கதை சொல்லுவது, கேட்பது எல்லாம் ஒரு வருடமாக வாசனுக்கு ரொம்ப பிடிக்கிறது. அவனுடைய இரண்டாவது பிறந்த நாளின் போது ஒரு கதை சொல்லுவான் ;
அப்பா ; பகி மாமா என்ன கார் வச்சிருக்காங்க?
வாசன்; பி.எம் டபிள்யூ கார்
அப்பா; என்ன கலர்?
வாசன் ; க்ரே
அப்பா; ப்ரீவேல எப்படி ஓட்டுவாரு?
வாசன்; டுர்ரர்ரர்ர
அப்பா; வீட்டுக்கு வந்து என்ன பண்ணுவார்?
வாசன்; கராஜ் ஓபன் பண்ணி கதவுகிட்ட வந்து knock knock பண்ணுவாரு. கதை இப்படிப் போகும். ஆனால் கேள்விகளைக் கேட்காமல் இருந்தால், பதிலும் வராது. பிறந்தநாளுக்காக வந்திருந்த அவன் பெரியப்பா வாசனைச் சமாதானப்படுத்துவதற்காக, அவனிடம் அதே மாதிரி கதைச் சொல்லத் தொடங்கினார். கேள்விகளைக் கொஞ்சம் மாற்றிக் கேட்டுவிட்டார் (வரிசை மாற்றி, அப்புறம் மேலும் சில ஆங்கிலச் சொல் கலந்து என்று மிக மெல்லிய மாற்றம்). அத்தோடு வாசன் ம்கூம், கதை அப்பா தான் சொல்லணும் என்று ஓடிவிட்டான்...
இப்படி நாம் என்ன கதை சொன்னாலும் கொஞ்ச கொஞ்சமாக பதில் சொல்லத் தொடங்கினான். தானே சொல்லவும் தொடங்கினான். எங்காவது போனால் வந்தால், அதைக் கூட சொல்லுவான். ஒருதரம், அவனைச் சாப்பிடக் கூப்பிட்டேன், வந்து சாப்பிட்டான். அதைப் பற்றி, 'அம்மா என்ன சொன்னா, வாசன், சாப்பிட வான்னு சொன்னா, வாசன் என்ன பண்ணான், உடனே ட்ரக்க வச்சிட்டு வந்துட்டான். குட் ஜாப்னு சொன்னா அம்மா. அதான் கதை' - இது போன்ற பல்லாயிரக்கணக்கான கதைகளைக் கேட்டிருக்கிறேன்.
போன வாரம் குளித்து விடும்போது (3 வயது), முதன் முறையாக, சொந்த கதை வசனத்துடன் ஒரு கதை சொன்னான் - குளிக்கும் அறையில் இருக்கும் பொம்மைகளைப் பற்றி. வாத்து என்ன பண்ணித்து, வந்து தண்ணிக்குள்ள எட்டிப் பார்த்துது. பபிள், பபிளா (நுரை நுரையா) இருந்தது, வாத்துக்கு ரொம்ப பயம் வந்துடுத்து. அது உடனே கப்புல ஏறிண்டுடுச்சு. வாசன் மெல்ல தண்ணிய ஆட்டினான். பபிள் உடைஞ்சு போய்டுத்து, வாத்து வெளில வந்து தண்ணில ஸ்விம் பண்ணித்து. அதான் கதை'
'எப்படா இதெல்லாம் நடந்துது?'
'இதோ இப்ப தான்!'
Thursday, February 19, 2015
Sunday, November 30, 2014
பாகவதர் வாசன்
வாசனுக்கு ஒரு சில பாடல்கள் நன்றாக பாடத் தெரியும். ஆனால் 'குறை ஒன்றும் இல்லை' அதில் கிடையாது. அடிக்கடி அந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பான். நானும் பாடுவேன். அவ்வளவு தான். இந்தியா போய் முதல் நாள், நான் குகனைத் தூங்க வைக்க முயன்று கொண்டிருக்கும்போது, இவன் இந்தப் பாடலை முழுமையாக பாடிக் காட்டி இருக்கிறான். அடுத்த நாள் காலை காபி குடிக்க அனைவரும் டேபிள் அருகில் குழுமி இருக்கும்போது, அவன் பாட்டியும், கொள்ளுப் பாட்டியும், இது மாதிரி பாடினான் என்று சொன்னார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியம்.
'எங்க வாசன், நான் கேட்கவே இல்லையே! பாடு பார்க்கலாம்' என்றேன். கொஞ்சம் தாஜா, கொஞ்சம் தூண்டுதல் என்று பாடத் தொடங்கினான். பல்லவி மட்டும் பாடுவான் என்று நான் பார்த்துக் கொண்டிருக்கையில் எல்லா சரணமும் பாடி முடித்து விட்டான்! எனக்கு ரொம்ப ஆச்சரியம். எல்லாரும் கடைசி வரை முடியும் போதில் கைதட்டவும், வாசன் தானும் கைதட்டிக் கொண்டான். தட்டிவிட்டு, 'குட் ஜாப் வாசன்' என்றான். நாங்கள் எல்லாரும் ஆமா வாசன் குட் ஜாப் என்றோம்.
பின்னர் 'ஷவர்! ' என்றான் .. முதலில் எங்களுக்குப் புரியவில்லை. பின்னர் தான் புரிந்தது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மாதிரி ஷவர் பண்ணச் சொல்கிறார் என்று! உடனே ப்ரிஜிலிருந்து சாக்லெட் எடுத்து அவன் பாட்டி நிஜமாகவே ஷவர் செய்ய, அண்ணனும் தம்பியும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினர்.
அப்புறத்திலிருந்து தம்பி தூங்க வேண்டும் என்றால், அண்ணனே பாடிக் கொள்கிறான். நமக்குத் தொல்லை விட்டது பாருங்க ;-)

Saturday, May 31, 2014
சி தண்ணி
வாசனுக்குத் தோட்டத்தில் போய் செடிக்குத் தண்ணீர் விடுவது என்றால் ரொம்ப பிடிக்கும். இப்போதெல்லாம், பெரியவர்கள் இல்லாமலே தானே போய் ஒவ்வொரு செடியாக பார்த்து பார்த்து தண்ணீர் விடவும் பழகி விட்டான். நல்லவேளையாக பின் கதவு மட்டும் திறக்கவரவில்லை. அதனால் எங்களிடம் கேட்டுக் கொண்டு போவான்.
YouTube-இல், 'Do you like broccoli? Yes I do". என்று ஒரு பாட்டு வரும். அது இவனுக்கு மிகவும் பிடித்துப் போனதால், எங்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு அதைப் பயன் படுத்துவோம்.
அன்று ரொம்ப வெயில். மாலை நாலரை மணிக்கு மொட்டை வெயில். இந்த வெயிலில் வெளியில் போய் தண்ணீர் விட வேண்டாம் என்று அவனை வேறு ஏதாவது மாற்றி விடலாம் என்று அவனுக்கு மிகவும் பிடித்த பொரி வறுத்து வைத்திருந்தது.
வாசன் எதிர் பார்த்தது போலவே தூங்கி எழுந்து வந்தவுடன் வெளியில் போக அடம்பிடித்தான். நாங்கள் 'Do you like பொரி" என்று வழக்கம் போல பாடினோம். வழக்கமாக 'Yes" என்றோ "no" என்றோ சொல்லி, அதற்கேற்றாற் போல பாட்டையும் பாடும் பிள்ளை, பதிலுக்கு 'Do you like சி தண்ணி" என்றது... அப்புறம் அப்பீல் ஏது ? கதவைத் திறந்து வெளியேறி தண்ணீர் விடப் போய்விட்டேன்....

Tuesday, September 20, 2011
Julie and Julia
திரைப்படம் பார்ப்பதே மறந்திருந்த வேளையில், வீட்டில் சமீபத்தில் டீவி
தொடர்பு வாங்கியதால் இந்தப் படம் வரவேற்பறைக்கு வந்து அழைத்தது…
ஜூலியா சைல்ட் இரண்டாம் உலக யுத்தத்தில் எழுத்தராக பணியாற்றியவர். யுத்தத்துக்குப் பின்னர் கணவருடன் பாரிஸில் குடிபுகுந்த வேளையில், பிரஞ்சு சமையல் கற்று, எப்படி புத்தகம் எழுதப் புகுந்தார் என்பது ஒரு கதை. ஜூலி பொவல் 2002இல் ஜூலியாவின் இந்த பிரஞ்சு சமையற்குறிப்புகள் எல்லாவற்றையும் சமைத்து, முயன்று பார்த்து அது குறித்து வலைப்பதிவில் எழுதத் தொடங்குகிறார். இந்த செயல் எப்படி அவரை ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராக்குகிறது என்பது இரண்டாவது கதை.. இரண்டையும் சமமாக கலந்து சொல்லியிருப்பது திரைக்கதையின் அழகு.
ஜூலியா சமைப்பதும், புதிது புதிதாக கற்றுக் கொள்வதும், சமீப காலமாக புத்தகம் படித்துச் சமைக்கத் தொடங்கியிருக்கும் எனக்கு ரொம்பவும் சந்தோசமான ஒன்றாக இருந்தது. கொஞ்ச நாளாக, சமையலறைக்கு வெறும் சாப்பாடு நேரத்துக்கு மட்டும் வரப் பழகியிருக்கும் கணவரோ, ‘அட, உன்னை மாதிரியே ஒருத்தி புத்தகம் படிச்சி சமையல் பண்றா பாரு!’ என்று இப்பவரைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜூலியாவாக நடித்திருக்கும் நடிகை மிக நன்றாக அந்தப் பாத்திரத்தை பிரதிபலிக்கிறார். கொஞ்சும் குரலில் பேசிக் கொண்டு, ‘நான் எப்படி வீட்ல சும்மா இருக்கிறது?’ என்று விதம் விதமான பயிற்சிப் பள்ளிகளுக்குப் போய் வந்து கொண்டு, ஆண்கள் கற்கும் சமையற்பள்ளியில் சேர்ந்து அவர்களுக்கு நிகராக சமைக்கப் போகிறேன் என்று, வீட்டிலிருக்கும் எல்லா வெங்காயத்தையும் வெட்டிக் கொண்டு, குழந்தைத்தனமும், குதூகலமும் கலந்து விளையாடுகிறார். அவரின் முதல புத்தகம் எப்படி அச்சுக்கு வந்தது, அதற்கு என்னவெல்லாம் பாடுபட்டார் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள். ஜூலியாவிற்குமுன் இது போல ஆங்கிலத்தில் பிரஞ்சு சமையல் பற்றி எல்லாருக்கும் புரியும் விதமான ஜனரஞ்சகமான புத்தகம் இருக்கவில்லையாம்.
சமீபத்தில் ஜூலியா சமையல் புத்தகம் எழுதிய கதையான ‘My life in France’ ஐயும் படிக்க கிடைத்தது. அந்த காலத்து பிரான்சு எப்படி இருந்தது என்று அழகாக விவரிக்கிறார் ஜூலியா. படிக்கும்போது, 1950களின் பாரிஸ் நம்ம கோயம்பேடு மார்க்கெட்டை நினைவுப் படுத்துகிறது. ஆங்காங்கே அண்ணாச்சி கடைகளும், பொருட்களைப் பார்த்து வாங்க முடியும் விதமும், அதே 50, 60களின் அமெரிக்காவிலோ, சூப்பர்மார்க்கெட்களும் என்று அந்த வித்தியாசங்களை அழகாக காட்டி இருக்கிறார் ஜூலியா. வேட்டைகாலத்தின் போது, Quail என்ற பறவை பாரிஸ் மார்க்கெட் எங்கும் நிறைந்திருக்குமாம். ஆனால், அதனை அப்படியே, வேட்டையாடிய மாதிரியே கொண்டு வந்து கொட்டி விற்பார்களாம்! (அப்ப தான் அடையாளம் தெரியும், அதன் இறகு நிறம் பார்த்து மக்கள் வாங்குவார்களாம்!) அதே சமயம் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் குயில்கள் நன்கு சுத்திகரிக்கப்பட்டு, குயிலா கோழிக்குஞ்சா என்று அடையாளம் தெரியாதபடி தோலுரிக்கப்பட்டு விற்கப்படுமாம்! இன்னும் ஒவ்வொரு கடையையும், எப்படி சீஸ் வாங்க வேண்டும், எப்படி ஆலிவ் எண்ணெய் வாங்க என்று ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசம் காட்டுகிறார் ஜூலியா.
இத்தோடு, பாரிஸில் அந்தக் காலத்தில் வீட்டு வேலைக்கு ஆள் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். ஜூலியா வீட்டுக்கே, வாடகைக்கு வீடு எடுத்த போது கூட ஒரு வேலைக்காரியையும் கொடுத்தார்களாம்! அவருக்கும் சாப்பாடு சேர்த்துப் போட வேண்டியது வாடகைக்கு இருப்பவர்களின் கடமையாம். அதே 50-60களில் அமெரிக்காவிலோ, உதவிக்கு ஆள் இல்லாத இல்லத்தரசிகள் தான் அதிகமாம் (அதாவது, ஜூலியா பிறந்த கலிபோர்னியா மாகணத்திலும், புகுந்த வீடான பாஸ்டனிலும் உதவிக்கு 50-60களில் ஆள் கிடையாது.. மற்றபடி தென்மாகாணங்களில் அடிமைகளை நன்கு பிழிந்து கொண்டு தான் இருந்தார்கள்!)
ஜூலியை 2002இல் நியூயார்க் நகரத்தில் வாழும் பெண். கல்லூரிக் காலங்களில் புகழ் பெற்ற எழுத்தாளராக வேண்டும் என்ற அவளின் லட்சியம் வெற்றிபெறாமல், முப்பது வயதில் ஏதோ பிடிக்காத வேலையில் (911இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் கால் சென்டர்) உட்கார்ந்து கொண்டு வாழ்க்கையைக் கொஞ்சமேனும் சுவாரசியமாக்க வேண்டும் என்ற காரணத்துக்காக சமையல் செய்பவள். 2002களின் சூப்பர் மார்க்கெட் கலாசாரம், தேவையில்லாத பகட்டான நட்புகள், என்று இன்றைய நடுத்தர அமெரிக்க குடிமகளைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அடிக்கடி போன் செய்து, ‘நீ எழுதுற ப்ளாக்கை எவனும் படிக்கிறதில்லை.. இது தேவையில்லாத வேலை’ என்று பேசிக் கொண்டே இருக்கும் (முகம் காட்டாத) அம்மா கதாபாத்திரம் அழகு.
இத்தோடு இந்தப் படத்தை ஒரு பத்து முறை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அலுப்பு தட்டவே இல்லை! சொல்லப் போனால் ஜூலியாவின் மூல புத்தகத்தைப் படித்த பின்னர், படத்தில் வழக்கம் போல பல விசயங்கள் மாறி வருவது வியப்பாக இருக்கிறது.
முதல் தரம் படம் பார்த்து முடித்த பின்னர், அது வரை மீனாட்சி அம்மாள் மட்டுமே வைத்து சமைத்துக் கொண்டிருந்த நான், அடுத்து ஜூலியாவின் சமையற்குறிப்புகளில், நம்ம சமைக்கக் கூடியதாக ஏதாவது சிக்குகிறதா என்று பார்க்கத் தொடங்கிவிட்டேன்! பாவம் ரங்ஸ்
மீண்டும் பதிவுகளுக்கு வர - புதிதாக இப்படி சமையல் பதிவு போடத் தொடங்கலாமா என்று ஒரு ரோசனை வேறு.. ஜாக்கிரதை மக்கள்ஸ்

Friday, April 01, 2011
போர்க்கதைகள் - 2
The Bookseller of Kabul (by Asne Seirstad) & Thousand Spendid Sons (by Khaled Hosseni)
கலீத் ஹோசினியின் மற்றொரு புத்தகமான The Kite Runner படித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து சீட்டுப் பயணி ஒருவர் The Thousand Splendid Sons படிக்கச் சொன்னார். ‘கைட் ரன்னர் அப்கான் ஆண்களைப் பற்றியது என்றால், ஸ்பெளிண்டிட் சன்ஸ், பெண்களைப் பற்றிய கதை, உனக்குப் பிடிக்கும்’ என்றார் அவர். உண்மை தான். கைட் ரன்னர் படித்த போது, அப்கானின் அரசியல் வாழ்முறை பற்றி இதில் ஒன்றுமே இல்லையே என்று நான் வியந்ததற்குப் பொருத்தமாக இந்தப் புத்தகம் ஒரு அரசியல் விருந்து.
ஒவ்வொரு பத்து வருடமும் ஆட்சியும் - அத்துடன் கூட ஆட்சி புரியும் விதமுமே - மாறும் அப்கான் நாட்டின் இரண்டு பெண்களைப் பற்றிய கதை இது. 70களில் தொடங்கி அப்கானிய கிராமங்கள், காபூல் என்று வலம் வருகிறது. பெண்கள் இரண்டு பேரும் வயது, வளர்ந்த விதம், பெற்றோர் என்று எல்லாவற்றிலுமே வித்தியாசம் இருந்தாலும், எப்படி ஒரே வீட்டில், ஒரே நரகத்தில் கஷ்டப்பட்டு காலம் கழிக்கிறார்கள் என்று விளக்குகிறது கதை. கொஞ்சம் முற்போக்கான பெற்றோருக்கு மகள் லைலா, முறைகேடான உறவில் பிறந்து குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப் பட்டவள் மரியம் - சோவியத் ஆண்ட நாளில் கிடைத்த கொஞ்சம் சுதந்திரத்தையும் வாய்ப்பையும் இருவரும் எப்படிப் பயன்படுத்தினர் என்று காட்டி இரு வேறு அப்கான் மக்களின் எண்ணத்தை எடுத்துக்காட்டும் கதை, அதன்பின் தாலிபன் காலத்தில் இருவரும் ஒன்றாக புர்க்காவுக்குள் மறைந்து, வெளியே போகவும் முடியாமல் பாடுபடுவதை அழகாக படம்பிடிக்கிறது.
தாலிபான் அப்கான் விட்டுச் சென்ற பின், அத்தனை கொடுமை அனுபவித்த அந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று போரால் அனாதையான குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்று தாய்நாடு திரும்பும் லைலா, நம்ப முடியாத முன்னுதாரணம்!
அரசியல் வாழ்க்கை பற்றிய கதை அது என்றால், The bookseller of Kabul, ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதை. 2001க்குப் பிறகு, தாலிபான் ஆட்சிக்குப் பிறகான அப்கானின் ஒரு சின்ன குடும்பத்தைப் பற்றிய கதை. எழுத்தாளர் அஸ்னி, தானே சென்று, சுல்தான் கான் என்னும் நடுத்தர அப்கான் குடும்பத்தில், அந்தக் குடும்பத்துப் பெண்ணாக சில காலம் வாழ்ந்த கதை! சுல்தான் என்னதான் புத்தகங்கள் படித்தாலும், பொதுவாக அவனின் மற்ற சகோதர சகோதரியருக்குக் கிடைக்காத படிப்பு என்னும் பொக்கிஷம் அவனுக்கு கிடைத்த போதும், அதன் அருமை புரியாதவனாகவே இருக்கிறான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பணம், பணம் மேலும் பணம் தான்.
என்ன தான் சுதந்திர நாடு என்றாலும், எப்படி இன்னமும் அப்கான் பெண்களுக்கு, தத்தம் வாழ்க்கையை முடிவெடுக்க தெரியவில்லை என்று காட்டுகிறார் அஸ்னி. பெண்கேட்டு வந்தால், சரி என்றோ இல்லை என்றோ சொல்ல பெண்களுக்கு உரிமை இல்லை. திருமண நாள் வரை கணவன் முகத்தைப் பார்க்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. இன்னும், எத்தனையோ இல்லைகள்.., ஆனால், அதிசயமான விசயம் என்னவென்றால், பெண்கேட்டு வரும் ஆண் வீட்டார் தான் வரதட்சணை கொடுத்து, திருமணத்தையும் நடத்திக் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் வரதட்சணைக்குத் தக்க பெண்ணின் பெற்றோர் ஒப்புதல் சொல்லலாம். இதனால் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் கொண்டாடப் படுகிறார்களா, என்றால், ‘இல்லை’! அப்கானிலும், பெண்ணைப் பெறுவது பெருமைக்குரியதில்லை!
தாலிபான் போன பின், பெண்கள் வேலைக்குப் போகலாம். ஆனால் யார் வேலை செய்யலாம், யார் செய்யக் கூடாது என்று முடிவெடுப்பவர்கள், அந்தப் பெண்ணின் கணவன், அவளின் முதல் மகன், ஏன், தன் அத்தை வேலைக்குப் போவதைக் கூட குடும்பத்தின் முதல் மருமகனால் தடை செய்ய முடியும்! என்னதான் பணம் இருந்தாலும், சுல்தான் கானின் குடும்பம் 90களின் இந்தியா போல, செலவு செய்யாத ‘நடுத்தர குடும்பம்’
ஆங்காங்கே கதை, கட்டுரை மாதிரி, சம்பவத் தொகுப்பு மாதிரி இருந்தாலும், அதிகம் கற்பனைக் கலப்பில்லாமல், அஸ்னி 2003களின் அப்கானிய வாழ்க்கையை எடுத்துக் காட்ட முயன்றிருக்கிறார். இது ஒரு நடுத்தர வர்க்க, அதிசயமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த சிலரைக் கொண்ட குடும்பம்.
என் தாய்நாட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும், கிட்டத் தட்ட பாதி இந்தியர்கள் சாப்பிடுவது போன்ற உணவைச் சாப்பிடும், பாதி இந்தியர்கள் வணங்கும் கடவுளை வணங்கும், இந்தச் சிறிய நாடு, இன்னுமும் இவ்வளவு பழங்காலக் கொள்கைகளில் இருப்பதை என்னால் முதலில் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்கான் பற்றிய கதைகள் எப்போதுமே மதவெறுப்போது முன்வைக்கப் பட்டு படித்ததால், இது போன்ற நடுநிலையான கட்டுரையைக் கவனிக்காமலிருக்க முடியவில்லை.
கதையின் பின்இணைப்பாக அஸ்னி சொல்கிறார், ‘அப்கானில் இருந்த போது, நானும் சுல்தான் வீட்டுப் பெண்களைப் போன்றே இருக்க முயற்சித்தேன். அவர்களைப் போலவே புர்க்கா உடுத்தி வெளியே சென்று வந்தேன். அவர்கள் போன்ற வாழ்க்கையை வாழ்ந்தேன். அதனால், இன்று என்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த பின் என்னுடைய இந்தச் சுதந்திரத்தை இன்னும் அதிகமாக அனுபவிக்கவும், போற்றவும் முடிகிறது ‘ எத்தனை சத்தியமான வார்த்தை!
என்னுடன் ஓட வரும் சில தோழிகள், சவுதியில் வளர்ந்தவர்கள். ஹைஸ்கூல் படிக்கும்போது அவர்கள் இந்தியாவில் சில வருடங்கள் இருக்க நேர்ந்தது. முதல் வருடம் அவர்களின் பிரச்சனைகளை நினைவு கூறும்போது, ‘முதன்முதலில் புர்க்கா இல்லாமல் வெறும் சுடிதாரில் வெளியே சென்று வருவது கொடுமையாக இருந்தது. ஒன்றுமே அணியாமல் வெளியே செல்வது போன்ற கூச்சம்! உடன் படிக்கும் ஆண்கள் திரும்பிப் பார்த்தால் கூட என்ன இந்தியர்கள் இவ்வளவு அநாகரிகமாக கூடப் படிக்கும் பெண்ணைப் பார்க்கிறார்கள் என்று தோன்றும். அப்பா இல்லாமல் பள்ளிக்குச் சொந்தமாக பஸ் பிடித்துப் போக நேர்ந்தது ரொம்பவே கொடுமை! அதிலும் உங்க ஊரில் பஸ் இரண்டு தெரு தள்ளி நிற்கிறது. சவுதியில் எல்லாம், வீட்டு வாசலுக்கு வந்து அழைத்துச் செல்வார்கள். இந்த இரண்டு தெரு தனியா நடக்கவேண்டிய அவசியமே இல்லை! உடன் வர ஆண்கள் இல்லாமல், சொந்தமாகப் போய் வரும் பயமெல்லாம் போகவே ஒரு வருடம் ஆனது’ என்றார்கள். (இன்று அவர்கள் எந்தப் பயமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார்கள், திரும்ப சவுதிக்குப் போகும் எண்ணமே இல்லை)
ஒன்பதாவது படிக்கும் பெண், துணைக்கு ஆண் இல்லாமல் போய் வர கஷ்டப்பட்டுப் பழகியதைக் கேட்ட போது, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, பக்கத்துத் தெருவுக்கு நடந்து போய் படிக்கப் பழக்கிய என் தந்தையும் தாயும், அதற்கு வழி வகுக்கும்படியான இருபதாம் நூற்றாண்டு இந்தியாவும், பற்றி ஒரு பெருமை தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.. இது போன்ற கதைகளைப் படிக்கும்போதும், கேட்கும்போதும், என்னுடைய சுதந்திரத்தை இன்னும் அதிகமாக பாராட்ட முடிகிறது!
அப்கான் பெண்களின் நிலையும் சீக்கிரமே நல்ல விதமாக உயர அல்லா காப்பாற்றுவராக!

