Thursday, June 08, 2006

நெற்றிக்கண் திறப்பினும்...

எப்போ பார்த்தாலும் விளையாட்டுத்தனமாவே யோசிக்குதே இந்தப் பொண்ணுன்னு நினைக்கிறவங்களுக்கு:

தருமியோட "நான் ஏன் மதம் மாறினேன்" ஏழு பாகமும் படிச்சதும், நல்லா ரெஸ்ட் எடுத்து தூங்கி கிட்டு இருந்த மூளை(?! அட நம்புங்க.. இங்கயும் கொஞ்சமே கொஞ்சம் இருக்கு :)) நான் என்ன சொல்லியும் கேட்காம எழும்பி டக்குனு உட்கார்ந்திடுச்சு.. எவ்வளவு சொல்லியும் சமாதானமாகாம நம்ம சிறுமூளையும் பெருமூளையும் ஓவர் டைம் போட்டதுல, தருமி இன்னோரு பார்ட் மதம் மாறியதை விளக்கும் அளவுக்கு தொல்லையாய்டுச்சு..

ஏன் பதிவு போடலைன்னு கேட்கும் நூற்றுக் கணக்கான மகா ஜனங்களுக்கு (எல்லாம் ஒரு பில்டப் தான் :)) ஒரே ஒருத்தர் தான் தப்பித் தவறி கேட்டுட்டாரு):
இந்த பதிவைப் போய் பாருங்க.. தருமி வீட்ல கொஞ்ச நாளைக்கு நம்மளும் கோ ஹோஸ்ட்..

தர்ம அடி கொடுக்கணும்னு நினைக்கிறவங்களும் அங்கயே வந்து நல்லா போடலாம் :)[பிகு: வ.வா.சங்கத்துக்கும் இந்த தர்ம அடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சங்கத்து மக்கள் அக்காவுக்கு என்னாச்சுன்னு பயந்து போய் வேப்பிலை அடிக்க பூசாரிகளை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் :)]

19 comments:

பொன்ஸ்~~Poorna said...

ப்ளாக்கர் தொல்லை பெரிய தொல்லையா போய்டுச்சு.. ஒரு விளம்பரப் பதிவு போட ஒரு மணி நேரமா?!!! ம்ஹும்.

வவ்வால் said...

:-))

பொன்ஸ்~~Poorna said...

//தர்ம அடி கொடுக்கணும்னு நினைக்கிறவங்களும் அங்கயே வந்து நல்லா போடலாம் //
இந்த லைனே உங்களை நினைச்சு தான் வவ்வால் போட்டேன்.. கரெக்டா வந்துட்டீங்க :)

ப்ளாக்கர் பிரச்சனை.. உங்க பின்னூட்டம் விரைவில் வெளிவரும். (மத்தவங்களுக்கு, ரொம்ப எதிர்பார்க்காதீங்க.. வவ்வால் வெறும் அட்டென்டென்ஸ் தான் கொடுத்தார் :)

வவ்வால் said...

:-))

பெருசு said...

ஓஹோ விசயம் அப்பிடிப்போகுதா.

என்னடா இந்தப்பொண்ணு சின்னப்பிள்ளத்தனமா
என்னமோ சொல்லுதுன்னு பாத்தா,

தரும மோயிது தருமி யிங்கு
கரும மேகண் ணாய்ச டங்கு
பலவு டனேபொ ன்னையு மிங்கு
கலந் ததுவே மதம்.

உள்ளேனக்கா தங்கங்கா

பெருசு said...

ஓஹோ விசயம் அப்பிடிப்போகுதா.

என்னடா இந்தப்பொண்ணு சின்னப்பிள்ளத்தனமா
என்னமோ சொல்லுதுன்னு பாத்தா,

தரும மோயிது தருமி யிங்கு
கரும மேகண் ணாய்ச டங்கு
பலவு டனேபொ ன்னையு மிங்கு
கலந் ததுவே மதம்.

