் போல இருக்கு. //
கீதாக்கா, ஜி.ராவோட அம்மா சாப்பாடு கொடுத்து அனுப்பித்தான் ஆவேன்னு ஒரே அடம்.. என்ன இருந்தாலும் கொஞ்ச நாள் தான் வீட்ல இருப்பாரு, வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதை நான் தடுத்தா மாதிரி இருக்கக் கூடாதில்லையா?!! அதிலும், எங்க கம்பனி சாப்பாடு, எனக்கே அவ்வளவா பிடிக்காது.. அதான் :)

பொன்ஸ்~~Poorna said...

//இந்த உள்குத்தை வன்மையாக கண்டிக்கிறேன். //

உங்க பையன் ரொம்ப பாவம் கொத்ஸ்.. எல்லாத்தையும் கண்டிக்கறீங்க!!

//in famous list என்பதற்கும் infamous list என்பதற்கும் இருக்கும் ஒரு கேப்பில் லாரி ஓட்ட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். //
அப்போ ட்ராக்டர்??

//வந்தாரை அவர்தம் சாப்பாடு கொண்டு வரச்சொல்லி அதையும் பொறாமையாய் பார்க்கும் பொன்ஸகம்.... இப்போ் சோத்துக்கு செத்ததால இப்படிப் பார்த்தா சரி. அப்போ என்ன கேடு? //
ஏற்கனவே சொல்லிட்டேன்.. மேல ஸ்க்ரோல் பண்ணிப் பாருங்க!!

//ஆமாம் உங்க ஆபிஸுக்கெல்லாம் வந்தா நாங்களே சாப்பாடெல்லாம் எடுத்துக்கிட்டு வரணமா? என்னடா அக்குறும்பு இது... //
நல்ல சாப்பாடு வேணும்னா நீங்க தான் எடுத்து வரணும் ;) :)

Unknown said...

அதெல்லாம் சரி...பில்லுக்கு பணம் கொடுத்தது யார்?மேலும் இதை அகில இந்திய சர்வதேச வலைபதிவர் சந்திப்பு என்றல்லவா தலைப்பு கொடுத்திருக்க வேண்டும்?

பொன்ஸ்~~Poorna said...

சிவா, ஒண்ணுவிடாம, எல்லார் கேள்வியையும் வழி மொழிஞ்சிருக்கீங்க.. பதில் சொல்லிட்டேன்.. போய்ப் பார்த்துக்குங்க!!

சுதர்சன், என்னங்க நடக்கட்டும்? மேல இருக்கிற sudgயும் நீங்க தானே?

//எல்லாம் எங்க திருவிளையாடல் தான்னு சொல்ல வேண்டியது தானே பொன்ஸ்? //
நான் என்னண்ணே பண்ணேன்? எல்லாம் தேவ் கிட்ட கேட்க வேண்டியது!!

நாகை சிவா said...

அந்த 1996ல் நடந்த சந்திப்பை பற்றி கேட்டு இருந்தேனே.........

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்த வம்பே வேண்டாம் என்று நான் பெங்களுர் சென்றபோது. திரு.ஜி.ரா அவர்களை நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வரும்படி கேட்டேன்.அவரும் பெரிய மனதுடன் வந்து என்னுடன் இரவு உணவு அருந்திவிட்டு என்னுடன் பேசிவிட்டு சென்றார்.அவரைப் பார்ப்பதா கடினம். நம்பமுடியவில்லை!.இல்லை! எப்படியோ கனவுலாயாவது சந்தேஷப்பட்டால் சரி. தி ரா ச

பொன்ஸ்~~Poorna said...

//அதெல்லாம் சரி...பில்லுக்கு பணம் கொடுத்தது யார்?.//
செல்வன், பில்லா, நம்ம தான் புத்திசாலியாச்சே.. அவங்கவங்க வீட்டுச் சாப்பாடு தான்.. பில் எல்லாம் இல்லை :)

//மேலும் இதை அகில இந்திய சர்வதேச வலைபதிவர் சந்திப்பு என்றல்லவா தலைப்பு கொடுத்திருக்க வேண்டும்? //
அது சரி.. சர்வ தேசமா ஆகலியே.. நான் அங்க சென்னைல தானே இருந்தேன் அப்போ!!!