Wednesday, March 16, 2011
போர்க் கதைகள்..
சாண்டில்யன் நாவல்கள் படித்த காலத்திலிருந்தே போர்க்கதைகள் என்றால்
எனக்கு ரொம்ப பிடிக்கும். போர் பற்றிய எந்தக் கதையாக இருந்தாலும் ஒரே
மூச்சில் படித்து முடித்துவிடுவேன். ஆங்கிலக் கதைகள் படிக்கத்
தொடங்கியதிலிருந்து உலகப் போர் பற்றிய கதைகள் தேடிப் படித்திருக்கிறேன்.
அதிலும் இரண்டாம் உலகப் போர் குறித்துத் தான் எத்தனை கதைகள்?! இரண்டாம்
உலகப் போரைப் பொறுத்தவரை, ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள், ஆஸ்திரியர்கள்,
போலந்து மக்கள், பின்லாந்து மக்கள் என்று பல்வேறு மக்களின் பார்வையில்
இரண்டாம் உலகப் போர்க் கதைகள் படித்திருக்கிறேன். ஆனால், ரஷ்யர்கள்
இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப் பட்டார்கள் என்று எண்ணியதே கிடையாது.
சோவியத் ரஷ்யாவின் வரலாற்றை கம்யூனிசம் விரும்புபவர்கள், கம்யூனிசம் விரும்பாதவர்கள் என்ற இரண்டே நிறங்களில் தான் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறேன். மூன்றாதாக ஒரு பக்கம் உண்டு - அது சோவியத் ரஷ்யாவில் பிறந்து, வளர்ந்து, அரசியல் சார்பற்ற சாதாரணப் பெண்ணின் கண்களில் இருக்கிறது என்று முதன்முறையாக உணர்ந்தது - கிறிஸ்டின் ஹன்னாவின் The Winter Garden படித்த போது தான்! சரியாக நான்கு நாட்களில் இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன்! சிட்னி ஷெல்டனுக்குப் பின், என்னை இரவெல்லாம் கண்விழித்துப் படிக்க வைத்த கதையாசிரியர் ஹன்னா!
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் செய்த மிகப் பெரிய தவறு, லெனின்கிராடை முற்றுகை இட்டது தான். அந்த நான்கு வருட முற்றுகையின் முடிவில், ஜெர்மானியப் படை குளிர் ஜுரம், கடுங்குளிர் இவற்றைத் தாங்க முடியாமல் பின்வாங்கி அழந்துபட்டது என்று என்னுடைய ஒன்பதாம் வகுப்பு சரித்திர புத்தகம் சொன்ன லெனின்கிராட் தான் எனக்குத் தெரியும். ஆனால், The Winter Garden இன் கதாநாயகி, சாதாரண குடிமகள் அன்யா என்னும் வெரொனிகா காட்டும் லெனின்கிராட், இன்னும் பரிதாபமானது.
அன்யா, ஆப்பிள்களுக்குப் பெயர் போன வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு ஆப்பிள் தோப்பு முதலாளியின் அமைதியான மனைவி. அமைதி என்றால், அப்படி ஒரு அமைதி. தன் சொந்த மகள்களுடனேயே பேச மறுக்கும் அமைதி. அம்மாவின் பிறந்த நாள் கூட அறியாமல் வளரும் மகள்கள். பெரியவள் கணவர், குடும்பத்துடன் ஆப்பிள் தோட்டத்துக்கு அருகிலேயே, அப்பாவுக்கு உதவியாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள். சின்னவள், அம்மாவின் புறக்கணிப்பு தாங்காமல், உலகத்தில் போர் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் பறந்து போட்டோ பிடிப்பதைத் தொழிலாக்கிக் கொண்டு அலைகிறாள். அப்பா இறக்கும் போது, மகள்களுக்கும், மனைவிக்குமிடையில், இத்தனை பெரிய இடைவெளி இருப்பதை அவரால் தாங்க முடியாமல், அம்மாவை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று இளைய மகளிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு இறக்கிறார்.
ஆறு மாதத்திற்குப் பின், அன்யா, இளைய மகளின் தூண்டுதலின் பேரில் மெல்ல பேசத் துவங்கும்போது தான் வெரா வெளியே வருகிறாள். ‘ஸ்டாலினின் ரஷ்யாவில், அம்மா, அப்பா, தங்கை ஓல்காவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாள் வெரா. பதினாறு வயதில் தன்னுடைய அன்புக்குரிய இளவரசனை அவள் சந்திக்கும் நாளில், அவளுடைய தந்தையை அரசாங்க கைதியாகச் சிறைபிடித்துப் போகின்றனர். அத்துடன் தந்தை பெட்ராவின் உடலைக் கூட மீண்டும் பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. குடும்பத்தலைவரை இழந்தபின், மற்ற பெண்கள் அனைவரும் வேலை பார்த்து தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப் படுகின்றனர். அம்மா, ரொட்டித் தொழிற்சாலைக்கும், வெரா புத்தகசாலைக்கும், ஓல்கா மியூசியத்துக்கும் வேலைக்குப் போகிறார்கள். கல்லூரிக்குப் போய், தந்தையைப் போன்று கவிதை படிக்க வேண்டும் என்ற வெராவின் கனவுகள் சின்னாபின்னமாகின்றன. அப்பாவுடன் வசித்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல், அம்மாவின் அம்மா வீட்டுக்கு இடம் மாறி வருகின்றனர். அம்மா-அப்பாவின் காதலை எதிர்த்த பாட்டி முன்னால், அப்பா பற்றிப் பேசும் உரிமை கூட இல்லாமல் போகிறது.
நாட்டின் criminalஇன் மகள் என்ற முறையில், தன் தாய்நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டி இன்னும் இன்னும் அதிக வேலை பார்க்க வேண்டி வருகிறது வெராவுக்கு. யாரிடமும் பேசாமல், அறிவுப் பசிக்கு வேண்டிய தீனி கிடைக்காமல், வெரா சோர்ந்திருக்கும்போது, அவளுடைய இளவரசனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இளவரசன் சாஷாவின் குடும்பத்தினர் அனைவரும் ஏற்கனவே ஸ்டாலினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள். சாஷாவுக்கும் வெராவுக்குமான தூய்மையான காதலை அங்கீகரிக்கும் வெராவின் தாய், சாஷா கவிதை படிக்கக் கூடாது என்ற வாக்குறுதியின் பேரில், அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய ஒப்புகிறாள். இருபது வயதுக்குள், அன்யா (மகள்), லியோ (மகன்) என்ற இரண்டு செல்வங்களைப் பெற்றெடுக்கிறாள் வெரா.
அதுவரை வசந்த காலமாக இருந்த வாழ்க்கையில் புயல் வீசும் விதமாக போர் வருகிறது. ஜெர்மானியப் படைகள் லெனின்கிராடை முற்றுகை இட்ட நாள் முதல், எல்லாருக்கும் உணவு ரேசன் அளவு குறைகிறது. வேலைக்குப் போகாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அளவு மிக மிகக் குறைவு. வங்கியில் பணம் இருந்தும் எடுக்க முடியாது தடை செய்யப் படுகிறது. சாஷா உள்ளிட்ட எல்லா ஆண்களும் போர்முனைக்குக் கிளம்பிப் போகிறார்கள். சில நாள் கழித்து, ஸ்டாலினின் ஆணையின் பேரில், குழந்தைகள் எல்லாரையும் ரயிலில் ஏற்றி பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி நடக்கிறது. பிள்ளைகளைப் பிரிய முடியாத வெராவும், தன் குழந்தைகளோடு கூடப் போகிறாள், பாதி வழியில் அந்த ரயிலை எதிரிகள் தாக்க அதிர்ந்து போய், தன்னால் முடிந்த அளவு பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொண்டு லெனின்கிராட் திரும்புகிறாள். கொஞ்ச நாள் கழித்து, அடுத்த அழைப்பு நகரத்தின் இளம்பெண்களுக்கு வருகிறது. வெராவும், ஓல்காவும், மற்ற பெண்களோடு லூகா நதியின் எல்லைக்குச் சென்று, நாள் முழுக்க மண்ணை நோண்டி குழிகள் உருவாக்குகிறார்கள். இதன் மூலம் எதிரிகள் அந்த பக்கத்திலிருந்து உள்ளே வருவதைத் தவிர்க்கும் வழி இது. எல்லா முக்கிய போர்க்கருவிகளையும் ஆண்கள் எடுத்துச் சென்றுவிட்டதால், வெறும், கம்பு, கரண்டி, நகம், கை என்று நோண்டும் இந்தப் பெண்களை நிறுத்த ஜெர்மானியப் படை குண்டு போடுகிறது. குண்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஓடி ஓடி ஒளிந்து கொண்டாலும், மீண்டும் மீண்டும் வந்து தோண்டுகிறார்கள் பெண்கள். ஒரு சில மாதங்களுக்குள்ளேயே ஓல்கா சோர்ந்து விடுகிறாள். உணவு உண்ணவும் வருவதில்லை, தன்னையொத்த பெண்கள் தன்னருகிலேயே இறப்பது பார்த்து அவளின் மனம் சோர்ந்து போகிறாள். அடுத்த ஒரு சில நாட்களில் பைத்தியம் மாதிரி, குண்டு பற்றிய எச்சரிக்கையை அவமதித்து, ஓடி மறையாமல், குண்டடிபட்டு இறந்து போகிறாள்.
குளிர்காலம் வந்து, இனி நோண்ட மண் இடம் கொடுக்காது என்ற போது, வெரா தனியாக வீட்டுக்கு வருகிறாள். அம்மாவுக்கு உடனே புரிந்து போகிறது, ‘சித்தி எங்கே?’ என்று கேட்டு பிள்ளைகள் தான் அழுதழது மாய்ந்து போகிறார்கள். ஜெர்மானிய முற்றுகையின் முதல் குளிர்காலம் மிகக் கொடுமையாக நகர்கிறது. உணவு ரேசன் இன்னும் குறைந்து போகிறது. கிடைக்கும் சிறதளவு பிரட் கூட மரத்துகள், கொள்ளு, போன்ற மனிதர் உண்ணத் தகுதியில்லாத பொருட்கள் நிறைந்து இருக்கிறது. டிசம்பர் தொடங்கிய போது, நீருக்கு வழியில்லாது போகிறது. வெரா வெகுதூரம் சென்று, உறைந்திருக்கும் தண்ணீரை எடுத்து வருகிறாள். கொஞ்ச நாளில் நகரப் போக்குவரத்து நின்று விட்டது. வேலைக்கும் எல்லோரும் நடந்து தான் போக வேண்டும். நகரின் பிரபலமான பிரட் கிடங்கில் வேலை செய்யும் பாட்டியும் அம்மாவும் அவ்வப்போது ஏதாவது திருடி வருவதை வைத்துத் தான் குழந்தைகள் உடல் நலத்தைப் பேண வேண்டி இருக்கிறது. எதிரியின் குண்டு விழுவது மட்டும் இன்னும் நின்ற பாடில்லை. வெராவின் வீட்டில் பதுங்கு குழிகள் இல்லாத காரணத்தால், பக்கத்து வீட்டு பதுங்கு குழிக்குத் தான் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. வெரா, அவள் வயதை ஒத்த மற்ற பெண்களைப் போல, குண்டு விழும் போது, கட்டிடங்கள் நெருப்புக்கு இரையாகாமல் பாதுகாக்கும் ரோந்து வேலையிலும் இருக்கிறாள். ஒருமுறை குண்டு விழும்போது அவள் விரைந்து சென்று நெருப்பை அணைத்ததால், அவளின் வீட்டைக் காப்பாற்ற முடிகிறது, ஆனால் அந்தக் குண்டு அவளின் பாட்டி வேலை செய்து கொண்டிருந்த பிரட் தொழிற்சாலையில் விழுந்து அவர்கள் வீட்டு உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
ஜனவரி தொடங்கும்போது, அம்மா மொத்தமாக படுத்த படுக்கையாகிவிட்டார். குழந்தைகள் பாதியாக இளைத்துவிட்டனர். குளிரில் உறைந்து இறக்காமல் இருக்க, வீட்டின் ஒவ்வொரு மரச் சாமானாக அடுப்புக்குப் போகிறது. அப்பாவுக்குப் பிடித்தமான புத்தகங்களில் பாதி நெருப்புக்கு இறையாகிவிட்டது. உணவு என்று சாப்பிடவது, வெறும் மரத்தூள், அவ்வப்போது ஒரு உருளைக்கிழங்கு, ஏன் ஒருதரம், அவர்கள் பேப்பர் சூப் கூட குடித்திருக்கிறார்கள். பெரியவள் அன்யா அம்மாவின் கஷ்டம் உணர்ந்து எதையாவது சாப்பிட்டு விடுவாள். சின்னவன் லியோ தான், சாப்பிட மறுப்பான். வெரா லைப்ரரிக்குச் சென்று வரும் அந்தச் சில மணி நேரம் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதே, கடினமான வேலையாக இருக்கிறது அம்மாவுக்கு. அம்மா இப்போதெல்லாம் சாப்பிடுவதே இல்லை- சாப்பிட முடிவதில்லை என்பது ஒரு காரணம் என்றால், இருக்கும் கொஞ்சம் உணவில், தனக்கும் பங்கு வைக்கச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை போல. வெராவால் குழந்தைகளா, அம்மாவா என்ற கேள்விக்கு உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. இப்போதெல்லாம் வெரா மார்க்கெட்டுக்குப் போவதே இல்லை. அங்கே போய் உணவு வாங்கி வர அவளிடம் ஏது பணம்? அத்தோடு, இப்போதெல்லாம் மார்க்கெட்டில் மனித மாமிசம் வேறு கிடைக்கிறதாம்! கேட்கவே பயங்கரமாக இருந்தது வெராவுக்கு. ஒரு இரவு அவள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம். அவளைப் பார்க்க யார் வரப் போகிறார்கள்? பயந்து கொண்டே கதவைத் திறந்து பார்த்தால், சாஷா! வெராவுக்கு உயிர் திரும்பியது மாதிரி இருந்தது. சாஷா ஒரு நாள் அவளையும் அவள் பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டான். எல்லாருக்கும் ஊரை விட்டு வெளியேற வழி செய்து கொண்டிருப்பதாயும், அவள் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்கினான். சாஷாவைப் பார்த்த நிம்மதியிலேயே அம்மாவின் உயிர் போய்விட்டது. அம்மாவைப் புதைக்க சாஷா உதவி செய்தான். இருவருமாக அம்மாவை இடுகாட்டுக்கு இழுத்துப் போகும் வழியெங்கும் குளிரிலும், பசியிலும் இறந்து போன உடல்கள்! தோண்டக் கூட முடியாத உறைந்து போன பூமி! மற்றவர்கள் போல, இடுகாட்டில் அந்த உடலை அப்படியே போட்டுவிட்டுப் போக மனமில்லாமல் ஒரு பெரிய மரத்தடியில் இலைகளுக்கு இடையில் அம்மாவைப் புதைத்துவிட்டு வருகிறார்கள் சாஷாவும் வெராவும்!
சாஷா மீண்டும் போர் நடக்கும் எல்லைப் புறத்துக்குப் போய் நால்வருக்கும் நாட்டை விட்டு வெளியேற வழிசெய்யப் போகிறான். இன்னும் சில வாரம் தனியாக - இந்த முறை அம்மாவின் துணையும் இல்லாமல் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வெரா துணிகிறாள். லியோவுக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. வெரா குழந்தையைத் தூக்கும் சக்தியற்று பிள்ளைகள் விளையாடும் தள்ளுவண்டியில் லியோவைக் கட்டி ஆஸ்பத்திரிக்கு இழுத்துப் போகிறாள். டாக்டரைப் பார்க்க பெரிய வரிசை நிற்கிறது, சொல்லப் போனால் சிலர் அந்த வரிசையில் இறந்தே போயிருக்கிறார்கள்! ஏதோ ஒரு நர்ஸ் லியோவைப் பார்த்து மருந்து எழுதிக்கொடுக்கிறாள். ‘பெயர் என்ன?’ என்கிறாள் - ‘லியோ’ என்கிறாள் வெரா. ‘என் மகன் —– என்று இருந்தான்’ என்கிறாள் அந்த நர்ஸ் - கடைசியாக மிச்சமிருப்பது அந்தப் பெயர் மட்டும்தான் என்பது போல!
எல்லா உணவும் தீர்ந்து போய் கடைசி பிரட் துண்டத்தை மூன்றாகப் பங்கிட்டு சாப்பிட்ட அன்று வெராவுக்கு எல்லா நம்பிக்கையும் செத்துப் போகிறது. பசியையும் அடுத்து இல்லாமல் போய்விடுவோமோ என்ற பயத்தையும் வெற்றி கொள்ள கவிதை எழுதுகிறாள். அப்பாவின் கவிதைப் புத்தகத்தில் மிச்சமிருக்கும் பக்கத்தில் அவள் எழுதிக் கொண்டே இருக்கும்போது, சாஷாவிடமிருந்து தகவல் வருகிறது - அவர்களுக்கான பயணக் கடிதங்களுடன் ஒரே ஒரு sausage துண்டத்தையும் பதுக்கி அனுப்பி இருக்கிறான் சாஷா. செய்தி எடுத்துவந்த பக்கத்து வீட்டு இளைஞன், அன்று இரவு மீண்டும் வந்து கதவைத் தட்டுகிறான். குழப்பத்தோடு கதவு திறந்த வெராவுக்கு அவன் கையில் இருந்த வாட்காவும் பிரட்டும் ஆச்சரியமூட்டுகிறது. அவன் தாயார் இரவு தாங்க மாட்டார்கள் என்று எண்ணுவுதாகவும், அதனால் வெராவுக்கு அவளுடைய ரேசனான அந்த உணவைக் கொடுக்குமாறு அவள் சொன்னதாகவும் அவன் சொல்கிறான். வேண்டாம் என்று சொல்ல மனம் வராமல், வாங்கிக் கொள்கிறாள் வெரா. அவனுக்கும் சாஷா போன்ற போர்வீரர்களுக்கும் அரசாங்கம் போரிடப் போதுமான உணவு கொடுப்பார்கள். அவள் போன்ற குடிமக்களுக்குத் தான் ரேசன்!
அன்று வெரா தன் வாழ்நாளின் நெடிய பயணத்துக்குத் தயாராகிறாள். வீட்டில் எரியாமல், விற்காமல், சாப்பிடாமல், மிச்சமிருக்கும் எல்லா பொருட்களையும் சேர்த்தாலும் சின்ன பையில் நிரம்பி விடுகிறது. உணவையும், தந்தையின் கவிதைப்புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு பிள்ளைகளுடன் கிளம்புகிறாள். பாதி வழி செல்கையில் பிள்ளை லியோ ‘பசி, பசி’ என்று அழுதபடி உறங்கிவிடுகிறான். பசித்த மனிதர்கள் நிறைந்திருக்கும் ரயிலில் அந்த ஒரு மாமிசத் துண்டத்துக்காகவே அவளைக் கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?! ஒரு நாள் பயணத்தில் அவர்கள் வந்திறங்கிய போது லியோ கண்திறக்க மறுக்கிறான். வெரா பயந்து போய் அடுத்த ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாள். ஆஸ்பத்திரியில் அவன் இரண்டு மூன்று நாள் தாங்க மாட்டான் என்கிறார்கள். அடுத்த நாளே தான் பயணப்பட வேண்டும் என்று வெரா சொல்லும்போது, ‘இது போன்ற தேறாத கேஸ்களை நாட்டைவிட்டு அனுப்ப அனுமதிக்க மாட்டார்கள்’ என்கிறாள் அந்த நர்ஸ். ஒரு இரவுக்குப் பின் அதே நர்ஸ், ‘இவனைப் பிழைக்க வைக்க எங்களால் ஆகாது, ஆனால், இப்போது நீ போனால், இவளைக் காப்பாற்றலாம்’ என்று அன்யாவைக் காட்டுகிறாள். வெரா ஒரு உறுதியோடு அன்யாவை மட்டும் ரயிலேற்றி, அவளின் தந்தையிடம் அனுப்பி விடுகிறாள். அடுத்த நாள் லியோ இறந்து விடுகிறான் - scurvy - என்கிறார்கள்.
வெரா தாள முடியாத துயரத்தோடு கணவரிடம் போக ரயிலேறுகிறாள். வண்டி நின்றதும், அவளின் எஞ்சிய இரு கண்களான சாஷாவும் அன்யாவும் வரி வடிவமாகத் தெரிகிறார்கள். அவள் வேகமாக அவர்களிடம் ஓடும் போது ரயில் பாதையில் இருந்த குண்டு வெடிக்கிறது. அத்தோடு எல்லாரும் தனித் தனியாக சிதறுகிறார்கள். வெரா உயிர் பிழைத்து, எழும்போது அவள் ரயிலடியில் ஒரு சிகிச்சை முகாமில் இருக்கிறாள். அவளைத் தவிர ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று அறிகிறாள். அத்தோடு அன்யா அணிந்திருந்த ஸ்வெட்டரின் ஒரு சின்ன பகுதி அவள் கைக்குக் கிடைக்கிறது. வாழ்க்கையின் ஒரே நம்பிக்கையை இழந்தபோதும் வெராவால் உயிரை மாய்த்துக் கொள்ள முடியவில்லை. ஜெர்மானியப் படையால் சிறைபிடிக்கப்படும் அவளை இவான் என்னும் அமெரிக்கர் கண்டெடுத்து, விரும்பி மணம் புரிந்து அமெரிக்கா அழைத்து வருகிறார்.’
அன்யா என்று தன் மகளின் பெயரைச் சூட்டிக் கொண்டு அமெரிக்கா வந்த வெரொனிகாவின் கதை அவளின் மகள்களின் மனநிலையை எப்படி மாற்றுகிறது, வெராவின் உயிரான அன்யா பிழைத்து வந்து அம்மாவைச் சந்திப்பது என்று கதை நல்ல மகிழ்ச்சியான விதமாக முடிகிறது.
புத்தகம் படித்து முடித்த முதல் ஒரு வாரம் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால், வெளியே நடந்து போனால் ஒருவேளை கதையில் வந்தது போல் குளிரில் உறைந்த உடல்கள் இருக்குமோ என்னும் அளவுக்கு என்னைப் பாதித்து விட்டது. Holocaust Surviver என்பார்கள் - இந்த siege of Leningrad Survivorகளும் அது போன்ற ஒரு extreme துன்பங்கள் பட்டவர்கள் தான். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு ஒன்றுமில்லாமல், பேப்பரைச் சுரண்டி தின்பது என்றால்?! அப்பா!! படிக்கவே பயங்கரமாக இருக்கிறதே! லெனின்கிராட் முற்றுகையின் முதல் பனிக்காலத்தில் தான் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரை விட்டார்களாம் - குளிர், பசி, scurvy இவை தான் முக்கிய காரணங்களாம்! முதல் பனிக்காலத்தில் பிழைத்த ஒவ்வொருவரும், உயிருடன் இருக்கக் காரணம் மற்ற இரண்டு பேரின் தியாகத்தால் தானாம் - வெராவின் அன்னை போல, பக்கத்து வீட்டுப் பையனின் அன்னை போல, கடைசி சாப்பாட்டைத் துறந்தவர்கள் பலர் உண்டாம். நிஜமாகவே - அந்த முதல் குளிர் காலத்தில் - இறந்த மனிதரின் மாமிசத்தைக் கூட சமைத்துச் சாப்பிட்ட காட்டுமிராண்டித்தனம், நகரத்தின் சில இடங்களில் இருந்ததுவாம்! வெரா போல தப்பித்தவர்கள் நிறைய பேர். அப்படி நகரத்தை விட்டுப் பிரியாமல் இருந்த சிலரை அரசாங்கம் வெயில் காலத்தில் அப்புறப் படுத்தி, மேற்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பிவிட்டார்களாம். அத்தோடு, அடுத்த வருடம் கூட லெனின்கிராட்டில் இருக்க விரும்பிய மனிதர்களுக்கு, அரசாங்கமே விதைகள் கொடுத்து காய்கறி வளர்க்க உதவி செய்தார்களாம். முதன் முறையாக, சோவியத் ரஷ்யாவில், தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் காய்கறி வகைகளைத் தானே பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டதாம். இது தவிர தனியாக கூட்டுறவுத் தோட்டங்களிலும் வந்து விவசாயம் செய்ய மக்கள் அழைக்கப் பட்டார்களாம்.
வேனிற் காலத்திலேயே, பொதுக் கழிப்பிடங்கள், பொதுக் குளியலறைகள் கட்டப்பட்டு, அடுத்தடுத்த பனிக்காலங்களுக்கு லெனின்கிராட் தயார் செய்யப்பட்டது. மொத்தம் நான்கு வருடங்கள் நீடித்த லெனின்கிராட் முற்றுகை, முதல் வருடம் மட்டும் தான் பல உயிர்களைப் பலிவாங்கியது. கடைசியாக நான்காவது வருடம் அந்த ஊரில் இருந்த மக்களுக்கு அரசாங்கம் ‘medal for the defence of Leningrad’ என்று விருது வழங்கிக் கௌரவித்ததாம்!
The Winter Garden - முழுக்க முழுக்க கற்பனைக் கதை என்கிறார் ஆசிரியர். என்னால் ஒப்ப முடியவில்லை. ஏதாவது ஒரு வெராவையோ, அல்லது, ஒரு சில வெராக்களுடனோ பேசாமல், எப்படி இப்படி ஒரு கதையை எழுத முடியும் ? வெறும் ஆராய்ச்சி, வரலாற்றுக் கதைகள் வைத்து எப்படி இப்படி ஒரு காவியத்தைப் படைக்க முடியும்?
புத்தகம் படித்து முடித்தபின் “The Siege of Leningrad” குறித்து வேறு கதைகள் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன், வேறு எதுவும் கிடைக்கவில்லை!