உள்ளேனக்கா தங்கங்கா.

குமரன் (Kumaran) said...

I am the present.

மொத்துக மொத்தமாய் மத்தினால் மொத்தினால்
மொத்தமும் முத்தாய் விடும்.

பொன்ஸ்~~Poorna said...

பெருசு, குமரன், எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போலிருக்கு.. இருக்கட்டும்! நல்ல வேளை தருமி வீட்ல பத்திரமா இருக்கேன்.. இங்க வச்சி பேசிருந்தா அவ்வளவு தான் போலிருக்கு :)

தல சொல்றா மாதிரி பேச்சு பேச்சா இருக்கணும்.. ஆமாம் சொல்லிட்டேன் :)

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

////தர்ம அடி கொடுக்கணும்னு நினைக்கிறவங்களும் அங்கயே வந்து நல்லா போடலாம் //
இந்த லைனே உங்களை நினைச்சு தான் வவ்வால் போட்டேன்.. கரெக்டா வந்துட்டீங்க :)//

நீங்க உண்மையிலே வ.வா.ச வோட கொ.ப.செ தான் ஒத்துகிறேன் ,உங்க பேச்ச கேட்டு தரும அடி போடலாம்னு அங்கே போய் நான் கைய வைத்தேனு வச்சுகுங்க எனக்கு தான் தரும அடி விழும் ,எல்லாம் கோவகார கோவால இருக்காங்க!

இப்படி உசுப்பி விட்டு உசுப்பி விட்டே தான் உடம்ப ரணகளம் ஆக்கிடாங்கப்பா.... :-))

பொன்ஸ்~~Poorna said...

வவ்வாலுக்குப் பயமா? நம்பவே முடியலை..

சும்மா தைரியமா அடிச்சு ஆடுங்க.. நம்ம வீடு மாதிரி தான் :) எல்லாம் நம்மாளுங்க தான் :)

துளசி கோபால் said...

பொன்ஸ்,

இப்பத்தான் எல்லாம் படிச்சேன்(!)

தருமி பதிவுலே ஆழமான(?) பின்னூட்டமெல்லாம் நல்லாப் போட்டுருக்கீங்க.

மதத்தைப் பொறுத்தவரை எனக்கு ஒண்ணுமே சொல்றதுக்கு இல்லை.
இப்ப நம்ம வலைப்பதிவாளர்கள் கிட்டத்தட்ட 1000 பேர் இருக்கோம்.
எல்லாரோடயும் எல்லாத்துலேயும் ஒத்துப் போக முடியுதா?
அதுக்காக நாமெல்லாம் நண்பர்கள் இல்லைன்னு ஆயிருதா?

மனுஷன் சிந்திக்கத் தெரிந்த மிருகம்.
இப்படிச் சொல்லிட்டப்பிறகு நினைச்சுப் பார்த்தா, மிருகங்களும்
சிந்திக்குதுங்கதான்.

இல்லேன்ன்னா, இந்த ஹெட்ஜ்ஹாக், தவறாம ராத்திரி 7 மணிக்கு இங்கே
எப்படி ஆஜர் ஆகுது?

அதது மூளைக்கு ஏற்ப அதது சிந்திக்குதுன்னு வச்சுக்கலாமே!

வாதத்திறமையும், தான் நம்பறது (???)மட்டுமே உண்மைன்னு நினைச்சுக்கறதும்
மட்டுமே மனுஷனுக்கு ஸ்பெஷாலிட்டியா இருக்கு.

'தன்னுடைய கருத்துக்கு அடுத்தவன் சரின்னு சொல்லிறணும்'... இப்படி.

ஒண்ணு மட்டும் சொல்றேன். இதுவும் எங்கியோ படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டது(!)தான்.

இந்து மதம்னு ஒண்ணு இல்லவே இல்லை. சநாதன தர்மம்னுதான் இருக்கு.