//அந்த 1996ல் நடந்த சந்திப்பை பற்றி கேட்டு இருந்தேனே......... //
அது சரி சிவா.. 1996 பத்தி இப்போவே எழுதிட முடியுமா.. ;) கொஞ்சம் நாள் போகட்டும்!!

//அவரைப் பார்ப்பதா கடினம். நம்பமுடியவில்லை! எப்படியோ கனவுலாயாவது சந்தேஷப்பட்டால் சரி. //
தி ரா ச, எனக்குக் குழப்பமா இருக்குங்க.. இது நிஜமா நடந்ததுதான்.. கனவெல்லாம் இல்லை.. ஜி.ரா நிஜமாவே ரொம்ப பிஸி தான்.. இல்லைன்னா, இதுக்கு அப்புறம் நடந்த சென்னை வலைபதிவாளர் சந்திப்புக்கும் போயிருப்பார் தானே?!!

dondu(#11168674346665545885) said...

அது இருக்கட்டும் பொன்ஸ், நீங்களாவது சென்னை வலைப்பதிவாளர் மகாநாட்டுக்கு வந்திருக்கலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன்ஸ்~~Poorna said...

டோண்டு சார்,
இப்போ நான் சென்னைல இல்லை சார்.. உங்கள் அட்வைஸ் பதிவுக்கு முன்னேயே இங்கே அமெரிக்கா அனுப்பி விட்டார்கள்.. இது ஒரு பதினைந்து நாள் முன்னாடி நடந்தது.. முடிந்தால் அடுத்த முறை சந்திப்போம்.. கண்டிப்பாக வருகிறேன்..:)

Chellamuthu Kuppusamy said...

மயிலார் எத்தனை நாள் தான் ஒற்றைச் சிறகிலேயே நின்று கொண்டிருப்பார்? சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க பொன்ஸ்.

-குப்புசாமி செல்லமுத்து

பொன்ஸ்~~Poorna said...

குப்பு, பதிவு போட்டா எதுக்கு இப்போ ஊர் சுத்தி பார்க்காம பதிவுல சுத்திகிட்டு இருக்கேன்னு சிலர் கேட்கிறாங்க :)

இருக்கட்டும் பார்க்கலாம்.. உங்களுக்காக ஒண்ணு போடறேன்.. இப்போதைக்கு தருமி எனக்காக ஒரு பதிவு போட்டிருக்காரு.. அதுக்கு கோ ஹோஸ்டா என்னோட ஆதரவைக் கொடுத்துகிட்டு இருக்கேன்.. இதையும் ஒரு முறை பாருங்க :)

ilavanji said...

//ராகவன் அலுவலகத்தில் வ.வா.சவைச் சேர்ந்த 'புகழ் பெற்ற' மக்களை உள்ளே விடுவதில்லை என்னும் காரணத்தால்,//

ஜீரா அலுவலகத்தில் கட்டதுரைகள் அதிகம் எனக்கேள்வி!

அதனால வ.வா.ச முக்கிய பிரதிநியான உங்களுக்கு அடிவிழாம காப்பாற்ற முயன்ற அவரது நல்லெண்ணத்தினை புரிஞ்சுக்காம இப்படியா செய்திகளை திரித்து வெளிவிடுவது?!

பொன்ஸ்~~Poorna said...

பதிவிலும், பின்னூட்டத்திலும் பேர் சொல்லிக் கூப்பிட்ட பின்னும் இவ்வளவு லேட்டா வர்றீங்களே வாத்தி.. இருந்தாலும் பரவாயில்லை.. தீவிர வாதிகள் உள்ள தான் இருக்காங்கன்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி.. அப்படியே உதய் கிட்ட சொல்லிடுங்க :)