Tuesday, March 08, 2011
உலக மகளிர் தினம்…
எங்கள் புது டீமில் மொத்தமே மூன்று பெண்கள் மட்டும் தான்- அதிலும் என்
ஊரில் இருக்கும் டீமில், நான் மட்டும் தான். எனக்கு முன்னால் இந்த
டீம்மில் இருந்த மற்ற பெண்களுக்கும் சேர்த்து ஐந்து பேருக்கு இன்று காலை
ஒரு வாழ்த்து மடல் அனுப்பினேன். நான் முன்னர் இருந்த டீமிலும் ஒன்றிரண்டு
பேருக்கு நானே அழைத்து மகளிர் தின வாழ்த்துக்கள் சொன்னேன் - வந்த பதில்கள்
மிக்க ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப பேருக்கு இப்படி ஒரு தினம் இருப்பது
தெரியவில்லை. பல பேருக்கு மகளிர் தினம் எல்லாம் எதற்கு கொண்டாட வேண்டும்
என்பது மாதிரி எண்ணம். ஒரு சிலர் ஆர்வமாக திரும்பச் சொன்னார்கள்..
உலக மகளிர் தினம் - முதன்முதலில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தொழிற்சாலைகளில் வேலை செய்த போது, அவர்களுக்கும் ஆண்களுக்குமான சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருந்தது. பெண்கள் பலமில்லாதவர்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கான சலுகைகள் மறுக்கப்பட்டன. இதை எல்லாம் எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர்களின் நாள்.. ஆனால், இன்றைக்கும் கூட பல இடங்களில் இந்த வித்தியாசம் தெரியத்தான் செய்கிறது.
நண்பர் ஒருவர் அவரின் டீம்மை உருவாக்கும்போது, ‘நல்லவேளை என்னுடைய டீமில் பெண்களே இல்லை’ என்றார். ‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்றேன். ‘இல்லீங்க, நான் தான் பார்க்கிறேனே, மத்த டீம்ல உள்ள பொண்ணுங்க சரியா நாலு மணியானா கிளம்பிப் போயிடறாங்க.. எப்ப பார்த்தாலும் வீட்டுக்குப் போன் போட்டு பேசிகிட்டே இருக்காங்க.. காலைல 8:00 மணிக்கு மீட்டிங் வச்சா வரவே மாட்டேங்கறாங்க.. ‘
குற்றப்பத்திரிக்கையின் அளவு நீண்டுகொண்டே போனது. என்னுடன் வேலை பார்க்கும் 10 ஆண்களில் மூன்று பேர் 8 மணிக்கு மீட்டிங் வைத்தால் வர மறுப்பவர்கள் தான்.. ஒருவருக்கு அது ரொம்ப அதிகாலை, மற்ற இருவருக்கும் தத்தம் பிள்ளைகளைப் பள்ளியில் விடும் நேரம் அது தான். வேறு மூன்று பேர் மாலை நான்கு மணிக்குக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொறுப்பில் இருப்பதால் அந்த நேரம் மீட்டிங் வைத்தால் ஒப்புக் கொள்ள முடியாது. ‘இதெல்லாம் ஒரு பிரச்சனையா, அப்புறம் அவங்க பெத்த பிள்ளைங்களை அவங்க தானே பார்க்கணும்’ என்றால், ‘அப்ப வீட்லயே இருக்கலாம் இல்ல, இல்லைன்னா ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்தா அந்தப் பிள்ளைங்க கூடவே வீட்டுக்கு வந்துடலாம்’ என்று ஐடியா கொடுக்கிறார்!
எனக்கு நினைவு தெரிந்து, நான் வேலைக்குப் போகத் தொடங்கிய வருடம் முதல், என்னுடைய அம்மா தொடர்ச்சியாக இந்த மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லுவார். ஆரம்பத்தில், நான் அதைப் பெரிதாக நினைத்தது இல்லை.. ‘அம்மா, ஆண்கள் தினம், பெண்கள் தினம் வேறயா.. என்னை நான் வேலை செய்யுமிடத்தில் எந்த வித்தியாசமும் பார்க்காம நடத்துறாங்க.. இதை எல்லாம் ஏன் நான் கொண்டாடி அதை நானே மறுத்துக்கொள்ளணும்?’ என்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். முக்கியமாக, பெண்கள் தினம் என்றால், அது குறித்து எல்லா அழகு சாதனக் கடைகள், துணிக்கடைகளில் தள்ளுபடி விற்பனை களைகட்டும்போது, இது போன்ற ஒரு fancy தினத்தைக் கொண்டாடுவது ஒரு முட்டாள்தனம் என்று நினைத்ததுண்டு..
இன்று நானே வலிய போய் உடன் பணிபுரியும் பல தோழிகளுக்கு வாழ்த்தும் போது தான், என்னை விட வயதிலும், பதவியிலும், பல படிகள் மேலே இருக்கும் அவர்கள் கூட இது போன்ற தப்பான அபிப்ராயங்களில் இருப்பது புரிந்தது… என்னாலானது, இன்றைக்கு ஒரு நாலு பெண்களுக்கு உலக மகளிர் தினத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நாள் முடியும் முன் இன்னும் சிலருக்கும் சொல்ல வேண்டும்..
இந்த வருடம், உலக மகளிர் தினத்தின் நூற்றாண்டு விழாவாம்!
படிக்கும் தோழிகளுக்கு - உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

Saturday, January 29, 2011
கடைசியாக…
கடந்த ஒரு வருடமாக இந்தப் பக்கம் நானே வரவில்லை.. வேறு யாராவது வந்து போகிறீர்களா ?
நியூயார்க்கிலிருந்து திரும்பி வந்து கணவரோடு சேர்ந்து வாழத் தொடங்கியபோது, வாழ்க்கை ரொம்ப வேகமாகப் போகத் தொடங்கிவிட்டது.. முதலில் வீடு மாறினோம், அப்புறம் தோட்டம் போடத் தொடங்கினோம், பிறகு வேலை மாறினேன் (மாறினோம்), கொஞ்ச நாள் சமையலில் நேரம் போனது. பின்னர் புதுப் புதிதாக வீடியோ கேம் விளையாடக் கற்றேன். நிறைய புத்தகம் படித்து முடித்தேன். இதோ புதுவருடம் தொடங்கிய போது, எல்லாமே பழகிய விசயங்களாகி, பழசாகி, போரடிக்கத் தொடங்கிவிட்டது.
அடுத்த திட்டம் - நான் ஒரு half-marathon ஓடப் போகிறேன்.. Team In Training என்று ஒரு இயக்கம். என்னை மாதிரி ஏதேனும் செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஓட வைக்கிறார்கள். என்ன, அவர்களின் மற்றொரு இயக்கமான புற்று நோயாளிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு உதவும் Leukemia & Lymphoma Society க்கு பணம் சேகரித்துக் கொடுக்க வேண்டும்.
நான் தேர்ந்தெடுத்திருப்பது Avenue of Giants - Half Marathon - இது எங்கள் ஊருக்கு மேற்கே Eureka என்ற ஊரில் நடக்கிறது. இதில் பங்கு கொள்ள நான் $ 2,400 சேர்த்துக் கொடுக்க வேண்டும். எப்படிச் செய்வது என்று பார்க்க வேண்டும்.
முதலில் போன புதன்கிழமை அவர்களின் information meeting இருந்தது. வீட்டிலிருந்து 30 நிமிட தொலைவு என்ற போதும், வருவது வரட்டும் என்று கிளம்பிப் போய்விட்டேன். அவர்கள் பேசிய விதத்தில் இந்த 2400 டாலர் பயமுறுத்திய போதும் தைரியமாக பேர் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்ததாக நேற்று - வியாழக்கிழமை மாலை இங்கிருந்து 1 மணி நேரத் தொலைவில் அடுத்த மீட்டிங்க்.. இது ஒரு kick off meeting. இதற்குப் போகணுமா வேண்டாமா என்று ரொம்பவே யோசித்து, எப்படியும் தினப்படி பொழுதுபோகாத தன்மையைப் போக்கத் தான் இந்த முடிவே.. இதையும் நான் முழுமையாக செய்யாவிட்டால் எப்படி என்று கிளம்பிப் போனேன்.
இவர்கள் இந்த ஓடுதலையும், ஓடுவதற்கான பயிற்சியையும் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறார்கள் (1942 முதல் என்கிறார்கள்).
1. ஓடுதல் - பாதி மெரத்தான் (marathon என்பதை அப்படித் தான் சொல்லவேண்டுமாம்) அல்லது முழு மெரத்தான்
2. நடத்தல் - பாதி அல்லது முழு மெரத்தான்
3. மலை ஏறுதல்
4. ட்ரையத்லான் (நீச்சல், ஓட்டம், சைக்கள் ஓட்டுவது எல்லாம் ஒரே சமயத்தில்)
5. சைக்கிள் ஓட்டுவது.
என்று ஐந்து வகையான விளையாட்டுக்கள்.
ஓடுவது /நடப்பதற்கு மட்டும் நிறைய கூட்டம் கூடுவதால், அதை மட்டும் இரண்டு குழுவாக பிரித்து south bay team, peninsula team என்கிறார்கள்.. நாங்கள் இருக்கும இடம் தெற்கில் வருதவதால் - south bay.
South Bay Teamஉக்காக மட்டும்:
1. ஒரு டீம் காப்டன்
2. 2 காப்டன்கள் - தண்ணீர் கொடுக்கும் அணிக்கு
3. 2 காப்டன்கள் - ஆங்காங்கே வழியும் நீளமும் குறிக்க
4. 1 web captain - website management உக்கு
5. 1 கோச் - run coach
6. 3 walk coach
7. 2 காப்டன்கள் - நிதி சேர்க்கும் வழிமுறைகளுக்கு உதவ
8. 5-6 mentorகள்
என்னைப் போல் குழுவில் சேரும் ஒவ்வொருவருக்கும் ஒரு மென்டர் கொடுக்கிறார்கள். என்னுடைய மென்டருக்கு ஒரு 5-6 mentoree இருக்கிறார்கள் - அதாவது அவர்கள் ஒரு 5-6 பேரைப் பார்த்துக் கொள்கிறார்கள். புது ஆட்களான என் போன்றவர்களுக்கு, நிதி திரட்ட என்னென்ன செய்யலாம், டீம்மில் ஏதாவது வேண்டும் என்றால் எப்படிக் கேட்பது என்று அந்த organization உக்கு ஒரு முகமாகவும் அதே சமயம் எங்களுக்கு ஒரு முதல் துவக்கப் புள்ளியாகும் இவர்கள் உதவுவார்கள்.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த முடிவு சரிதானா என்று யோசித்து நான் விலகுவது என்றாலும் செய்யலாம்.. ஒரு மாத பயிற்சி எப்படிப் போகிறது என்று முதலில் பார்க்க வேண்டும்..
வாராவாரம் இரண்டு நாள் குழுப் பயிற்சி. மீதி மூன்று நாள் சொந்தமாகப் பயிலச் சொல்கிறார்கள். இரண்டு நாள் ஓய்வு.
நான் ஓடப் போகிறேன் என்றதும் தானும் வருவதாக சொன்ன என் கணவர், இதை ஒரு சாக்காக வைத்து நான் பதிவெழுதத் தொடங்கினால் என்ன? என்றார்.. முதலில் இதையெல்லாம் எழுதுவார்களா என்று யோசித்தாலும்.. இதோ பதிவு எழுதியாச்சு.. இந்த முறை எல்லாவற்றையும் ஆங்கிலத்திலும் எழுதப் போகிறேன் இந்த இடத்தில் ஆங்கிலப் பதிவைப் பாருங்க..
ஒவ்வொரு பயிற்சியைப் பற்றியும் தெளிவாக எழுதப் போகிறேன். அடுத்தடுத்து என்னென்ன செய்தோம் என்பது உட்பட…
நேற்றைய மீட்டிங்கில் சுப்பு என்ற தெலுகு நண்பர் கிடைத்தார். சிலிக்கான் பள்ளத்தாக்கின் ஒரு பிரபல கம்பனியில் வேலை செய்கிறாராம். கம்பனி சார்பாக ஓடப் போகிறாராம் (நிதி திரட்டுவது மட்டும் அவர் தான் சேர்க்க வேண்டும்!) இப்படிக் கூட இருக்கிறார்களா என்று ஆச்சரியமாகி விட்டது..
எப்படியோ.. என்னுடைய பிச்சை பக்கம் இங்கே ! அமெரிக்க வாசிகள் முடிந்தால் பணம் கொடுங்க.. நான் எதிர்பார்த்த மாதிரி இது புது விசயமாக இருக்கிறதா என்று பார்ப்போம்.. அத்தோடு, இந்த சாக்கிலாவது நான் தொடர்ச்சியாக இந்தப் பக்கம் வருகிறேனா என்றும் பார்ப்போம்!

Thursday, December 31, 2009
ஒஆஹூ - Paradise of America
‘விடுமுறைக்கு ஹவாய் போகலாம்!’ என்று கண்ஸ்(ஹஸ்பண்ட்) சொன்ன போது எனக்கு
ஹவாய் எந்தத் திசையில் இருக்கிறது என்று கூடத் தெரியாது. Oahu Revealed
(Andrew Dougharty) என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டுவந்து கையில் கொடுத்து,
‘படிச்சி பார்த்து எங்க எல்லாம் போகலாம்னு நீயே ப்ளான் பண்ணுவியாம்’ என்று
தனியாக விட்டுவிட்டார் நம்ம சரிபாதி..