நான் நாராயண குரு சொன்னதைத்தான் மனசுலெ வச்சுருக்கேன்.

'மதம் எதுவாக இருந்தாலும் சரி. மனிதன் நல்லவனாக இருந்தால் போதும்'

நான் நம்பறதை என் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கறேன்.( அப்படின்னு நினைக்கறேன்)

கோவிலுக்குப் போறதைக் கொண்டாடுற நானும், கடவுளே இல்லை என்று சொல்ற என் மகளுமே
உதாரணம்.

நல்ல மனிதனாக இரு என்று மட்டுமே அவளுக்குச் சொல்லி இருக்கேன்.

மனசுலே தயை இருக்கறவங்க எல்லாருமே கடவுள்கள்தான்.

இதே போல மனசுலே தயை இருக்கற கடவுள்கள் எல்லாமே 'மனிதர்கள்' தான்.

Thekkikattan|தெகா said...

அப்பாட கடைசியா இந்த ப்ளாக்கர் ஒரு பின்னூட்டமாவது இட அனுமதித்ததே ரொம்ப சந்தோஷம். பொன்ஸு, நீங்க எனக்கு ரொம்ப மொய் பண்ணுட்டீங்க, இந்தாங்க திரும்ப கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கிறேன் வாங்கீங்க ப்ளீஸ்.

உண்மையிலேயே நிறையெ விசயத்தை கொட்டீப்புட்டீங்க தருமி வீட்டாண்டே வச்சு. மூச்சு முட்டிக்கிச்சு எனக்கு, அந்த ஒருமித்த எண்ண அலை ஒருவருடன் ஏற்படுவது பார்த்தவுடன் விசயம், அப்புறம் செடிகள்கிட்ட பேசி... இப்படி என்னென்னவே... நீங்களும் ஒரு சீரியஸ் திங்கர் அப்படிங்கிறதெ நிருபிச்சுட்டீங்க இனிமே நீங்க எங்க போனாலும் நான் உங்க வால் :-))

தருமியோட எல்லா ஆர்கில்ஸ் மதங்கள் சீரிஸ்லெ இருந்ததே நானும் படிச்சேன்... தலைவரு எங்கோ போயிட்டாருங்க... அவர்கிட்ட நான் ரொம்பவே வால் ஆட்டுவேன் இதெல்லாம் படிச்சதிற்கு அப்புறமா ஒண்ணும் சொல்றமாதிரி இல்லெ... ப்ளாக்ஸ் சூப்பர்ப் இடமின்னு மட்டும் தெரியுது இப்போதைக்கு...

- யெஸ்.பாலபாரதி said...

//தீச்சட்டி தூக்குதல், மண்சோறு சாப்பிடுதல் போன்ற சில மூட நம்பிக்கைகளை (இதுவும் இடையில் வந்ததாகத் தான் இருக்கணும்) விட்டு பார்த்தால்//
ஒரு சிறு விளக்கம்..
மேற்சொன்னவைகள்.. இந்து மதத்தின் நம்பிக்கையல்ல... அது நாட்டார் தெய்வ வழிபாட்டின் நம்பிக்க்கை.
நாட்டர் தெய்வங்களை இந்து தெய்வங்களாக சொல்ல முடியாது.

Iyappan Krishnan said...

akkov.. veNbavai ambOnnu vittutteengalE akkOv

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா, நீங்க சொல்றது சரி தான்.. வாதம் செய்யும் போது எதிராளி கருத்தை மாற்றிகிட்டே ஆகணும்னு செய்யறது தப்புதான்.. :)
மத்தபடி மதம் எதுவாயினும் மனிதன் நல்லா இருந்தா சரி என்பதை நானும் ஒத்துக்கிறேன் :)