வரலாற்றுப் புத்தகம், கம்ப்யூட்டர் புத்தகம், கதைப்புத்தகம் எல்லாம் படித்திருக்கிறேன். ஊர்சுற்றிப் பார்க்க புத்தகம் படிப்பது இது தான் முதன் முறை.. ஆனாலும் அந்த டௌகார்தி மிக அழகாகவே கதை எழுதி இருக்கிறார். ஹவாய்த்தீவுகள் - மொத்தம் நான்கைந்து குட்டிக் குட்டித் தீவுகள், பசிபிக் பெருங்கடலில் அமெரிக்கக் கண்டத்திலிருந்து கிட்டத் தட்ட 3000 மைல் தொலைவில் இருக்கின்றன. எங்க ஊரிலிருந்து பறக்க ஐந்து மணி நேரம், இது தான் இருக்கிறதிலேயே மிகக் குறைவான நேரம் என்று நினைக்கிறேன். 1800களில் அமெரிக்காவின் ஒரு மாநிலமாக தன்னை இணைத்துக் கொண்ட காரணத்தால், போய் வர புதிதாக விசா ஒன்றும் வேண்டியிருக்கவில்லை.
ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து நிறைய பேர் வந்து போகிறார்கள். நாங்கள் போன இடம் ஒஆஹூ என்ற ஒரே தீவு மட்டும் தான். சின்ன தீவு, காரில் இரண்டு மணி நேரத்தில் சுற்றி வந்துவிடக் கூடிய அளவுக்குச் சின்னது. போய் இறங்கியவுடனே அமெரிக்காவுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறது. சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பசிபிக் பெருங்கடலில் வெடித்துச் சிதறிய ஒரு எரிமலையிலிருந்து விழுந்த பூமித் துளிகளான இவை சின்னச் சின்னத் தீவுகளாக உருவெடுத்து, மெல்ல நிறமும் வடிவமும் மாறி, செழிப்பான tropical பூமியாக இருக்கின்றன. விமானத்திலிருந்து இறங்கியவுடனே வெயில் கொளுத்துகிறது. ஆங்காங்கே தென்னை மரங்களும், பச்சை மலைகளும், நீலமும் பச்சையுமாக மயில் கழுத்து நிறத்தில் கடலும் என்று கேரளாவை நினைவுப் படுத்துகிறது. கேரளா போலவே இதையும் பூலோக சொர்க்கமாகத் தான் விளம்பரப்படுத்துகிறார்கள் - Paradise Islands..

கடலோரமாக வண்டி ஓட்டிக் கொண்டே போனால், மணல் கண்ட இடமெல்லாம் கடற்கரை தான். ஓரங்களை விட்டுவிட்டால், நடுப்பகுதியில் எல்லாமே மலை.. கொஆலு(Koalu), காஆலா(Ka’ala), என்று விதம் விதமாக மலைகள். மலைமேல் ஏறி கடலைப் பார்ப்பது ஒரு முக்கியமான சுற்றுலாச் செயல்(activity). ஒஹாஹூ தீவை நான்கு பகுதியாக பிரித்துச் சுற்றிப்பார்க்கச் சொல்லியது நான் படித்த புத்தகம் - வைக்கீகீ மற்றும் தலை நகரமான ஹொனுலூலூ இருக்குமிடம், கிழக்குக் கரை, வடக்குக்கரை, மத்தியத் தீவு.
வைகீகீ மற்றும் ஹொனுலூலூ இருக்குமிடங்கள், முக்கிய சுற்றுலாப் பிரதேசங்கள். இங்கே கடல் அத்தனை கொந்தளிக்காமல் அமைதியாக இருக்கிறது. குழந்தைகள் கூட கடலில் நீச்சலடிக்கிறார்கள். நாங்கள் அதிகமாக இந்த இடத்தில் இருக்கவே இல்லை.. கூட்டம், வண்டி நிறுத்துமிடமின்மை, போன்றவை முக்கிய காரணங்கள்..
கிழக்குக் கடலோரத்தில் மிக அழகான, காவியமான கடற்கரைகள் பல இருக்கின்றன. முக்கியமாக ஒஆஹூவின் மண்ணின் மைந்தர்களும், சிலபல கோடீஸ்வரர்களும் இருக்கும் இந்தப் பகுதி, நம்ம ஊர் கிழக்குக் கடற்கரை சாலைப் பகுதியை நினைவுப்படுத்துகிறது. லானிகாய்(Lanikai) என்று ஒரு பீச்.. இரண்டு குட்டி தீவுக்குழந்தைகள், வெள்ளை மணல், சுத்தமான தண்ணீர், என்று லானிக்காய் ஏதோ திரைப்படங்களில் வரும் அமைதியான மணல் பிரதேசம்..
கிழக்குக் கடலோரத்தின் முக்கிய சுற்றுலாத்தலம் - ஹனௌமா வளைகுடா(Hanouma Bay). கடல் நிலத்துக்கு நடுவில் புகுந்து பாதுகாப்பான வளைகுடாவை உருவாக்கி இருக்கும் இந்தப் பகுதியில், தண்ணீர் ஓரளவுக்கு அமைதியாக இருக்கிறது. நிறைய கடற்பாசி (coral reefs) இருப்பதால், மீன்கள் இதைத் தன் வாழ்விடமாகக் கொண்டிருக்கின்றன. நீருக்கும் பார்க்கும் கண்ணாடியுடன் கூடிய ஒரு மாஸ்க்கும், வாய்வழியாக மூச்சுவிட தனியாக ஒரு குழாயுமாக தண்ணீரில் இறங்கி நீச்சலடித்துக் கொண்டே இந்த மீன்களைப் பார்க்க இது நல்ல இடம். வார இறுதிகளில் குழந்தை குட்டியோடு இந்த snorkling செய்ய இந்த ஊர் மக்கள் வந்து விடுகிறார்கள். எப்போதுமே சுற்றுலாவாசிகளின் கூட்டமும் இருக்கிறது. நீச்சலே தெரியாமல், இந்தக் கடலில் இறங்கி மிதக்கக் கற்றுக் கொண்டு நான் கூட நிறைய மீன் பார்த்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. கொஞ்சம் நீந்தத் தெரிந்தால் கடல்ஆமைகளைப் பார்த்திருக்கலாம்.. ம்.. என்ன செய்ய.. ‘அடுத்தமுறை பார்க்கலாம் ஆமைகளே!’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.. (ஆமாம், இராமேஸ்வரத்தில் கூட நிறைய கடல்பாசி இருப்பதாக சொல்றாங்களே, அங்க snorkeling பண்ண முடியாதுங்களா?)

கிழக்குக் கரையோரமாக வண்டி ஓட்டிக் கொண்டே வந்தால், அப்புறம் அமெரிக்க ராணுவத்தின் கடற்ப்டைப் பிரிவு ஒன்று இங்கே இருக்கிறது. அதெல்லாம் அவர்களின் குடிமக்களுக்கே அனுமதி மறுப்பாதலால், தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டே அப்படியே பயணித்து வடக்குக் கரை வந்தால், ‘அப்பா! இத்தனை நேரம் பார்த்த கடலா இது?!’ என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தப் பக்கத்து கடல் அலைகள் மிகப் பெரியவை. குளிர்காலத்தில் தான் பெரிய பெரிய அலைகள் வந்த வண்ணம் இருக்குமாம் இங்கே. ஒஆஹூவின் வடக்குக் கரைதான் உலகத்திலேயே பெரிய அலைகளின் இடமாம்! Surfing எனப்படும் நீர் விளையாட்டில் வல்லவர்கள் இந்தப் பெரிய அலைகளுக்காகவே குளிர்காலத்தில் வடக்குக் கரையில் முகாமிட்டுவிடுவார்களாம். நாங்கள் சென்றிருந்த ஐந்து நாட்களில், மூன்று நாட்கள் - கிறிஸ்துமஸை ஒட்டி - முப்பதடி உயர அலைகள் வந்தவண்ணமிருந்தன. இந்தத் தீவுவாசிகள் மகிழ்ச்சியோடு வந்து அலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு, surf செய்தவண்ணமிருந்தனர்.

இந்த நாட்களில் வடக்குக் கரையோர கடற்கரைப் பகுதிகள் எல்லாமே மூடப்பட்டுவிடுகின்றன. நீச்சல் தெரிந்தால் மட்டும் தான் இதில் உள்ளே போக அனுமதி கிடைக்கும். சாண்டாவின் பரிசு என்று சொல்லி மகிழ்ச்சியோடு அலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். இந்த high surf பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது surfing செய்வதற்காகவே ஒஆஹூ வந்த கணவரின் நண்பர், ‘உங்க நாட்ல கூட இது மாதிரி சில தீவு இருக்காமே, அதுவும் உலகின் முதல் 100 surfsiteகளில் ஒன்று தெரியுமா?’ என்றார். அந்தமான் தீவுகளைப் பற்றிய இந்த இரகசியம், நம்ம சுற்றுலாத் துறைக்குத் தெரியுமா?
மத்திய ஒஆஹூவின் சிறப்பு அவற்றின் மலைகளின் அழகு தான். இதில் அமெரிக்க ராணுவம் மற்ற இரண்டு படைகளான வான்படை, தரைப்படைக்கான தளங்களை அமைத்துக் கொண்டுள்ளது போலும்.. இங்கே அதிகமாக மலைகள் மட்டும்தான்.

டைமண்ட் க்ரேட்டர்(Diamond Crater) என்னும் எரிமலையின் வாய்ப் பகுதிக்கு ஏறுவது இன்னுமொரு முக்கிய சுற்றுலாச் செயல். மிக உயரமான இந்தச் சிகரத்தில் ஏறிப் பார்த்தால் ஒஹாஊவின் கடலும், தலைநகரமும் மிக அழகான காட்சியாக விரிகின்றன. இன்னும் இதே போல் கோகோ க்ரேட்டர்(Koko Crator), கோகோ ஹெட்(Koko Head), பாலி மலைகள், என்று காடும் மலையுமான இடங்கள் நிறைய இருக்கின்றன.
நாங்கள் பார்க்காமல் விட்ட இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் பேர்ள் துறைமுகம்(Pearl harbour). இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய விமானங்களால் அடிவாங்கிய இந்த இடத்தை ஒரு அருங்காட்சியகமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் (அமெரிக்க சுற்றுலாத்துறைக்குச் சொல்லியா தரவேணும்?!).. இது தவிர, இன்னும் ஒழுங்காக நீச்சல் தெரிந்தால், கிழக்கிலும் வடக்கிலுமாக பல இடங்களில் அழகாக snorkeling, படகு விடுவது என்று பலவும் செய்ய முடியுமாம். அடுத்த முறை இங்கே வந்தால் ஒழுங்காக நீச்சல் கற்றுக் கொண்டு வரவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டிருக்கிறேன்..

ரொம்ப ஆசைப்பட்டு பார்க்க முடியாமல் போனது ஆமைகளைத் தான். ‘கடலோரத்திலேயே வெயில் காய்ந்து கொண்டிருக்கும்’ என்று அந்தப் புத்தகத்தில் இருந்தது. எல்லா கடல் ஓரங்களிலும் தேடிப் பார்த்து நொந்துபோய் புத்தகத்தைப் பார்த்தால், ‘வெயில் காலத்தில்’ என்று முதலிலேயே போட்டிருக்கிறார்கள்.. ம்ம்.. திரும்ப வெயிலில் வர வேண்டியது தான்.
இத்தோடு ஹவாய் நாட்டு மக்களின் நாகரிடம், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியெல்லாம் நிறைய இடங்கள் இருக்கின்றன. Polynesian - என்னும் இனத்தைச் சார்ந்த மக்கள் இந்த ஊரின் பூர்வகுடிகள். பசிபிக் பெருங்கடலில், ஹவாய் தாண்டி, ஆஸ்திரேலியா வரையிலான சில தீவுகள் எல்லாம் இந்த Polynesia நாகரிகத்துக்குள் வருகிறது. நியூஸிலாந்து, தஹிதி, சமோஆ, மார்குஸாஸ் தீவுகள் என்று பல தீவுகளைச் சொல்கிறார்கள். இதைப் பற்றிய showக்கள் நடத்தும் ஒரு சுற்றுலாத்தலமும் இருந்தது - polynesian cultural center. நாடகங்கள், பாட்டும் நடனமும் மட்டும் தான் என்பதால் இங்கும் நாங்கள் நிற்கவில்லை.
நாங்கள் சென்ற நேரம் ஒபாமா வேறு குடும்பத்தோடு வந்திருந்தார். நம்ம ஊர் மந்திரிகள் மாதிரியே, அவர் தங்கி இருந்த தெருவைப் பாதுகாப்பு கருதி மூடிவிட்டார்களாம். அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த கைலுவா கடற்கரையையும் கடல்பகுதியையும் மூடி வைத்ததை ஒஆஹூ மக்கள் ரொம்பவே கண்டித்தார்கள் - ‘நல்ல surf நேரத்தில் இப்படி ஒரு குடும்பத்தோடு surf செய்யும் பீச்சை மூடிவைத்தால் எப்படி?!’ என்று ரொம்ப கோபம்.. அதே சமயம், அமெரிக்க கிழக்குக் கரை பூராவும் பனிப்புயலில் மூழ்கி இருக்கையில் குடியரசுத் தலைவரும் அவர் குடும்பமும் இங்கே வெயிலில், பீச்சில் காய்வதைப் பார்த்து இன்னும் நிறைய பேர் ஹவாய்ச் சுற்றுலா வருவார்கள் என்ற மகிழ்ச்சியும் இருக்கிறது.
திரும்ப வேண்டிய நாள் வந்த போது தான் நிஜமாகவே சொர்க்கத்திலிருந்து திரும்புவது போல் மனமே வரவில்லை.. இன்னும் ரெண்டு மூணு நாளாவாது இருந்துட்டு போகலாமே! என்று இருவருமே நினைத்தோம். டிக்கட் மாற்ற வழியிருந்திருந்தால், ஒருவேளை இருந்திருப்போம்.. ம்ம்,.. அடுத்தமுறை நீச்சல் கற்றுக் கொண்டு வெயில் காலத்தில் கடல் அமைதியாக இருக்கும்போது வரவேண்டும்…..
இன்ன பிற:
1. தென்னை மரங்கள் நிறைய இருந்தாலும் தேங்காய்களைக் காணவில்லை. தேங்காய்கள் இருந்து, யார் தலையிலாவது விழுந்து வைத்தால், அது ஒரு liability (அதாவது, அந்த ஆளின் மருத்துவச் செலவு பூராவும் தென்னை மரம் வளர்ப்பவர் தர வேண்டுமாம்!) என்று மரங்களில் காய் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்.
2. கடற்கரைப் பகுதிகளை பல காலங்களுக்கு முன்பிருந்தே யார் யாரோ வளைத்துப் போட்டுக் கொண்டாலும், அரசாங்க உத்தரவுப்படி எல்லா கடற்கரையும் மக்களுக்கானது. Private beach என்று ஏதுமில்லை. அப்படிச் சொந்தம் கொண்டாடுபவர்களும் தங்கள் நிலத்தில் வண்டி நிறுத்த மட்டும் தான் பணம் வாங்க முடியும்.
3. நம்ம ஊரில் கூட விளையும் பூவான plumeria (தமிழில் என்ன? எங்க வீட்டில் ஏதோ நாக கன்னிகை மாதிரி ஒரு பேர் சொல்லுவாங்க, தப்புன்னு நினைக்கிறேன்) தான் இந்த ஊரின் முக்கிய பூ போலும். அதை கலர் கலராக ப்ளாஸ்டிக், இரும்பு, தங்கம் என்று செய்து விற்கிறார்கள். பெண்கள் காதில் பூ வைப்பது தான் இந்த ஊர்க்(ஊரிலும்) கலாச்சாரமாம்! இடது காதில் வைத்தால் திருமணம் ஆன பெண், வலது காது என்றால் இன்னும் திருமணமாகாத பெண். கூந்தல் நடுவில் பூ வைத்துக் கொள்வது, குழப்புவதற்கான வழியாம்!
4.ஆவா அல்லது காவா என்று ஒரு பானம் - மெல்லிய போதை கொடுக்கும், relaxing பானமாம். ஆனால் இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். கொட்டாங்குச்சியில் ஊற்றித் தரும் இதை பொதுவாக யாராவது வீட்டுக்கு வந்தால் கொடுப்பார்களாம். ஆவா மர வேரிலிருந்து வருகிறது இது. எல்லா polynesian தீவுகளிலும் இது கிடைக்கும் போலிருக்கிறது.
5. அன்னாசி விளையும் செழிப்பான பூமி பக்கத்து லனாய்த் தீவில் இருக்கிறது. அது தவிரவும் இந்த ஒஆஹூவிலும் நிறைய அன்னாசி விளைகிறது. ஜேம்ஸ் டோல் வந்து இந்த அன்னாசிகளை அப்படியே mainlandஆன அமெரிக்காவுக்கு அனுப்பினால் கெட்டுப் போய்விடும் என்பதால் கேனில் போட்டு அனுப்ப வழி செய்திருக்கிறார். அமெரிக்காவின் Dole Pine Apple Juice பூராவும் இங்கிருந்து தான் செல்கிறது
6. அன்னாசியை மூலப் பொருளாக வைத்துச் செய்யும் Pina Colada என்னும் பானத்தை வைத்து நிறைய காக்டெய்ல்கள் செய்கிறார்கள். மாய்டாய் என்பது அவற்றில் முக்கியமான, famousஆன ஒன்று. ‘இங்க மட்டும் தான் கிடைக்கும், tropical drink’ என்று நன்றாகவே விளம்பரப்படுத்துகிறார்கள்.
7. ஹவாயின் மொழி மிகச் சுலபமான மொழி, a, e, i, o, u, மற்றும், ஏழு மெய்யெழுத்துக்கள். எல்லா இடங்களின் பெயரும் அதை ஒட்டித் தான் இருக்கின்றன. இந்தத் தீவுகளின் சரித்திரமும் அரசர்கள், மக்கள், சாதிப் பிரிவினைகள் என்று நம் வாழ்க்கை முறை போலத் தான் இருக்கின்றன. இந்தச் சரித்திரம் படித்துவிட்டு அடுத்தமுறை போக வேண்டும்…

Wednesday, December 09, 2009
மீண்டும்..
“கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நீ சுத்தமா மறந்துட்ட.. ஒரு போன் கால் இல்ல, இமெயில் அனுப்பினா பதில் அனுப்ப மாட்டேங்கிறே.. என்னை மொத்தமா அவாய்ட் பண்றா மாதிரி இருக்கு!”என்னடா நம்ம நினைச்சதை எல்லாம் ஒருத்தன் சொல்லி இருக்கானேன்னு யோசிக்கிறீங்களா? இதைச் சொன்னது வேற யாரும் இல்லை… என்னோட அருமைக் கணவனார் தான்.
திருமணம் முடிந்து நான் திரும்பிப் போனது நியூயார்க் நகரத்துக்கு. நண்பர்களில் பலர், திருமணமாகி நான் கணவனுடன் வாழ நியூயார்க் மாறி வந்துட்டதாக நினைத்தார்கள். உண்மையில், இங்கே அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு வேறு வழியில்லாமல் தனியாக நியூயார்க் சென்று குடியேற வேண்டிய கட்டாயம். அந்த ப்ராஜக்ட் ஒரு பயங்கரமான ப்ராஜக்ட், சரியான சாப்பாடு கிடையாது, தூக்கம் கிடையாது என்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய நிலைமை…
காலை ஒன்பது மணிக்கு மீட்டிங்குகள் தொடங்குமுன் அலுவலகம் சென்று அமர்ந்தால், மாலை ஆறு மணி வரை பல்வேறு நாடுகளில், பல்வேறு நேர காலத்தில் வேலை செய்யும் பலருடன் பேசி முடித்து, ஒரு வழியாக சொந்த வேலை - அதாவது, நான் பொறுப்பேற்றிருக்கும் வேலை செய்யத் தொடங்கவே இரவாகி விடும். சராசரியாக இரவு ஒன்பது பத்து மணிக்குத் தான் அலுவலகம் விட்டு வெளியேறுவதே.. அதற்குப் பிறகு எங்காவது போய்ச் சாப்பிட்டுவிட்டு, அக்கடா என்று வீடு வந்தால், மீண்டும் இந்தியா டீம் இரவு பன்னிரண்டு மணிக்கு அலுவலகம் வந்து கூப்பிடத் தொடங்கி விடுவார்கள்.. இதற்கு நடுவில், எனக்கு மூன்று மணி நேரம் பின்னால் இருக்கும் கணவருடன் எங்கிருந்து பேசுவது?!
அறைத் தோழிகள் என்னை எதிர்பார்ப்பதை மொத்தமாக நிறுத்தியே விட்டார்கள். அலுவலகம் செல்லாத / கணவர் ஊருக்குப் பறக்காத ஏதேனும் ஒரு சனி, ஞாயிறுகளில் என்னைப் பார்க்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். பெரும்பாலும், மாதத்தின் மூன்றாம் தேதி வாடகைப் பணம் தர வீடு வருவேன். மற்ற நாட்கள் எல்லாம் நான் ஏதோ பக்காத் திருடன் மாதிரி வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தேன்.
அலுவலகம், கான்பரன்ஸ் கால், சாதா கால், இமெயில், வேலையைப் புரிந்து கொள்வது, சொல்யூசன்(தமிழில்?) டிசைன் செய்து இந்தியக் குழு புரிந்து கொள்ள உதவுவது, அவர்கள் புரிந்து வேலை செய்ய நேரம் கொடுத்துப் பார்த்து, அது நடக்கவில்லை என்றால் மீண்டும் நானே கையில் எடுத்து வேலை செய்வது… பயங்கர குழப்பமான நாட்கள் அவை.. யாருடனும் பேச/ படிக்க, எழுத வாய்ப்பில்லாமலே போய்விட்டது..
ஒருவழியாக அந்த ப்ராஜக்ட் வெற்றிகரமாக முடிந்த பின்னர் இதோ இப்போது மீண்டும் கலிபோர்னியாவில், ஒருவழியாக கணவருடன் குடியேறி இங்கும் ஒரு ப்ராஜக்ட் கிடைத்து.. கடைசியாக பழையபடி அலுவலக நேரத்தில் ப்ளாக் எழுதிக் கொண்டு..
ஆமாங்க, இப்பத்தைய ப்ராஜக்ட் போன ப்ராஜக்டுக்கு நேர் எதிர்மறை.. வேலை நேரம் காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து வரை மட்டுமே.. வேலை, வேறு யாரோ செய்பவற்றை மேற்பார்வை பார்க்கும் வேலை.. சொல்லப் போனால், மேற்பார்வை பார்ப்பவருக்கு உதவும் வேலை.. ‘வெட்டி வேலை!’ என்று சத்தம் போடுவது இதற்கு முன்னால் இந்த வேலையைப் பார்த்த தோழி! ..
நிம்மதியாக அலுவலகம் சென்று நிம்மதியாக வீடு வந்து, நிறைய நேரம் இருப்பது போல் இருக்கிறது.. இப்போதைக்கு இந்த அதிக நேரத்தை நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன், பார்க்கலாம் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று..!
மற்றபடி வேறு முன்னேற்றம் ஏதுமில்லை.. கிடைத்திருக்கும் அதிக நேரத்தில் எப்படி வாழ்க்கையை முன்னேற்றுவது என்று கண்டுபிடிக்க வேண்டும்.. நிறைய திட்டங்கள் இருந்தாலும், எதுவும் செய்படுத்தப்படவில்லை.. வாழ்க்கையில் முதன்முறையாக, தினம் ஒரு மணி நேரத்துக்கு மேல் சமையலறையில் செலவழிக்கிறேன்(பாவம் Mr. husband).. இன்னும் எத்தனை நாட்கள் இது என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்..
Friday, July 24, 2009
‘இந்தியப் பயணம்’
ஆயிற்று, மூன்று மாதங்களாக திறக்கவே படாத பூக்கிரி.காம்.. அவ்வப்போது
பதிவுகள் படித்தாலும், பெரிதாக இந்தப் பக்கம் வருவதில்லை என்பது தான்
இன்றைய நிலை.. இந்த மூன்று மாதங்களுக்குள் வாழ்க்கையில் முக்கியமான ஒரு
மைல்கல் வந்து போய்விட்டது.
‘இந்தியப் பயணம்’ என்ற சொல்லை நான் வாழ்நாளில் பயன்படுத்த மாட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.. இன்றைக்குக் கூட அந்தச் சொல் எனக்கு அந்நியமாகத் தான் இருக்கிறது. அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்கள் பலர் பல நாள் யோசித்து இந்தியப் பயணங்களைத் திட்டமிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்களின் வாழ்விடம் இந்த ஊர், சொந்த ஊருக்குப் போய் வருவது என்ற பொருளில் சொந்த நாட்டுக்குப் போய் வருவதைக் குறிப்பிடுகிறார்கள் என்று உணரும்போது ஆச்சரியமாக இருக்கும்.
கடந்த வருடம் வரையிலும் எனக்கு இந்த வாழ்விடம் எது என்ற கேள்விக்கான பதில் இல்லாமலேயே இருந்தது. முதன்முதலில் வீட்டிலிருந்து ஹைதராபாத் பயணித்துப் போன நாளில், ‘எங்கிருந்து வரீங்க?’ என்ற கேள்விக்கு, ‘சென்னை’ என்று சொன்ன பதிலைப் பலநாள் வரை சொல்லிக் கொண்டிருந்தேன். சான் ஹோஸே வந்த புதிதில் அரிசோனாவில் இருக்கும் சொந்தக்காரர் வீட்டுக்குப் போன போது, ‘இந்த ஆன்ட்டி கலிபோர்னியாவில் வசிக்கிறாங்க’ என்று அறிமுகப்படுத்தப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. ‘சென்னைன்னே சொல்லிருக்கலாமே!’ என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
இந்தியாவில் பல்வேறு ஊரிலும் இருந்திருந்தேன் என்றாலும், எனக்கென்று எந்த ஊரையும் சொந்தம் கொண்டாட மனமிருக்கவில்லை. சென்னையிலிருந்து வந்தேன் என்று சொல்லிக் கொள்ளும போது, ஏனோ சென்னைக்குத் திரும்பிப் போகும் எண்ணம் கூட எனக்கு வரவில்லை. ‘இந்தியப் பயணங்கள்’ பற்றி யோசிக்காத போதும் சென்னைக்கு எப்போதாவது திரும்பிப் போகத் தான் வேண்டி இருக்கும் என்று ஆழ்மனம் நம்பிக் கொண்டிருந்தது போலும்.
இன்றைக்கு யாராவது கேட்டால், என்னுடைய ஊர் சான் ஹோசே என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ‘எங்கள் வீடு மில்பிதாஸில் இருக்கிறது’ என்கிறேன் யார் கேட்டாலும் - அந்த வீட்டில் நான் இன்னும் ஒருபோதும் வாழவில்லை என்றபோதும்.
அவசர அவசரமாக ஒரு இந்தியப் பயணம். வந்து, நான்கே நாளில் தயாராகி, திருமணம் முடித்து, அவசர அவசரமாக அதன்பின் கொஞ்சம் கோயில்குளமெல்லாம் சுற்றிவிட்டு, மீண்டும் நியூயார்க், வேலை, டீம் மீட்டிங், டெட்லைன்! காலை மற்றும் இரவுகளில், கிரஹாம் பெல் வாழ்க! ( மதியம்: ‘இந்த கான்பெரன்ஸ் காலை எவன்டா கண்டுபிடிச்சான்!’ )
கல்யாணத்துக்கு மூன்று மாதம் முன்னாலேயே திட்டமிட்டு டிக்கெட் எல்லாம் மாற்றிப் பதிவு செய்து கொண்டு முத்துலட்சுமி வந்திருந்தார். மண்டபத்தில் எங்கே தங்கினார், என்ன செய்தார் எதுவும் தெரியாது. பாலா, அயன், போன்ற நண்பர்கள் பார்த்துக் கொண்டார்கள் போலும்.. அண்ணாச்சி காலை வந்துவிட்டு, ‘பிரியாணி இல்லைன்னா சாப்பிட முடியாது’ என்று சத்தியாகிரகம் செய்ததாக கேள்வி! துளசி அக்கா நேரே கல்யாணத்தில் வந்திறங்கி யானைகளின் மீதான உரிமையை எனக்கு கல்யாணப் பரிசாக எழுதிக் கொடுத்தார். லக்ஷ்மி, லக்கி, சிபி, மதுமிதா, சிவா, அருள், தங்கவேல், நந்தா என்று பதிவர் பட்டறை பட்டாளமாக மாலை கலக்கிவிட்டார்கள். கரூரில், மாப்பிள்ளை வீட்டு வரவேற்புக்கு, வெறும் அட்ரஸ் சொன்னதுக்கு, இரண்டு மணி நேரம் பயணித்து வந்து அசத்திவிட்டார் வெயிலான்! நேரில் வந்து, போன் செய்து, பதிவிட்டு வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி சொல்லலாம் என்றால், ரொம்ப தாமதமாகிவிட்டது.. ஹி ஹி…
குமுதம் புகழ் கார்ட்டுன் பாலாவின் கார்ட்டூனைத் தான் அதன் பரப்பளவு காரணமாக எடுத்து வர முடியவில்லை. அடுத்த ‘இந்தியப் பயணத்தில்’ எடுத்து வர வேண்டும்.

Saturday, February 07, 2009
Confessions of a Shopaholic
சின்ன வயதிலிருந்து எனக்குப் பழக்கமான ஒரே நல்ல வழக்கம் புத்தகம்
படிப்பது. கடந்த ஒரு வருடமாக அந்தப் பழக்கம் கூட என்னைவிட்டுப் போய்விட்டதோ
என்று ஒரு தீவிர சந்தேகம் எனக்கு! எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் ஒரு
அளவுக்கு மேல் படிக்க முடியாமல், என்னவோ படிப்பது என்ற பழக்கமே இல்லாமல்
போய்விட்ட ஒரு உணர்வு. நல்ல வேளையாக எடுத்த புத்தகத்தை கீழே வைக்காமல்
சாப்பாடு, தூக்கம் இல்லாமல் படிக்கும் வேகம் என்னுள் இன்னும் இருக்கிறது
என்று நிருபிக்கும் வகையாக சோபி கின்சில்லரின் “Confessions of a
Shopaholic” கையில் கிடைத்தது.

கதை ஒன்றும் பெரிய விசயமில்லை. நம்ம ஊரு பகல்கனவு கண்ட தயிர்க்காரி கதையைக் கொஞ்சம் இந்தக் காலத்து ஷாப்பிங் ஆசை பிடித்த பெண்களின் மீது ஏற்றிப் பின்னி இருக்கிறார். ஆனால் கதை சொன்ன விதம் தான் ரொம்பவும் அருமை. ஒரு காலத்தில் என் பாட்டி சொன்ன கதை போல ஒரு தொடர்ச்சியோடு போகிறது கதை. அதிலும் கற்பனையிலேயே கோட்டை கட்டும் கதைநாயகி ரெபெக்கா மனதில் நினைப்பதை எல்லாம் எழுதிக் கொண்டே வந்ததில், அவள் யோசிக்கும் விதம் போல் நாமே அடுத்தடுத்து யோசிக்கத் தொடங்கி விடுகிறோம்.
முக்கியமாக அவளின் பேதைத்தனமான எண்ணப் போக்கும், அவ்வளவு கடன் இருக்கும்போது கூட ஷாப்பிங் செய்யக் கிளம்பி விடுவதும், கடைத் தெருவுக்குப் போவதும் ஏதாவது வாங்குவதுமே அவளை மகிழச் செய்வதும் என்று அவள் தானே கதை நாயகியாகவும் நகைச்சுவை அரசியாகவும் இருக்கிறாள். ஓரளவுக்கு அடுத்து என்ன என்று ஊகிக்க முடிகிறது தான். ஆனாலும் அந்த ஊகம் கூட சுவையாக இருக்கிறது.
Girly Girl புத்தகம் என்று நண்பன் ஒருவன் சொன்னான், சின்ன வயதுப் பெண்களில் மனநிலையை அழகாக பிரதிபலிக்கத் தான் செய்கிறது. சொந்தமாக சம்பாதிக்கும் 23 வயதான பெண்ணான கதைநாயகி கூட இப்படி வரவுக்கு மீறி செலவு செய்யும் freakஆக இருப்பது தான் எனக்கு ரொம்ப ஆச்சரியம். நானும் ஒரு காலத்தில் கடை கடையாகப் போய் - (நம்ம ஊர் ரங்கநாதன் தெரு மாதிரி ஹைதராபாத்தில் கோடி, சார்மினார் ரேஞ்சுங்க நாங்க.. )- இதே மாதிரி கைக்கொள்ளாமல் வாங்கி வந்ததுண்டு தான். ஆனால் அதிலும் கூட ஒரு தெளிவு இருக்கும் (ஆமாமாம் என்று என் அப்பா முணுமுணுப்பது கேட்கிறதுதான்..) - வாங்கும் சம்பளத்தில் ஒரு பத்து பதினைந்து சதவீதத்துக்கு மேல் இது போன்ற செலவு நாங்கள் செய்ததில்லை..
குடும்பத்துக்கோ சேமிப்புக்கோ பணம் செலவு செய்யத் தேவையில்லாத பெண்கள் இயல்பாக செலவு செய்வதைக் கூட இந்தப் புத்தகம் அழகாகவே படம் பிடித்துக் காட்டுகிறது கதை. கடைசியில், பெக்கி தன் வரவு செலவைச் சரியாக நிர்வகிக்காத பொறுப்பின்மையை தானே புரிந்து கொண்டது எல்லாவற்றிலும் அழகாக வந்து முடிந்துவிட்டது.
இது படமாக வந்திருக்கிறதாம், இத்தோடு நில்லாமல், அடுத்தடுத்து இதே சோபி கின்ஸில்லா மேலும் மேலும் ஷாப்பஹாலிக் தொடர்கள் எழுதி இருப்பதாக தெரிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னாக இருந்திருந்தால், ரெபக்கா மாதிரியே அடுத்தடுத்து அந்தப் புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பேன்.. நல்லவேளையாக வளர்ந்துவிட்டேன்.

Sunday, October 26, 2008
ஒரு வருட பாக்கி..
இங்கே வந்ததிலிருந்து ஒரு வருடமாக பார்த்த பல படங்களைப் பற்றி
அன்றன்றைக்கு ஏதாவது எழுதி வைக்கும் பழக்கமுண்டு. சிலவற்றை மேலும்
மெருகூட்டி தனி பதிவாக இட எண்ணி வைத்திருந்தேன்.. ஆனால், இப்படியே போனால்
படம் பார்த்ததே கூட மறந்து போய்விடும் என்று தோன்றிவிட அவற்றை அப்படியே
ஒன்று சேர்த்து இங்கு.
The Diary of Anne Frank
ஒரு படம் பார்த்த அன்று நிம்மதியான தூக்கம் காணாமல் போயிருக்கிறதா? அது போன்ற ஒரு அழகான படம் தான் டைரி ஆப் ஆன் ப்ராங்க். இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஒளிந்து வாழ்ந்த ஒரு யூதக் குடும்பத்தின் கதை.
ஆச்சரியம் என்னவென்றால் ஆன(Anne - கடைசி e ஐ, அவுக்கும் ஆவுக்கும் இடையில் படிக்க வேண்டும்) ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியாக இருந்தபோது எழுதிய தன் சொந்த டைரி, உண்மைக் கதை. இரண்டு முழு வருடங்கள் மூன்று சின்ன அறைகள் கொண்ட வீட்டில் கிட்டத்தட்ட பத்து பேர் ஒளிந்து வாழ்கிறார்கள். அவர்களின் எண்ணப் போக்கு, தினசரி நடவடிக்கை, அந்தச் சூழ்நிலையில் கூட மலரும் மெல்லிய ஈர்ப்பு, காதல், அம்மாக்களுக்கும் பதினாறுகளில் இருக்கும் பெண்களுக்குமிடையில் இருக்கும் வழக்கமான புரிதலின்மை. இரண்டு முழு வருடங்கள் இரண்டு குடும்பங்கள் முழுமையாக ஒளிந்து மறைந்து வாழ நேர்ந்தமையால் ஏற்படும் சங்கடங்கள், நெருக்கம், சண்டை என்று அன்றாட நிகழ்வுகளை அழகாக பதிவு செய்து வைத்திருக்கிறார் ஆன..
படம் யாரோ சொன்னார்கள் என்று எடுத்துப் பார்த்தேன், அதன் பின் அந்தப் புத்தகத்தை அதைவிட ஆர்வமாக எடுத்துப் படித்தேன். அதுவும் ஒரு இனிமையான அனுபவம்…
Swing Kids
போர் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் பைத்தியக்காரத்தனம். ஹிட்லரின் ஜெர்மனியில் குஞ்சு குளுவான்கள் எல்லாம் யூதர்களை எதிர்த்து, எதிர்ப்படும் யூதர்களை எல்லாம் கொசு அடிப்பது போல் நசுக்கி விட்டுப் போனது பற்றி பியானிஸ்ட் பேசியதென்றால், அந்த ஒட்டு மொத்தப் பைத்தியக்காரத்தனத்திலிருந்து தனித்து நின்ற மனிதர்களும் ஜெர்மனியில் இருந்திருக்கிறார்கள் என்கிறது swing kids.
ஹிட்லர் தீயது என்று ஒதுக்கிய அமெரிக்க பாப் இசையைக் கேட்டு, யூதர்களின் பாடல்களைப் பாராட்டி, இசைத்து வாழ்ந்த இந்தச் சில இளைஞர்கள், கலை மூலமாகவே நாசிக்களுக்குத் தம் எதிர்ப்பைக் காட்டினார்களாம். உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த பூமியில் உருண்டை என்று சொன்ன சாக்ரடீஸ் போல யூதர்களை மனிதர்கள் என்று நினைத்த இந்தச் சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டு work campகளுக்கு அனுப்பப்பட்டனராம்.
‘ஹிட்லர் செய்வது தவறு என்றால் அவன் மட்டுமே அதற்குப் பொறுப்பல்ல. அவனைத் தவறு செய்ய விட்டுவிட்டு எதிர்ப்பு காட்டாமல் சும்மா இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு பெரும்பொறுப்பு ஏற்கத் தான் வேண்டும். எதிர்ப்பைப் பதிவு செய்யுமிடம் வீடு மட்டுமல்ல.. வெளியில் செய்ய வேண்டும், உரத்துச் செய்யவேண்டும்’ - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று எதிர்ப்பை அமெரிக்க யூத இசை மூலம் பதிவு செய்கிறான் பீட்டர்.
ஒரு காலத்தில் ஹிட்லரை எதிர்த்து, அவனின் செயல்களை வெறுத்து swing இரவுக் கிளப்களை கதி என்று கிடந்த இரண்டு இளைஞர்கள், நாசிப் படையில் சேர்ந்த பின்னால் எப்படி உருவேற்றப்பட்டுகிறார்கள், எப்படி சொந்த குடும்பத்தைக் காட்டிக் கொடுக்கும் அளவுக்கு வெறியேற்றப்படுகிறார்கள், அந்த மடத்தனத்திலிருந்து, நாஜிப் படைகளின் யூத வெறுப்பு மந்திரக்கட்டிலிருந்து எப்படி ஒருவன் மட்டும் வெளிவருகிறான், அதன் பின்னான அந்த நண்பர்களின் நட்பும் விரிசலும்.. கதை இரண்டு நண்பர்களைப் பற்றியது மட்டுமல்ல. swing இயக்கம், நாஜிப் படைகளின் யூதவெறுப்பைப் பிஞ்சு மனங்களில் பதியவைக்கும் திறமை, நல்ல மனிதனாக வளரும் குழந்தைகள் எப்படி மதம்பிடித்த வெறியர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்ற விளக்கம்.. அழகான படம்..
The Prize winner of Defiance, Ohio
நம்மூர்ப் பெண்களைப் போல வேளா வேளைக்கு குடும்பத்தைக் கவனித்து, பொறுப்பில்லாத கணவனை மன்னித்து, அவனுக்கும் சேர்த்து தானே பணம் சம்பாதித்து - கடமை தவறாத அழகான அமெரிக்க மனைவி எவலின். கிட்டத்தட்ட பத்துக் குழந்தைகள் கொண்ட தனது வீட்டைக் கூட தன் சின்னச்சின்ன ஜிங்கிள் எழுதும் திறமையால் மட்டும் காப்பாற்றும் எவலின் அமெரிக்க வாழ்வியலில் கூட அமைவது எனக்குப் புதிது.
தன் எழுதும் திறமையைப் பயன்படுத்தி, புகழ் பெற்ற எழுத்தாளராகி இருந்திருந்தால் உலகம் பார்த்திருக்க முடியும். உலகம் எங்கும் சுற்றிப் பார்க்கும் ஆசை இருந்தும் அந்தச் சின்ன கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் கட்டுண்டு கிடந்த எவலின் என்ன சாதித்தாள்? அவள் கதையை எழுதி உலகுக்குச் சொல்ல, அவளின் மகள் இல்லாமல் போயிருந்தால் சுவடு தெரியாமல் போயிருப்பாள். ஆனால் எவலின் போன்ற பெண்கள் தான் அடுத்த தலைமுறையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறார்கள்; அந்தக் குடும்பத்துக்கே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்கள்.
சிரித்த முகத்துடன், எத்தனை கஷ்டம் வந்தபோதும் புன்னகையோடு எதிர்கொள்ளும் எவலின் ஒரு கவிதையான பாத்திரம். பழைய காலத்துத் தமிழ்ப்படங்கள் காட்டும் பாசமான தாயாராவும், அடிபணியும் மனைவியாகவும் இருக்கும்போதும் சோகத்தைப் பிழியாமல் எல்லாரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் அம்மா வாத்தாக எவலின் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
A Family Thing
எல்லா ஊர்க் கதைகளிலும் பெண்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். மனசாட்சிக்குப் பயந்தவர்களாக, ஆனால் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அடங்கிப் போபவர்களாக…
எல்லா ஊர்களிலும் பெண்கள் தான் அதிகமாக, சுலபமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். மிக இயல்பாக.. அவர்களின் எண்ணம் பற்றிய கவலை இல்லாதவர்களால் சுலபமாக.. (படம் பார்த்த அன்று எழுதி வைத்தது இது.. மேலும் தெரிந்து கொள்ள படம் பாருங்கள் அல்லது அது பற்றிப் படியுங்கள்..)
woh lamhe அந்தக் கணங்கள்.
அழகான சில கணங்களைப் பற்றிய ஒரு படம்.. அழகான காதல்.. அந்த அளவுக்கு உயிரினும் இனிய காதல்கள் பொய் என்ற எண்ணம் ஏனோ ஏற்படவே இல்லை. அது போன்ற ஒரு காதலுக்காக ஏங்குகிறது மனசு. வாழ்க்கை, எதிர்காலம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெண்ணுக்காக மட்டுமே வாழும் ஒருவன் - வோ லம்ஹே ஒரு உண்மைக் கதையாம்! அது போன்ற ஒரு காதல் கிடைக்க பர்வீன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஷீஷ்ரோப்ரீனியா போன்ற வியாதி அவளைப் பிரித்தது தான் பாவம்..
The Dreamer - Sonador
ஒவ்வொரு மகளின் - மகனின் - கனவும் தன் தந்தை போல வரவேண்டும் என்பதே.. தந்தை தனக்கு அவ்வளவாக பிடிக்காத, அதனால் பழக்காத அவரின் தொழிலான பந்தயக் குதிரை வளர்ப்பை அவரே ஆர்வத்துடன் மகளுக்குக் கற்றுக் கொடுக்க வைக்கும் அழகிய பெண்ணின் கதை.. அந்தப் பெண் போன்றே அப்பாவின் தொழிலில் புகுவதற்கு எனக்கும் ஆசை என்பதாலோ என்னவோ இந்தப் படம் அத்தனை ஈர்த்துவிட்டது…
கோதாவரி (தெலுங்கு - இன்னும் தமிழுக்கு வராத தெலுங்கு
)
அற்புதமான படம்.. செ.லூயிஸில் இருந்தபோது வெளிவந்த படம். அப்போதே பொழுதுபோகாமல் போக எண்ணி இருந்ததுண்டு.. திரைப்படங்கள் குறித்த அப்போதைய ஆர்வமின்மையால் விட்டுப் போய்விட்டது..
‘கண்ட நாள் முதல்’ போல, சின்னவயதில் படித்த பி.வி.ஆரின் மேனேஜர் சேது கதை போல (நாவல் பெயர் மறந்துவிட்டது) ஏழு நாட்களில் பத்துக்கு மேற்பட்ட முறை பார்த்தாச்சு.. ஒரு சீன் கூட தள்ளிப் பார்க்கத் தோன்றவில்லை..
கோதாவரியில் படகில் ஏறி பத்ராச்சலம் போகும் வாய்ப்பும் ஒருதரம் ஹைதராபாத்தில் இருக்கும்போது கிடைத்தது. ஆனால் இதன் அருமை தெரியாமல் விட்டுப் போய்விட்டது..
அழகான கோதாவரி, அழகான கமலினி, அமைதியான சுமந்த், நல்ல கதை, மிக மெல்லிய காதல் கதை… நன்றாக இருக்கிறது.. சொல்ல வந்தது ஒரு காதல் கதை மட்டுமே என்ற அளவில் அதைத் தாண்டிய கதாநாயகியின் பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டார்கள் என்பது என்னுடைய குறை.. ஆனால் நல்ல கதை.. அழகான காட்சியமைப்பு..
கமலினி அடிக்கடி சொல்லிக் கொள்வது போல், எனக்கே ஏதோ ‘குயின் விக்டோரியா’ என்ற எண்ணம் வந்து போகிறது.. ஓரிரண்டு சின்ன மைனஸ்களைத் தவிர கோதாவரி அழகு.. பத்ராச்சலத்துக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு என்று மட்டும் இன்னும் தெளிவாக புரிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்… என்றாவது ஒருநாள் subtitleகளுடனான குறுந்தகடு வாங்கி பார்த்தால் புரிந்து போகும்.. பார்க்கலாம்.
பாடல்கள் எல்லாம் கர்நாடக சங்கீத அடிப்படையில் இருப்பதாலேயே இன்னும் அதிகம் என்னை ஈர்க்கிறது. பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசை கூட.. அதுவே இன்னும் அதிகமாக எனக்குப் பிடித்திருக்கிறது என்று தோன்றுகிறது.
புடவை கட்டிக் கொண்டு மயங்கி மயங்கி வந்து நிற்கும் கமலினி, ‘நான் சீதா மகாலட்சுமியாக்கும், நான் ஏன் காதலை முதலில் சொல்லணும்?’ என்று ஏறிக்கொள்ளும் கமலினி, ‘என்கிட்ட உனக்குப் பிடிச்ச விசயம் என்ன?’ என்று சுமந்தைத் துருவித் துருவிக் கேட்கும் கமலினி, ‘அம்மம்மாவை என்கிட்ட கொடுத்துடேன்!’ என்று கொஞ்சும் கமலினி.. எனக்கே இவ்வளவு பிடித்து போய்விட்டது அவளை.. அப்படியே இரண்டு கையிலும் தூக்கி கொஞ்ச வேண்டும் போல..
கமலினியின் இந்த எல்லா செயல்களுக்கும் பதிலுக்கு எதுவுமே செய்யாமல் சும்மா பார்த்துக் கொண்டே ஸ்கோர் பண்ணி விடுகிறார் சுமந்த். இந்த படத்தில் ஆர்வமாகி சுமந்தின் மற்ற இரண்டு படங்கள் பார்த்தது வருத்தம் தான். அவ்வளவு நன்றாக செய்யவில்லை.. இந்தப் படம் , இந்த அமைதி மட்டும் தான் ஒழுங்காக செய்ய வருகிறது போலும்..
மனசா வாச்சா, உப்பொங்கலே கோதாவரி, மனசா கெலுபு நீதேரா, எல்லாம் மனம் நிறைக்கும் பாடல்கள்.. இருங்க திரும்ப பார்த்துட்டு வரேன்..
The Rookie
பள்ளிக் கூடத்து பேஸ்பால் பயிற்சியாளர் ஒருவரிடம் அவரின் மாணவர்கள் சவால்விடுகிறார்கள். ‘பக்கத்து ஊர்ப் பள்ளியுடனான இந்தப் போட்டியில் நாங்கள் ஜெயித்தால், பெரிய அளவில் லீக் மாட்சுகள் விளையாட நீங்கள் முயல வேண்டும்!’ என்ற சவாலை ஏற்று, சின்ன வயதில் தன் கனவான, ஏதேதோ காரணங்களால் கிட்டாமல் போன லீக் மாட்சுகளுக்கு முயல கிளம்பிப் போகிறார் கதை நாயகன். கடன்கள், தினசரி குடும்பக் கவலைகள் எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி அவரை வழியனுப்பி வைக்கிறார் அவர் மனைவி.
நாற்பது வயதில் ரூக்கியாக(புதுவரவாக) வந்து சேரும் அவரை முதலில் சேர்த்துக் கொள்ள விரும்பாமல் பல குழுக்கள் தள்ளி வைக்கின்றன. மெல்ல தன் திறமையால் நாயகன் ஜிம் மாரிஸ் குழுவில் முன்னேறுவதும், சொந்த ஊருக்கே லீக் மேட்ச் ஆட வருவதும், அவரின் மாணவர்களே அவர் ஆடுவதைப் பார்க்க வருவதும் மிச்ச கதை..
கனவுகளை வென்றெடுப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்று ஆணித்தரமாகச் சொன்ன படம் - ஜிம் மோரிஸின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் எனும்போது இன்னும் அதிகமாக மனதைத் தைக்கிறது.
Field of Dreams
இதுவும் கனவுகளைப் பற்றிய, பேஸ்பால் படம் தான். பல வருடங்களில் பயணம் செய்து வரும் இந்தப் படம் பற்றி நான் எழுதுவதை விட நீங்களே கதை படித்து விடுங்கள். ஒரு மாதிரி படத்தின் கதை அடுக்கப்பட்டிருந்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே இதை இங்கே வைத்திருக்கிறேன். மனம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்தால், நிச்சயம் நஷ்டமிருக்காது என்று சொல்லும் படம் இது..