கனவு, உதாரணத்தோட வாங்க.. தருமி பதிவுல பார்க்கலாம்

தெ.கா, ஒரேடியா என்னை ஆழமா யோசிக்கிறவங்க லிஸ்ட்ல கொண்டு தள்ளிடாதீங்க!! நம்ம எல்லாம் சும்மா கிண்டல் பண்ணிகிட்டு வ.வா.ச, அது இதுன்னு சுத்தறவங்க.. ப்ளாக் உண்மையிலேயே பெரிய இடம் தான்:)

யாழிசை தாத்தா, நாட்டார் தெய்வங்களையும் இந்து மதத்துல தான் சேர்க்கிறாங்க.. துளசி அக்கா சொல்வது போல், இந்து மதம்னு ஒண்ணு தனியா உருவாக்கப் பட்டது இல்லை.. பல சிறுதெய்வங்கள், தனித் தனி வழிபாடு எல்லாம் சேர்ந்து வந்தது.. தருமியே இது பத்தி எழுதி இருக்காரு.. அங்க வாங்க. பேசுவோம்:)

நாமக்கல் சிபி said...

//உண்மையிலேயே நிறையெ விசயத்தை கொட்டீப்புட்டீங்க தருமி வீட்டாண்டே வச்சு. மூச்சு முட்டிக்கிச்சு எனக்கு, அந்த ஒருமித்த எண்ண அலை ஒருவருடன் ஏற்படுவது பார்த்தவுடன் விசயம், அப்புறம் செடிகள்கிட்ட பேசி... இப்படி என்னென்னவே... நீங்களும் ஒரு சீரியஸ் திங்கர் அப்படிங்கிறதெ நிருபிச்சுட்டீங்க இனிமே நீங்க எங்க போனாலும் நான் உங்க வால்//

போச்சு! எல்லாம் போச்சு! தெகா அவரை மாதிரியே உங்களையும் நெனைச்சிட்டார்.

இனி உங்க பதிவுகள்ளயும் மரம்,செடி,கொடிகளோட பேசுவீங்க!
மனவியல் ரீதியான கருத்துகளையெல்லாம் எடுத்து வைப்பீங்க! வாழ்க்கைசார் அவலங்களை யெல்லாம் அலசிக் காயப் போடுவீங்க!

:)))
(ஸ்மைலி போட்டுட்டேன் தெகா தப்பா எடுத்துக்க மாட்டார்)

பாரதி தம்பி said...

//யாழிசை தாத்தா, நாட்டார் தெய்வங்களையும் இந்து மதத்துல தான் சேர்க்கிறாங்க.. துளசி அக்கா சொல்வது போல், இந்து மதம்னு ஒண்ணு தனியா உருவாக்கப் பட்டது இல்லை.. பல சிறுதெய்வங்கள், தனித் தனி வழிபாடு எல்லாம் சேர்ந்து வந்தது.. தருமியே இது பத்தி எழுதி இருக்காரு.. அங்க வாங்க. பேசுவோம்:)//
அப்படி சேர்க்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.
பேராசிரியர்.தொ.ப-வின் நூல்கள் இதற்கு சான்று..

அருள் குமார் said...

பொன்ஸ்,

தருமி அவர்களின் பதிவில் மதம் பற்றிய உங்கள் கருத்தையும் அதற்கு தருமி அவர்கள் எழுதிய பதிவையும் படித்தேன். அவை எழுப்பிய சலனங்கள் சில சற்று பெரிதாக இருந்ததால், அது ஒரு பதிவாக இங்கே...

பொன்ஸ்~~Poorna said...

ஜீவா, வர்றேன் வர்றேன்.. :)

//வாழ்க்கைசார் அவலங்களை யெல்லாம் அலசிக் காயப் போடுவீங்க! //
எரிக்கிறதா புதைக்கிறதான்னு பேசணுமா வேண்டாமா சிபி?? :)

ஆழியூரான், மன்னிக்கவும், தொ.ப - முழுப் பெயர் கொடுங்களேன்..

அருள், விளக்கமான பதிவுக்கு நன்றி :)