Wednesday, October 08, 2008
ரயிலோடு உறவாடி..
ரயில் என்றாலே ஒரு மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்து சேர்ந்துவிடுகிறது.
இன்றைக்கும் ரயிலைப் பார்த்தால் சின்னக் குழந்தை மாதிரி கடைசி பெட்டிவரை
பார்த்துக் களிப்பது ஒரு பழக்கம். நான் பிறந்த புதிதில் எங்கள் வீடு
மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தது. முதல் மாடி
பால்கனியிலிருந்து ரயில் பார்ப்பது என்னுடைய சிறு வயது பொழுதுபோக்குகளில்
முதன்மையானது.
பாட்டி இடுப்பிலேறி ரயில் பார்த்துக் கொண்டே உணவுண்ட நாட்கள் தொடங்கி மாமா மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்த போது அவரின் காலைச் சுற்றிக் கொண்டிருந்த நாள்வரை அந்த பால்கனி நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றன. காலை நேர சென்னையின் மின்சார ரயில்கள் நிரம்பி வழிந்து கொண்டு செல்வதிலிருந்து மாலை நேரம் அது திரும்பவும் மனிதர்களை நிரப்பிக் கொண்டு வந்து சேர்க்கும் வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் அந்த பால்கனிக்கு ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்ததுண்டு.
அம்மா ரயில் (அம்மா அலுவலகம் சென்று வரும் ரயில்) என்று தான் எட்டு முதல் எட்டரை வரும் ரயில்களை நாங்கள் குறிப்பிடுவோம். போகும் வரும் எல்லா ரயில்களுக்கும் கைகாட்டி விட்டு, அதில் யாராவது ஒரு பிரயாணி திரும்பி கையாட்டிவிட்டால் ஏற்படும் பூரிப்பு சொல்லி முடியாது. கொஞ்சம் வளர்ந்த பின், மாலை நான்கரைக்கு வரும் முத்துநகர் விரைவு வண்டியிலிருந்து எத்தனை மனிதர்கள் இறங்கினார்கள், எத்தனை பேர் ஏறினார்கள் என்று கணக்கிட்ட நாட்களும் உண்டு.
பன்னிரண்டு வயதில் அந்த வீட்டை விட்டு வேறு சொந்த வீடு கட்டிக் கொண்டு ஊருக்கு வெளியில் போக நேர்ந்த சமயம், ரயில் சத்தமில்லாமல் எப்படித் தூக்கம் வரும் என்று அப்பாவைக் கேட்டுக் கொண்டிருப்பேன். அப்புறம் ரயில்புற வாழ்க்கை மெல்ல மறைந்து அமைதியான புறநகர் வாழ்க்கைக்குப் பழகியபின்னரும், ரயில் என்பது ஒரு ஆச்சரியமான விசயமாகவே இருந்திருக்கிறது.

அடுத்து ரயிலுடனான உறவு வெளியூர்களுக்குச் செல்லும் நாட்களோடு நின்றுவிட்டது. இன்றைய விமானப் பயணங்களைக் காட்டிலும் ரயில் பயணங்கள் அருமையானவை. விமானம் அல்லது பேருந்து போல ரயில் பயணங்கள் உடல் சோர்வைத் தருவதில்லை. பகல் வேளைகளில் ஜன்னல் அருகே அமர்ந்து இந்திய கிராமங்களின் வயலையும் வாய்க்காலையும் பார்ப்பது ஒரு மகிழ்ச்சி என்றால், இரவின் தனிமையில் ரயிலிருந்து விழும் மெல்லிய வெளிச்சம் தரையில் விழுந்து உருண்டோடுவதைப் பார்ப்பது மற்றுமொரு சந்தோசம். ஜன்னல் கம்பிகளுக்கு இடையே விழுந்து ஓடும் வெளிச்சத்தைப் பார்க்கும்போது என்னுடைய கற்பனை பொங்கி நிறைய குட்டிக் குட்டிக் கதைகள் உதயமாவதுண்டு. ஊட்டியின் தள்ளு ரயில்களும், மலைப்பாதையில் திரும்பும்போது ரயிலின் உள்ளே இருந்துகொண்டே அதன் மற்ற பகுதிகளைப் பார்க்கக்கூடிய சில தருணங்களும் எப்போதும் ஆச்சரியம் தருபவை.
ஹைதராபாத்தில் வேலை பார்த்த காலங்களில் கிட்டத் தட்ட மாதமொருமுறை ரயில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். வேலைக்கு என்று முதன்முதல் செல்லும்போது தான் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்துப் போனோம். என் அலுவலகத்தில் பயணச்செலவைத் திருப்புவதாக சொல்லி இருந்த காரணத்தால், நானே அப்பாவை இரண்டாம் வகுப்பில் அழைத்துச் செல்வது பற்றிய ஒரு பெருமை இருந்தது எனக்கு. அதற்கு முன் எத்தனையோ தரம் அப்பா இரண்டாம், மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் பயணித்திருப்பார் என்றாலும், மகளாக நான் அவரை அழைத்துச் சென்ற முதல் பயணமல்லவா!
திரும்பவும் அதற்கு அடுத்த மாதம் ஒரு வார இறுதி சென்னை வந்து போனதும் மறக்கமுடியாத பயணம் தான். முதன்முதலாக நான் மட்டும் தனியாக ரயிலில் வரப் போவதைப் பற்றிய ஒரு தயக்கமும், பயமும் இருந்துகொண்டே இருந்தது. வெளிக் காட்டவில்லை என்று நினைத்துக் கொண்டே தான் வந்தேன். ஆனால் எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணும் அவள் தாயாரும் இரவு உணவின் போது, ‘தனியாளா வரியாம்மா?’ என்று கேட்ட போது பொறுக்காமல், நான் வேலைக்கு சேர்ந்தது தொடங்கி முழுக்கதையும் சொல்லித் தான் மூச்சுவிட்டேன். துணைக்கு நல்ல ஆள் கிடைத்ததாக மகிழ்ச்சி வேறு.

அதன்பின் எத்தனையோ தரம் அந்த ரயிலில் போய் வந்திருக்கிறேன் - நல்லகுண்டாவிலும் குண்டூரிலும் கிடைக்கும் ‘வெடிகா’ சமூசாக்களையும், கூடூரில் நடு இரவில் கிடைக்கும் சூடான தோசை, சில்லென்று ஒரு ஆப்பிள் ரசம் என்று ரவுண்டு கட்டி அடித்திருக்கிறேன்; அடுத்த மாத டிக்கெட்டுடன் வண்டியேறி, ‘என் பேரை எப்படி சார்ட்டில் விட்டுப் போச்சு’ என்று சண்டைபோட்டிருக்கிறேன்; நண்பர்களுடன் கொட்டமடித்து, பாட்டுப் பாடிக் கொண்டு, யாரும் இல்லாமல் தன்னந்தனியாக புத்தகம் படித்துக் கொண்டு என்று பலவிதமாக அந்த ரயில் பயணங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி ருசிதான்.
இப்போது இந்த ஊருக்கு வந்த புதிதில், இந்த ஊரின் விதம்விதமான ரயில்கள் மீண்டும் என்னை குழந்தைக் காலத்துக்கு அழைத்துப் போய்விட்டது. உள்ளூரில் ஓடும் மரவட்டை போன்ற விடிஏ, கொஞ்சம் வெளியூராக பக்கத்து பெருநகரம் வரை ஓடும் இரட்டை அடுக்கு கால்டிரெயின், கடல் தாண்டி அடுத்த விரிகுடாவுக்கும் போகும் விரைவு வண்டியாக பார்ட், என்று பார்த்த எல்லா வண்டிகளிலும் ஏறி பயணம் செய்தாகிவிட்டது. இன்னும் கூட மிச்சம் இருக்கும் இருவகை ரயில்களில் ஏற நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அமெரிக்காவில் இருந்த போது, என் க்ளையண்ட் மேலாளர் வார இறுதிக்கு பிள்ளைகளை ரயிலில் வெளியூர் அழைத்துப் போவதாக மிக மகிழ்ச்சியோடு சொன்னார். அதென்ன பெரிய விசயமா என்று நினைத்த எனக்கு அவரின் அடுத்த சொற்கள் ஆச்சரியமாக இருந்தன : ‘என் பிள்ளைகள் இதுவரை ரயிலையே பார்த்ததில்லையா அதனால ரொம்ப உற்சாகமா இருக்காங்க’ என்றார். உலகத்தில் இப்படிப் பட்ட குழந்தைகள் கூட இருக்காங்களா! என்று வியந்து போனேன்..
நேற்று வண்டி எடுக்கையில், காரைக் கிளப்பிய பின்னால் பக்கத்தில் இருந்த இருப்புப்பாதையில் திடீரென்று ரயில் போவதைப் பார்த்து விட்டு டக்கென அப்படியே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கிய போது தான் எத்தனை நாளானாலும் இந்த ரயில் பார்த்துக் குழந்தையாகும் மனம் மாறவே மாறாது என்று புரிந்து போனது…

Saturday, September 27, 2008
bike ஓட்டலியோ bike
எங்க ஊர் ஒரு Biker friendly Community தெரியுமா? அதென்னங்க பைக்கர்
friendly? பைக் ஓட்டுறவங்க எல்லாம் நட்பா ரோட்ல போற மத்தவங்களைப்
பார்த்துப் பத்திரமா ஓட்டுவாங்களான்னு கேட்டுறாதீங்க….
முதல் விசயம் என்னன்னா, அமெரிக்காவல பைக்னா நம்ம ஊர்ல சைக்கிள் - அதாங்க மிதிவண்டி. மோடார்னா அது கார். அப்ப நம்ம ஊரு மோட்டார் பைக்குக்கு என்ன பேர் சொல்லுவாங்கன்னு கேட்காதீங்க.. அதை நான் இன்னும் கண்டுபடிக்கலை.
ஆக Biker friendly Communityன்னா, சைக்கிள் ஓட்டுறவங்களை ஊக்கப் படுத்தும், அவங்க சேதாரமில்லாம வீட்டுக்குப் போக உதவும் ஊருன்னு அர்த்தம். இவ்வளவு பாசக்கார பசங்களா இருக்காங்களேன்னு நானும் ஒரு சைக்கிள் ஓட்டுறதுன்னு முடிவு பண்ணேன்.
சரியா ஆறு மாசத்துக்கு முன்னால் தினமும் சைக்கிளில் வரும் எங்க அலுவலக நண்பர் அந்தப் பெரிய உதவியை எனக்குச் செய்ய முன்வந்தார். அவரும் நானுமா போய் பக்கத்து அண்ணாச்சி கடையில் (அதாங்க வால் அண்ணாச்சி கடை) நல்லதா ஐம்பது டாலருக்கு ஒரு சைக்கிள் வாங்கியாந்தேன். ஆன விலை கம்மி, அங்குசந்தான் விலை அதிகம்ங்கிற மாதிரி, அதுக்கு வாங்கின சுத்துப்பட்டு சாதனங்கள் எல்லாம் சேர்ந்து நூத்துப்பத்து டாலராகிடுச்சு. அப்படி என்னத்த சுத்துப் ‘பட்டு’ சாதனங்கள்னு கேட்டீங்கன்னா,
- முன்னாடி, பின்னாடி பாட்டரி விளக்கு
- தலைக்கவசம்
(இது ரெண்டும் இங்க விதிப்படி இருந்தாகணும். )
- குளிர்காலத்துல போட்டுகிட்டு ஓட்ட ஒரு கையுறை
- சீட் கொஞ்சம் நல்லா இல்லாததினால அதுக்கு ஒரு பஞ்சு வைத்த உறை
- வண்டியில் ஏதாச்சும் சின்ன பிரச்சனைன்னா சரி பண்ண ஆயுத பொட்டி
- பஞ்சர் ஒட்ட, டயரை கழற்ற ஒரு ஸ்பானர்
- காத்தடிக்க பம்பு
- பூட்டு
இது தவிர அப்புறமா இந்த பைக்கைத் தொடர்ந்து ஓட்ட வாங்கினது:
- வண்டியில் முன்புறம் மாட்ட ஒரு பை
வேலைக்குப் போக இந்த வண்டி தான் இப்ப.. வாரத்துல ரெண்டு நாள் தான்
ஓட்ட முடியுது, மத்த நாள் எல்லாம் ஆத்திர அவசரமா மீட்டிங் பேசிகிட்டே
ஓடிகிட்டிருக்கேன்.
இங்க எல்லாம் சைக்கிளே நாலஞ்சு வகையில் கிடைக்குது. முக்கியமா எனக்குத் தெரிஞ்சி மூன்று பெரும்பிரிவுகள்:
1. சாதாரண சாலைக்கான வண்டி - Road bike
2. மலைகளுக்கான வண்டி - Mountain Bike
3. ரெண்டும் கலந்த கலவை - Hybrid
சாலை வண்டி மெல்லிசா பஞ்சத்துல அடிபட்டதாட்டம் ஒல்லியா இருக்கும். ஆனா சாதா சாலைகளில் நல்லா வழுக்கிகிட்டு போகும். ரொம்ப பலமா மிதிக்க வேண்டாம். அதோட கைப்பிடி கொஞ்சம் வளைவா இருக்கும். படுத்துட்டு ஓட்டுறது மாதிரி இருக்கும் ஆனா அதுவும் முதுகுக்கு நல்லதுன்னு சொல்லுறாங்க.

மலை மிதிவண்டி நல்லா பெரிய பெரிய டயர்களோட குண்டா இருக்கும். ஏறி மிதிக்கவே கொஞ்சம் கடினம் தான். ஆனா இந்த ஊர்ல அந்த வண்டியை வச்சிகிட்டு நல்லா பெரிய பெரிய மலைகளே ஏறுறாங்க. ஏறுவதற்கு தனி கியர், இறக்கத்துக்கு தனி கியர். வித்தியாசமான வண்டி. சாதா சாலையில் ஓட்ட கொஞ்சம் கஷ்டம் தான்

ரெண்டுங்கெட்டான் வண்டி (அதாங்க hybrid) இது ரெண்டும் கலந்திருக்கும். வண்டி சக்கரம் பருமனுமில்லாம, ஒல்லியுமில்லாம நம்ம ஊரு சக்கரம் சைசுக்கு இருக்கும். கைப்பிடி வளைவா இருக்காது, படுத்துட்டு ஓட்ட வேண்டாம். சாலை, மலை ரெண்டுத்துலயும் நல்லா போகும்.

வண்டி வாங்கப் போனபோது இத்தனையும் தெரியாது.. வாங்கி வந்து ஓட்ட சிரமப்பட்டபோது ஆராய்ச்சி பண்ணி தெரிஞ்சிகிட்டேன். வாலண்ணாச்சி கடையில் வாங்குறதும் அவ்வளவு சரியில்லைன்னு வண்டி மாசத்துக்கு ஒரு தரம் பிரேக் வேலை செய்யாம போகும்போது தான் புரிஞ்சது. அடுத்து வாங்குறவங்களுக்கு வாலண்ணன் வேண்டாம் வேண்டாம், டார்கெட் தம்பி கடையை முயற்சி பண்ணுங்கன்னு சொல்லிகிட்டிருக்கேன்.
நம்மை மாதிரி இந்தியாவிலிருந்து வரும் மென்பொருள் கூலிங்களுக்கு ஓரளவு கட்டிவரும் விலையில் இருக்கும். அது தவிர இந்த பைக் விற்கிறதுக்குன்னே கடை கண்ணி இருக்கும், அங்க எல்லாம் போய் பைக் விலை கேட்டா, ரெண்டு பைக் வாங்குற விலையில் ஒரு பழைய காரே வாங்கிடலாம்னு தோணும். ஓவர் சீன் உடம்புக்காகாதுன்னு வண்டி ஓட்டும் யோசனையை விட்டுட்டு வந்துடுவீங்க..
ஆக ஒரு வழியா வண்டி வாங்கியாச்சா. அடுத்து முக்கியமா கவனிச்சது என்னான்னா, இந்த ஊர் வண்டிகளுக்கு
- பின்னாடி கேரியர் கிடையாது
- மட்கார்ட், செயின் கார்ட் ஒரு மண்ணாங்கட்டி கார்டும் கிடையாது. அதனால நீங்க கண்டிப்பா பாண்ட் போட்டுத் தான் வண்டி ஓட்டணும். நம்மூர்ல பொண்ணுங்க சேலையை இழுத்து சொருகிட்டு ஓட்டுறதை எல்லாம் இவங்க ஜிம்னாஸ்டிக்ஸ்ல சேர்த்துருவாங்கன்னு நினைக்கிறேன். அங்க துப்பட்டாவை மட்டும்தான் பிடிக்கிற வேலை. ஆனா இங்க முதல்ல கட்டவேண்டியது உங்க காலை. அதாவது கணுக்கால் பக்கத்தில் கொஞ்சம் freeயா துணி இருந்தா அது கண்டிப்பா கருப்பாகிடும். அதனால அதை முதலில் ஒரு ரப்பர் பேண்ட் வச்சி கட்டணும்.
அடுத்து குளிர் காலத்துல வண்டி ஓட்டணும்னா ஒரு ஜெர்கின் போட்டாகணும். வெயில் காலத்துல அலுவலகம் போகிறதுக்குள்ள தொப்பலா நனைஞ்சிடுவோம்ங்கிறதினால அதுக்கு முன்னாடி வேற சட்டை போட்டுகிட்டு பையில் ஒரு துண்டு வச்சிகிட்டு போகணும். சிலர் வண்டி மிதிச்சிகிட்டு போனதுக்காகவே அலுவலகம் வந்து குளிக்கிறவங்களும் இருக்காங்க.

இங்க பல சாலைகளில் பைக்குக்குன்னு தனி lane உண்டு. அதில் ஓட்டலாம். அது இல்லாத சாலைகளில் ஓரமா, கடைசி லேனில் ஓட்டலாம். சைக்கிள் காரங்களுக்கு வழி விட்டு மரியாதையா நடக்க வேண்டியது வேகமா ஓடும், பாதுகாப்பான மற்ற வண்டி ஓட்டுனர்களோட (கார், பேருந்து, ட்ரக்) கடமை. நடைபாதைகளிலும் பைக் ஓட்டலாம். அப்ப முன்னாடி பின்னாடி பார்த்து, நடக்கிறவங்க மேல மோதாம ஓட்டுறது பைக் ஓட்டுனரோட கடமை.
பைக் ஓட்டுறது ஒரு நல்ல உடற்பயிற்சி. இங்க நல்லா வெகு தூரம் ஓட்டுறவங்க கூட இருக்காங்க. அதே போல பைக் ஓட்டுறதுங்கிறது ஒரு குடும்ப நிகழ்வாவும் பயன்படுத்துறாங்க. அப்பா, பையன், அம்மான்னு எல்லாமா வண்டி எடுத்துகிட்டு விடுமுறை நாளில் ஓட்டக் கிளம்பிடறாங்க. எங்க அலுவலகத்துக்கே ஒரு குடும்பம், அம்மா, அப்பா, ரெண்டு பசங்க எல்லாமா சைக்கிளில் வருவாங்க. அப்பாவும் அம்மாவும் தனித் தனியா வண்டி ஓட்ட, பசங்க ரெண்டுத்துக்கும் ஒரு குட்டி பல்லக்கு மாதிரி வண்டியில் வச்சி அப்பா வண்டியில் கட்டி அதையும் இழுத்துகிட்டு ஓட்டுறார் அவர். பசங்க ரெண்டும் சிறுசு, அலுவலகத்தைச் சேர்ந்த குழந்தைகள் காப்பகத்துக்குத்தான் வருது.
இந்த ஊரு ரயில், பேருந்து எல்லாத்துலயும் பைக்கை ஏத்துவாங்க. நம்ம பைக்கை நாமே ஏத்தி ரயிலில் அதுக்குன்னு இருக்கும் இடத்தில் தூக்கி மாட்டிரணும்.
நமக்கான இறங்குமிடம் வரும்போது அதை நாமே எடுத்துகிட்டு இறங்கிட
வேண்டியது. பேருந்திலும் இதே தான்- என்ன பைக் மாட்டுமிடம் பேருந்துக்கு
வெளியில். உயரமான பேருந்தாச்சா, அதன் முன் பக்க கண்ணாடிக்கு கீழே ஒரு பைக்
மாட்டுமளவுக்கு இடம் இருக்கும். மக்களுக்கு அதிக அவசரமே இல்லை. பேருந்து
ஓட்டுனர் நம்ம பைக்கை ஏற்றி இறக்கும் வரை காத்திருப்பாரு - பயணிகளும்.
புத்தகசாலைகள், பணியிடங்கள், விற்பனையகங்கள்னு எல்லா இடத்திலும் பைக் நிறுத்துமிடங்கள் இருக்கும். நிறுத்துமிடம்னா பெரிசா ஏதாவது கற்பனை பண்ணாதீங்க. சும்மா ரெண்டு மூணு வளைவு இருக்கும். அந்த வளைவுகளில் நம்ம வண்டியை தள்ளி பூட்டிக்க வேண்டியது தான
இது தவிர சில Park&Ride ரயில் நிலையங்களில் வண்டியை வச்சிப்
பூட்ட பூட்டு சாவி கூட கொடுக்கிறாங்களாம். என்ன பூட்டினாலும் வண்டியை
அடிச்சிட்டு போகிறவங்க இந்த ஊரிலும் இருக்காங்க.. ஒண்ணும் செய்ய முடியாது..
எங்க அலுவலகத்தில் சில சமயம் ‘என் பைக் விளக்கை எல்லாம் எடுத்துட்டுப்
போனவங்க பத்திரமா கொண்டு வந்து வச்சிடுங்க, மக்கள் கவனிச்சுகிட்டு தான்
இருக்காங்க’ன்னு போர்ட் எல்லாம் வைப்பாங்க
எல்லா விளையாட்டும் போல சைக்கிளுக்கும் இவங்க காலம் வச்சிருக்காங்க. வெயில் காலம், வசந்த காலம், ஏன் இலையுதிர் காலம் வரை சைக்கிள் நல்லா ஓட்டறாங்க. அப்புறம் குளிர் காலத்துல ஓட்டணுமானா அதுக்கு காலை மட்டும் தனியா சூடாக்கும் பேண்ட், மேலுக்கு ஜெர்க்கின்னு ரெண்டாளு சைசுக்கு உடை மாட்டிகிட்டுத் தான் சைக்கிள் மிதிக்க முடியும்.
ஏப்ரல் போல சைக்கிள் நிறைய கடைக்கு வரும். மே, ஜூன் எல்லாம்
கேட்டாலும் கிடைக்காது. நான் நல்ல வேளையா பிப்ரவரியை ஒட்டி வாங்கிட்டேன்.
நல்ல சைக்கிளே கிடைச்சது அப்ப. இப்ப முயற்சி பண்றவங்களுக்கே சரியா
கிடைக்கிறதில்லை.
நம்மளை மாதிரி அலுவலகத்துக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு மிதிவண்டி ஓட்டிப் போறவங்களை விட, குடும்பமா வெளிய கிளம்பி பக்கத்து தீவுக்கோ, ஊருக்கோ போய் வண்டி ஓட்டுறவங்க இருக்காங்க. வண்டியை கார்ல மாட்ட தனியா ஒரு accessory கிடைக்குது.. அதில் ரெண்டு மூணு மிதிவண்டியைக் கூட எடுத்து மாட்டிகிட்டு குடும்பத்தோட கிளம்பிடறாங்க.. ரெண்டு சின்ன வண்டி, ரெண்டு பெரிய வண்டின்னு கார் பின்னால அது தொங்குறதைப் பார்க்கிறப்ப நல்லா இருக்கும்..

எப்படியோ, அப்பப்ப, ‘நாங்க எல்லாம் பத்து மைல் தொலைவு வண்டி மிதிச்சி படிச்சிட்டு வந்தமாக்கும்’னு எங்கப்பா சொல்லும்போது, நானும் இப்ப எல்லாம், ‘நாங்களும் அஞ்சரை மைல் வண்டி மிதிச்சுத் தான் ஆபீஸ் போறம்’னு நெட்டி முறிக்கிறேன்ல..
முதல் விசயம் என்னன்னா, அமெரிக்காவல பைக்னா நம்ம ஊர்ல சைக்கிள் - அதாங்க மிதிவண்டி. மோடார்னா அது கார். அப்ப நம்ம ஊரு மோட்டார் பைக்குக்கு என்ன பேர் சொல்லுவாங்கன்னு கேட்காதீங்க.. அதை நான் இன்னும் கண்டுபடிக்கலை.
ஆக Biker friendly Communityன்னா, சைக்கிள் ஓட்டுறவங்களை ஊக்கப் படுத்தும், அவங்க சேதாரமில்லாம வீட்டுக்குப் போக உதவும் ஊருன்னு அர்த்தம். இவ்வளவு பாசக்கார பசங்களா இருக்காங்களேன்னு நானும் ஒரு சைக்கிள் ஓட்டுறதுன்னு முடிவு பண்ணேன்.
சரியா ஆறு மாசத்துக்கு முன்னால் தினமும் சைக்கிளில் வரும் எங்க அலுவலக நண்பர் அந்தப் பெரிய உதவியை எனக்குச் செய்ய முன்வந்தார். அவரும் நானுமா போய் பக்கத்து அண்ணாச்சி கடையில் (அதாங்க வால் அண்ணாச்சி கடை) நல்லதா ஐம்பது டாலருக்கு ஒரு சைக்கிள் வாங்கியாந்தேன். ஆன விலை கம்மி, அங்குசந்தான் விலை அதிகம்ங்கிற மாதிரி, அதுக்கு வாங்கின சுத்துப்பட்டு சாதனங்கள் எல்லாம் சேர்ந்து நூத்துப்பத்து டாலராகிடுச்சு. அப்படி என்னத்த சுத்துப் ‘பட்டு’ சாதனங்கள்னு கேட்டீங்கன்னா,
- முன்னாடி, பின்னாடி பாட்டரி விளக்கு
- தலைக்கவசம்
(இது ரெண்டும் இங்க விதிப்படி இருந்தாகணும். )
- குளிர்காலத்துல போட்டுகிட்டு ஓட்ட ஒரு கையுறை
- சீட் கொஞ்சம் நல்லா இல்லாததினால அதுக்கு ஒரு பஞ்சு வைத்த உறை
- வண்டியில் ஏதாச்சும் சின்ன பிரச்சனைன்னா சரி பண்ண ஆயுத பொட்டி
- பஞ்சர் ஒட்ட, டயரை கழற்ற ஒரு ஸ்பானர்
- காத்தடிக்க பம்பு
- பூட்டு
| From பொன்ஸ் பக்கங்கள் |
- வண்டியில் முன்புறம் மாட்ட ஒரு பை
| From பொன்ஸ் பக்கங்கள் |
இங்க எல்லாம் சைக்கிளே நாலஞ்சு வகையில் கிடைக்குது. முக்கியமா எனக்குத் தெரிஞ்சி மூன்று பெரும்பிரிவுகள்:
1. சாதாரண சாலைக்கான வண்டி - Road bike
2. மலைகளுக்கான வண்டி - Mountain Bike
3. ரெண்டும் கலந்த கலவை - Hybrid
சாலை வண்டி மெல்லிசா பஞ்சத்துல அடிபட்டதாட்டம் ஒல்லியா இருக்கும். ஆனா சாதா சாலைகளில் நல்லா வழுக்கிகிட்டு போகும். ரொம்ப பலமா மிதிக்க வேண்டாம். அதோட கைப்பிடி கொஞ்சம் வளைவா இருக்கும். படுத்துட்டு ஓட்டுறது மாதிரி இருக்கும் ஆனா அதுவும் முதுகுக்கு நல்லதுன்னு சொல்லுறாங்க.

மலை மிதிவண்டி நல்லா பெரிய பெரிய டயர்களோட குண்டா இருக்கும். ஏறி மிதிக்கவே கொஞ்சம் கடினம் தான். ஆனா இந்த ஊர்ல அந்த வண்டியை வச்சிகிட்டு நல்லா பெரிய பெரிய மலைகளே ஏறுறாங்க. ஏறுவதற்கு தனி கியர், இறக்கத்துக்கு தனி கியர். வித்தியாசமான வண்டி. சாதா சாலையில் ஓட்ட கொஞ்சம் கஷ்டம் தான்

ரெண்டுங்கெட்டான் வண்டி (அதாங்க hybrid) இது ரெண்டும் கலந்திருக்கும். வண்டி சக்கரம் பருமனுமில்லாம, ஒல்லியுமில்லாம நம்ம ஊரு சக்கரம் சைசுக்கு இருக்கும். கைப்பிடி வளைவா இருக்காது, படுத்துட்டு ஓட்ட வேண்டாம். சாலை, மலை ரெண்டுத்துலயும் நல்லா போகும்.

வண்டி வாங்கப் போனபோது இத்தனையும் தெரியாது.. வாங்கி வந்து ஓட்ட சிரமப்பட்டபோது ஆராய்ச்சி பண்ணி தெரிஞ்சிகிட்டேன். வாலண்ணாச்சி கடையில் வாங்குறதும் அவ்வளவு சரியில்லைன்னு வண்டி மாசத்துக்கு ஒரு தரம் பிரேக் வேலை செய்யாம போகும்போது தான் புரிஞ்சது. அடுத்து வாங்குறவங்களுக்கு வாலண்ணன் வேண்டாம் வேண்டாம், டார்கெட் தம்பி கடையை முயற்சி பண்ணுங்கன்னு சொல்லிகிட்டிருக்கேன்.
நம்மை மாதிரி இந்தியாவிலிருந்து வரும் மென்பொருள் கூலிங்களுக்கு ஓரளவு கட்டிவரும் விலையில் இருக்கும். அது தவிர இந்த பைக் விற்கிறதுக்குன்னே கடை கண்ணி இருக்கும், அங்க எல்லாம் போய் பைக் விலை கேட்டா, ரெண்டு பைக் வாங்குற விலையில் ஒரு பழைய காரே வாங்கிடலாம்னு தோணும். ஓவர் சீன் உடம்புக்காகாதுன்னு வண்டி ஓட்டும் யோசனையை விட்டுட்டு வந்துடுவீங்க..
ஆக ஒரு வழியா வண்டி வாங்கியாச்சா. அடுத்து முக்கியமா கவனிச்சது என்னான்னா, இந்த ஊர் வண்டிகளுக்கு
- பின்னாடி கேரியர் கிடையாது
- மட்கார்ட், செயின் கார்ட் ஒரு மண்ணாங்கட்டி கார்டும் கிடையாது. அதனால நீங்க கண்டிப்பா பாண்ட் போட்டுத் தான் வண்டி ஓட்டணும். நம்மூர்ல பொண்ணுங்க சேலையை இழுத்து சொருகிட்டு ஓட்டுறதை எல்லாம் இவங்க ஜிம்னாஸ்டிக்ஸ்ல சேர்த்துருவாங்கன்னு நினைக்கிறேன். அங்க துப்பட்டாவை மட்டும்தான் பிடிக்கிற வேலை. ஆனா இங்க முதல்ல கட்டவேண்டியது உங்க காலை. அதாவது கணுக்கால் பக்கத்தில் கொஞ்சம் freeயா துணி இருந்தா அது கண்டிப்பா கருப்பாகிடும். அதனால அதை முதலில் ஒரு ரப்பர் பேண்ட் வச்சி கட்டணும்.
அடுத்து குளிர் காலத்துல வண்டி ஓட்டணும்னா ஒரு ஜெர்கின் போட்டாகணும். வெயில் காலத்துல அலுவலகம் போகிறதுக்குள்ள தொப்பலா நனைஞ்சிடுவோம்ங்கிறதினால அதுக்கு முன்னாடி வேற சட்டை போட்டுகிட்டு பையில் ஒரு துண்டு வச்சிகிட்டு போகணும். சிலர் வண்டி மிதிச்சிகிட்டு போனதுக்காகவே அலுவலகம் வந்து குளிக்கிறவங்களும் இருக்காங்க.

இங்க பல சாலைகளில் பைக்குக்குன்னு தனி lane உண்டு. அதில் ஓட்டலாம். அது இல்லாத சாலைகளில் ஓரமா, கடைசி லேனில் ஓட்டலாம். சைக்கிள் காரங்களுக்கு வழி விட்டு மரியாதையா நடக்க வேண்டியது வேகமா ஓடும், பாதுகாப்பான மற்ற வண்டி ஓட்டுனர்களோட (கார், பேருந்து, ட்ரக்) கடமை. நடைபாதைகளிலும் பைக் ஓட்டலாம். அப்ப முன்னாடி பின்னாடி பார்த்து, நடக்கிறவங்க மேல மோதாம ஓட்டுறது பைக் ஓட்டுனரோட கடமை.
பைக் ஓட்டுறது ஒரு நல்ல உடற்பயிற்சி. இங்க நல்லா வெகு தூரம் ஓட்டுறவங்க கூட இருக்காங்க. அதே போல பைக் ஓட்டுறதுங்கிறது ஒரு குடும்ப நிகழ்வாவும் பயன்படுத்துறாங்க. அப்பா, பையன், அம்மான்னு எல்லாமா வண்டி எடுத்துகிட்டு விடுமுறை நாளில் ஓட்டக் கிளம்பிடறாங்க. எங்க அலுவலகத்துக்கே ஒரு குடும்பம், அம்மா, அப்பா, ரெண்டு பசங்க எல்லாமா சைக்கிளில் வருவாங்க. அப்பாவும் அம்மாவும் தனித் தனியா வண்டி ஓட்ட, பசங்க ரெண்டுத்துக்கும் ஒரு குட்டி பல்லக்கு மாதிரி வண்டியில் வச்சி அப்பா வண்டியில் கட்டி அதையும் இழுத்துகிட்டு ஓட்டுறார் அவர். பசங்க ரெண்டும் சிறுசு, அலுவலகத்தைச் சேர்ந்த குழந்தைகள் காப்பகத்துக்குத்தான் வருது.
இந்த ஊரு ரயில், பேருந்து எல்லாத்துலயும் பைக்கை ஏத்துவாங்க. நம்ம பைக்கை நாமே ஏத்தி ரயிலில் அதுக்குன்னு இருக்கும் இடத்தில் தூக்கி மாட்டிரணும்.
| From பொன்ஸ் பக்கங்கள் |
புத்தகசாலைகள், பணியிடங்கள், விற்பனையகங்கள்னு எல்லா இடத்திலும் பைக் நிறுத்துமிடங்கள் இருக்கும். நிறுத்துமிடம்னா பெரிசா ஏதாவது கற்பனை பண்ணாதீங்க. சும்மா ரெண்டு மூணு வளைவு இருக்கும். அந்த வளைவுகளில் நம்ம வண்டியை தள்ளி பூட்டிக்க வேண்டியது தான
| From பொன்ஸ் பக்கங்கள் |
எல்லா விளையாட்டும் போல சைக்கிளுக்கும் இவங்க காலம் வச்சிருக்காங்க. வெயில் காலம், வசந்த காலம், ஏன் இலையுதிர் காலம் வரை சைக்கிள் நல்லா ஓட்டறாங்க. அப்புறம் குளிர் காலத்துல ஓட்டணுமானா அதுக்கு காலை மட்டும் தனியா சூடாக்கும் பேண்ட், மேலுக்கு ஜெர்க்கின்னு ரெண்டாளு சைசுக்கு உடை மாட்டிகிட்டுத் தான் சைக்கிள் மிதிக்க முடியும்.
| From பொன்ஸ் பக்கங்கள் |
நம்மளை மாதிரி அலுவலகத்துக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு மிதிவண்டி ஓட்டிப் போறவங்களை விட, குடும்பமா வெளிய கிளம்பி பக்கத்து தீவுக்கோ, ஊருக்கோ போய் வண்டி ஓட்டுறவங்க இருக்காங்க. வண்டியை கார்ல மாட்ட தனியா ஒரு accessory கிடைக்குது.. அதில் ரெண்டு மூணு மிதிவண்டியைக் கூட எடுத்து மாட்டிகிட்டு குடும்பத்தோட கிளம்பிடறாங்க.. ரெண்டு சின்ன வண்டி, ரெண்டு பெரிய வண்டின்னு கார் பின்னால அது தொங்குறதைப் பார்க்கிறப்ப நல்லா இருக்கும்..

எப்படியோ, அப்பப்ப, ‘நாங்க எல்லாம் பத்து மைல் தொலைவு வண்டி மிதிச்சி படிச்சிட்டு வந்தமாக்கும்’னு எங்கப்பா சொல்லும்போது, நானும் இப்ப எல்லாம், ‘நாங்களும் அஞ்சரை மைல் வண்டி மிதிச்சுத் தான் ஆபீஸ் போறம்’னு நெட்டி முறிக்கிறேன்ல..
Sunday, September 14, 2008
குவியம்
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் வீட்டு ராணி முத்து காலண்டரில்
ராசி பலன் படிக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்து பயந்து
கண்மருத்துவரிடம் அழைத்துப்போய்க் கண்ணாடி வாங்கி மாட்டிவிட்டுவிட்டார்
அப்பா. வாங்கிய புதிதில் என்னுடைய கண்ணாடி பற்றி எனக்கு ரொம்பவும் பெருமை
இருந்ததுண்டு.
‘கொஞ்சம் நல்ல frame. குழந்தை கீழ எல்லாம் போட்டா அவ்வளவு சுலபத்துல உடையாது சார்’ என்று நம்பிக்கையுடன் சொல்லிய கடைக்காரர் கொடுத்த பெருமை.
கண்ணாடி வாங்கி போட்ட அன்றே அதை முட்டிக்கால் உயரத்திலிருந்து, இடுப்பளவிலிருந்து, தோள் உயரத்திலிருந்து, தலைக்கு மேலிருந்து என்று கீழே போட்டுப் போட்டுச் சோதனை செய்து அது உடையவில்லை என்று கண்ட பின்னரே பள்ளிக்குப் போனேன். பள்ளியில் சும்மா இருக்காமல், என்னுடைய புதுக் கண்ணாடியின் மாண்பை நிருபிக்கும் விதமாக அதை அதன் மென்கூட்டுக்குள் போட்டு கையால் ‘பட் பட் பட் ‘ என்று தட்டோ தட்டென்று தட்டிவிட்டு, மந்திரவாதி மாதிரி திறந்து காட்டினால், அப்போதும் அந்த frame உடையவே இல்லை. ஆனால் கண்ணாடியின் குவியப்பகுதி தான் சுக்கு நூறாக உடைந்து சரி பண்ணவே முடியாதநிலையில் அதைக் கூட்டை விட்டு வெளியில் எடுத்தால் கீழெல்லாம் சிதறிவடும் வகையில் இருந்தது.
‘விளையாடும்போது கீழ விழுந்து தான் உடைஞ்சது’ என்று நான் சொன்னதை இன்றும் என் அப்பா நம்பிக் கொண்டிருக்கிறார் என்று தான் நம்புகிறேன்..
அன்று தொடங்கி சராசரியாக ஆறு மாதத்துக்கு ஒருமுறை நான் புதுக்கண்ணாடி போட்டிருக்கிறேன். ப்ளாஸ்டிக் frame, உலோக frame, ஆமை ஓட்டு frame, என்று விதம் விதமாகவும், கண்ணாடியைப் பிடித்துக் கொள்ள தலைக்கயிறு, என்று உடன்பொருட்களாகவும் என் அப்பாவும் வெவ்வேறு முறைகளைக் கையாண்டு பார்த்து அலுத்துத் தான் போய்விட்டார்.

இந்தக் காலப் பிள்ளைகள் போலில்லாமல், கண்ணாடி போட்டால் என் அழகே கூடிப் போவதாக அப்பா சொன்னதில், நான் இரவு பகல் எக்காலமும் கண்ணாடியைக் கழற்றாமல், கர்ணனுக்குத் தங்கை மாதிரி சுற்றிக் கொண்டிருந்தேன். தூங்கும் நேரங்களில் கூட சில நாள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டே தூங்கி, யாராவது கவனித்து அதை அவிழ்த்து வைக்காக நாட்களில், அதைப் போட்டுக் கொண்டே காலை எழுந்திருந்திருக்கிறேன். மாதமொருமுறை கண்ணாடியுடன் சேர்ந்து குளித்து அதையும் சுத்த(!)ப்படுத்துவது சின்னவயதுப் பழக்கம்.
நினைவு தெரிந்து கல்லூரிக் காலத்தில் தான் போட்டுவிட்ட கண்ணாடியை நான்கு வருடம் போல மாற்றாமல், உடைக்காமல் பத்திரமாக வைத்திருந்தேன். அதன் பின் நான் உடைக்காவிட்டாலும், கண்ணின் குறைபாடு அதிகமாக ஆக, வருடா வருடம் கண்ணாடி மாற்றியே ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
கண்ணாடி போட்டுக் கொண்டே பிறந்தவள் போல நான் செய்யும் அழும்பு தாங்காமல், அம்மா லென்ஸுக்கு மாறச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தார். கூட தங்கியிருந்த சில குவியத்(;-)) தோழிகள் இந்திய தூசியில் படும் கஷ்டத்தைப் பார்த்த பின்னால் அந்த முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இங்கே வந்து அதையும் முயன்று பார்ப்போமே என்று தோன்ற, இதோ, இத்தோடு இரண்டு மாதமாக வெற்றிகரமாக கண்ணாடி இல்லாத பூர்ணாவாகிவிட்டேன்.
இந்த ஊர் மருத்துவர்கள், குவியத்தை முயன்று பார்க்கவென்றே ஒரு வாரம் தருகிறார்கள். முயன்று ‘பொருந்துகிறது, உறுத்தவில்லை’ என்று நாம் சொன்னால் தான் அடுத்து மருந்துச் சீட்டே எழுதித் தருகிறார்கள். ஆரம்பத்தில் கண்ணுக்குள் போட்டு எடுப்பது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. கிட்டத் தட்ட அரை மணி நேரம் கண்ணாடி முன்னால் செலவு செய்யவேண்டிய அவசியம் இருந்தது. இப்போதெல்லாம் அப்படியே ஒரே நொடியில், பாட்டு பாடிக் கொண்டே, கார் கண்ணாடியைப் பார்த்தபடியே என்று சுலபமாக எடுக்கவும் போடவும் கற்றுக் கொண்டுவிட்டேன்.
முதல் நாள் லென்ஸ் போட்டு விட்டுவிட்டு,அந்த டாக்டரம்மா தன்னுடைய உதவியாளரை அழைத்து எனக்கு போட்டுக் கழற்றச் சொல்லிக் கொடுக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். கம்பவுண்டர் பெண்ணும் வந்து, வலது கண் லென்ஸை கழற்றி மாட்டுவது எப்படி என்று விளக்கினாள், என்னையும் செய்ய வைத்தாள். அடுத்து இடது கண்ணுக்கும் சொல்லித் தருவாள் என்று பார்த்தால், ‘நாங்க ஒரு கண்ணுக்குத் தான் சொல்லித் தருவோம், வேணும்னா நீயே கழற்றிப் போட்டுக்கோ’ என்றுவிட்டுப் போய்விட்டாள்.
நான் இடது கண் லென்ஸை வெகு சுலபமாக ஒரே முயற்சியில் கழற்றிவிட்டு ‘குட் ஜாப் பூர்ணா’ என்று என் தோளை நானே தட்டிக் கொடுத்துவிட்டு திரும்பிப் போட முயன்றேன். இடது கை நடுவிரலால் கண்ணின் மேல்பக்கத்தைத் தூக்கி, வலது கை நடுவிரலால் கீழ்ப்பக்கத்தை இழுத்து, ஆட்காட்டி விரலில் இருந்த லென்ஸைப் போட முயன்றால், கண் தானாக மூடிக் கொள்கிறது! ஒரு முழு லென்ஸ் போடும் அளவுக்கு அங்கே இடம் இருந்தால் தானே!
நான்கு முறை முயன்றுவிட்டு அந்தப் பெண்ணைப் பரிதாபமாக பார்த்தேன். அவளே கொஞ்சம் நேரம் கிடைத்த போது வந்து ‘என்ன?’ என்றாள். பிரச்சனையைச் சொல்லி, அதைச் செய்தும் காண்பித்தேன். ‘ஓகே, நீ என்ன தப்பு பண்றேன்னு எனக்குப் புரியுது… நீ இடது கண் கிட்ட லென்ஸைக் கொண்டு போகிறப்போ, வலது கண்ணை மொத்தமா மூடிடறே. அதனால உனக்கு கண்ணே தெரியாம போயிடுது(!).. அதான் லென்ஸைப் போட முடியலை.. முதல்ல ரெண்டு கண்ணையும் திறந்து வச்சிகிட்டு முயற்சி பண்ணு’ என்றாள். என் கையைப் பார்த்தே பயந்து போகும் என் கண்ணை நொந்துகொண்டே மறுபடி முயன்று ஒருவழியாக போட்டு முடித்தேன்.
‘ஆல் த பெஸ்ட்’ சொல்லி அனுப்பிவைத்தவளை அடுத்த இரண்டே நாளில் அழைக்க வேண்டிவரும் என்று நினைக்கவே இல்லை. புதன்கிழமை காலை எட்டு மணி கூட்டத்துக்காக அவசர அவசரமாக குளித்து, வேக வேகமாக தயாராகி கண்ணில் மீண்டும் லென்ஸ் போட்டால், இடது கண் ரொம்பவும் கரித்தது, ஒரே உறுத்தலும் கூட. கொஞ்ச நேரத்தில் அந்தக் கண் சரியாக தெரியாமல் வேறு போய்விட்டது. வேறு வழியின்றி வீட்டிலிருந்தே கூட்டத்தை முடித்து அடுத்த வேலையாக கண்ணாடி முன்னால் நின்று கண்ணிலிருந்து லென்ஸை எடுக்க முயன்று கொண்டே இருந்தேன்.
நானும் மேல் இமையைத் தூக்கி, கீழ் இமையை இழுத்து பாப்பாவுக்கு அருகில் கிள்ளினால், அந்த லென்ஸ் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. தொடர்ந்து செய்யச் செய்ய கண் சிவப்பாகி எரிவது தான் மிச்சம். ஒரு சந்தேகத்தில், கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்த்தால், கண் நன்றாக தெரிகிறது! ‘பூர்ணா நீங்க லென்ஸே போடலை, வெறும் கண்ணைக் கிள்ளிகிட்டிருக்கீங்க. அதான் சிவந்து போச்சு!’ என்று சொல்லி சிரிக்கிறார் அனுபவஸ்தரான அறைத்தோழி. அவரின் காலருகில் விழுந்து கிடந்த என்னுடைய இடது கண் குவியத்தையும் எடுத்துக் கொடுத்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த முறை எப்படியும் இந்த லென்ஸ் போடும் வித்தையை வென்றே தீருவது என்றே முடிவெடுத்து தொடர்ந்து போட்டு ஒரு வார சோதனைக் காலமும் கடந்தபின் என் அப்பாவிடம் போன் செய்து சொன்னேன்.
- லென்ஸ் போட்டு
* குளிக்கக் கூடாது
* தூங்க கூடாது
* முகம் கழுவக் கூடாது
* அழக் கூடாது
* நீஞ்சக் கூடாது
கையை கூடியவரை சுத்தமா வச்சிக்கணும்
நகத்தைச் சின்னதா வச்சிக்கணும்.
என்று அந்த மருத்துவர் சொன்னதெல்லாம் சொல்லி முடித்ததும், என் அப்பா
கேட்ட கேள்வி,’இதுல எதுவுமே உன்னால முடியாதே! நீ கண்டிப்பா லென்ஸ் போடத்
தான் போறியா? ஆமா, அதை கீழ மேல போட்டு பாக்கு வெட்டியில் போட்டு இடிச்சி
சோதனை எல்லாம் செய்தாச்சா?’

Monday, June 09, 2008
The Pianist
போர் பற்றிய கதைகள் முடிவதே இல்லை. அதிலும் இரண்டாம் உலகப் போரைப்
பற்றியும் அதில் தப்பிப் பிழைத்தவர்கள் பற்றியுமான கதைகள் இன்னும் எத்தனை
இருக்கின்றனவோ.. அது போன்ற ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும்போதும் அடுத்த
படத்தைப் பார்க்கக் கூடாது என்று நிச்சயம் நினைத்துக் கொள்கிறேன்… Life is
beautiful(France), The Diary of Anne Frank(Austria), இப்போது The
Pianist(Poland). இரண்டாம் உலகப் போர் பற்றியும் யூதர்களின் concentration
camp பற்றியும் சொல்ல ஒவ்வொரு நாட்டுக்கும் பல விசயங்கள் இருக்கும் போலும்.
The Pianist, முந்தைய இரு படங்கள் போல குழந்தைகள் பற்றி இல்லாமல், ஒரு கலைஞன் பற்றியது. சோகக் கதையையும் இவ்வளவு இசை மயமாக எடுத்திருப்பது அருமை. போலந்தில் ஹிட்லரின் படைகள் வந்திறங்கிய விதம் குறித்தும் போர்வியூகங்கள் குறித்தும் பல முறை படித்திருக்கிறேன். ஆனால் சில நுண்தகவல்களை இந்தப் படத்தில் புதிதாக தெரிந்து
கொள்ள முடிந்தது உண்மை தான்.

யூதர்களை நகரத்தின் நடுமத்திக்கு அனுப்ப ஹிட்லர் முடிவு செய்வது, எல்லா யூதர்களும் வலது கையில் தாம் யூதர் என்பதற்கான அடையாளத்தைத் தாங்க வேண்டும் என்ற விதி, என்று புதுப் புது விவரங்கள்.. தெரிந்து என்ன செய்வது என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டியது உலக குடிமகள் என்ற முறையில் என்னுடைய கடமையும் கூடத் தான். முழு படமுமே நெஞ்சைத் தொடும் என்றாலும், ஸ்பில்ஸ்மென் குடும்பத்தினர் கடைசியாக இறப்பை நோக்கிப் போவதற்கு முன்னால் குடும்பத்துடன் ஒன்றாக உண்ணும் கடைசி உணவான அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஒற்றைச் சாக்லெட் பற்றிய காட்சியும், உணவுக்கு ஏங்கி தரையில் கொட்டிக் கிடக்கும் கோதுமையைக் கூட உண்ணத் தயாராக இருக்கும் வயதான யூதர்கள் பற்றிய காட்சியும் நினைவில் நிற்பவை. கடைசி சில காலம் ஸ்பில்ஸ்மென் உயிருடன் இருக்க உதவும் ஜெர்மனிய ராணுவ அதிகாரி பரிதாபகரமாக ரஷ்ய சிறைக் கேம்பில் இறப்பது பெரிய நகைமுரண்.
முக்கியமாக கதையின் ஆரம்பத்தில் வரும் சொந்த மக்களை வருத்தி வேலையில் இருக்க நினைக்கும் யூதப் போலீஸ்காரருக்கும், யூதர்களை ஆதரிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தும் யூதனுக்கு உணவு கொடுத்த ஆதரித்த ஜெர்மனிய ராணுவ அதிகாரிக்கும் ஒரே முடிவு வாய்க்கிறது.
ஸ்பில்ஸ்மென் பிழைத்து வந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்தக் கதையை எழுதிவிட்டதால் இதில் நிறைய கற்பனை கலக்க வாய்ப்பில்லை. ஆனால் இது எழுதிய உடனேயே வெளிவராமல் போக ரஷ்யர்கள் விடவில்லை என்று சொல்லப்படுவதற்கு சரியான காரணம் தான் எனக்குக் கிடைக்கவே இல்லை.
[கூடியவரை கதை சொல்லாமல் எழுத முயன்றிருக்கிறேன். முழுமையடையாதது போன்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவல்லை.. ]

Monday, May 19, 2008
ஏன் இந்தக் கோடை…
ஜெய்சிங்கை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒரு இடத்தில் உட்காராமல் ஓடிக்
கொண்டும் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருப்பான். ஆனால் பாடத்தில் படு
சுட்டி. ஒரு தரம் சொன்னால் உடனுக்குடன் பிடித்துக் கொள்ளும் பஞ்சு மூளை
அவனது. ரஜினி ஸ்டைல் போல, ‘ஒரு தரம் கேட்டால் ஓராயிரம் கேட்டது மாதிரி’
அவனுக்கு. அடுத்த முறை அதே பாடத்தை, அதே சொல்லைக் கேட்க போரடிக்கும்
போலும், மீண்டும் மீண்டும் சொல்லித் தரப்படும் எதையும் அமர்ந்து காது
கொடுத்து கேட்க மாட்டான். ஆனாலும் கூரிய மூளை; இந்த உலகத்தில் அதீத
அறிவாளிகள் படும் எல்லா பிரச்சனைகளையும் இந்த வயதிலேயே படத்
தொடங்கிவிட்டான் என்று நினைக்கையில் வருத்தம் அதிகமாகிக் கொண்டு தான்
இருக்கிறது. மெல்ல எல்லாரையும் போல் சராசரி குழந்தையாக மாறிவிடுவான்.
சாந்திக்கு தமிழ் வகுப்புக்கு வந்தால், தமிழைத் தவிர எல்லாம் பேசப் பிடிக்கும். தியா அல்லது நேகா பக்கத்தில் அவளை அமர்த்தவே கூடாது. ‘என் டோரா ஷூக்களை அப்பா வாங்கிக் கொடுத்தார். உன்னுடைய டிரஸ் புதிதா என்ன? எங்கே வாங்கினாய்?’, ‘இந்த தலையலங்காரம் உனக்கு ரொம்ப அழகாக இருக்கிறது. அம்மா செய்து விட்டார்களா?’ என்று விசாரிக்கவென்றே அவளுக்கு நிறைய விசயம் இருக்கும். டீச்சர் என்று பார்க்காமல் என்னிடம் கூட, ‘இந்த வெள்ளைக் காதணி ரொம்ப அழகாக இருக்கிறது. உங்க அம்மா வாங்கி கொடுத்தாங்களா?’ என்று கேட்டிருக்கிறாள். தப்பித் தவறி கூட ‘இ’க்கு அப்புறம் என்ன வரும் என்று கேட்டோ, இலையின் நிறம் பச்சை என்று சொல்லியோ நான் கேட்டதில்லை. அவள் புது ஷூவின் நிறத்தைத் தமிழில் சொல்லச் செய்து தான் நிறங்கள் பற்றி விளக்க முடியும் அவளுக்கு.
நேகா எனக்கு ரொம்பவும் பிடித்தமான மாணவி. இன்னுமொரு குறும்புக்காரி. கண்களால் நடிக்கவும், அழுதோ, அழுவது போல் முகத்தை வைத்துக் கொண்டோ வேண்டியதை சாதிப்பது அவளின் கைவந்த கலை. படிப்பு என்பதை விட தமிழ்வகுப்பு அவளுக்கு பெரிய விளையாட்டுக் கூடம் தான். அந்த அழகான கண்களை உருட்டி அவள் கேட்கும்போதில் மறுக்க மனமின்றி பலநாள் தூக்கி வைத்துக் கொண்டு வகுப்பறையில் நின்றிருக்கிறேன். கடைசியாக பள்ளி இறுதி நாளில், தன் ரப்பர் பாண்டை எடுத்து வந்து தலையில் போட்டு விடச் சொன்ன அன்று, அந்தக் குட்டித் தலைக்குப் போட்டுவிடத் தெரியாமல் நான் முழிக்கவும், சிரித்துக் கொண்டே தன் அப்பாவிடம் ஓடிப் போனதை மறக்கவே முடியாது.
நிரஞ்சன் ரொம்பவும் கவனம் கேட்கும் குழந்தை. ஐந்து நிமிடங்களுக்கு ஒருதரம் அவன் முகத்தைப் பார்த்துவிட வேண்டும். இல்லையெனில் குற்றம் சொல்லும் பாவனையிலும், அழும் விதமாகவும் அது சட்டென மாறிவிடும். நல்ல பதில் சொன்னதற்காக சாஷ்வத் ஒரு ஹைபை(hi5) வாங்கினான் என்றால் அடுத்த கேள்விக்கு நிரஞ்சன் டாண் என்று யாரும் சொல்லுமுன் பதில் சொல்லிவிடுவான். எழுந்து குதித்ததற்காக வர்ஷா டைம் அவுட் வாங்கினாள் என்றால், அந்தக் கவனம் தனக்கு கிடைக்கவில்லையே என்று தானும் குதித்து டைம் அவுட் வாங்கினால் தான் அவனுக்கு மனசு ஆறும். ரொம்பவும் அதிக கவனம் கேட்கும் குழந்தை என்றாலும் புத்திசாலிப்பையன்.

ரித்விக்கும் வர்ஷாவும் ரொம்ப புத்திசாலி. ரித்விக்குக்கு கொஞ்சம் பூஞ்சை உடம்பு, வர்ஷா, வகுப்பின் மற்ற பிள்ளைகளை விட அதிகம் நல்ல தமிழ் பேசுபவள். ஆனால் இருவரும் சுலபமாக சமத்திலிருந்து குறும்புக்காரப் பிள்ளைகளாக மாறுவதில் வல்லவர்கள். யாராவது ஒரு சின்ன பொறியைக் கிளப்பிவிட்டால் போதும், டக்கென எழுந்து விழுந்து புரண்டு, அடுத்தவர்கள் மேல் குதித்து கலவரத்தை உண்டாக்குவது அவர்களுக்குக் கைவந்த கலை. ‘நல்ல பையன் யாரு??’ ‘நல்ல பொண்ணு தானே நீ?’ என்ற ஒற்றைக் கேள்வியில் சட்டென உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
சாஷ்வத், ப்ரீத்தி, தியா, சூர்யா இவர்கள் நால்வரும் பிள்ளைகள் தானா என்று சந்தேகம் ஏற்படுத்தும் விதமான அமைதியான குழந்தைகள். சாஷ்வத் எல்லா நாளும் வகுப்புக்கு வந்துவிடுவான். ரொம்பவும் நல்ல பையன். சொன்னதைக் கேட்டு, ரொம்பவும் குறும்பு செய்யாமல், எல்லா கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லி, அந்தந்த வாரப் பாடங்களைச் சரியாக கவனித்து, வகுப்பில் முதல் மாணவன் என்றால் மிகையில்லை.
ப்ரீத்தியும் ரொம்ப அமைதி. உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் வகுப்பு கவனிக்கக் கூடியவள் அவள் மட்டும்தான். மேலே வந்து விழுந்து விளையாடும் பிள்ளைகளையும் தள்ளாமல், தான் நகர்ந்து உட்கார்ந்து படிக்கக் கூடியவள்.
தியா பொதுவாக தனி உலகத்தில் இருப்பாள். சாந்தி, வர்ஷா என்று வேறு பெண்கள் அருகில் அமர்ந்தால் மட்டும் கொஞ்சம் கதை பேசுவதுண்டு. மற்றபடி அமைதிக் கடல் தான் அவளும். எண்கள் சொல்ல வைக்க வேண்டும் என்றால் கூட அவளின் உடையில் உள்ள பூக்களையோ, செருப்பில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளையோ தான் எண்ண வைக்க வேண்டும். ஆனாலும் அதுவும் ஒரு பஞ்சு மூளை தான்; என்ன, தன்னுடைய சின்ன உலகத்தை விட்டு வெளியே வந்து நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தான் நேரமெடுக்கும்.
சூர்யா அடுத்த வித்தியாசமான பிள்ளை. சொல்வதைக் கேட்டு அப்படியே கிரகித்து, நினைவில் இருத்தி பதில் சொல்வது அவனுக்கு வழக்கம். ஆனால் யாராவது தொடங்கி வைத்தால் குதிப்பதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஜே பாடினால் கூட சேர்ந்து பாடுவான், வர்ஷா குதித்தால் கூட சேர்ந்து குதிப்பான். வருண் அறையின் விளக்கை அணைத்தால், தானும் செய்வான். கலவரத்தில் யாராவது கீழே தள்ளினால் கூட அழத்தெரியாத பிள்ளை அவன்.
வாரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இது போன்ற ஒரு சூழ்நிலையில், இந்த அழகான பூக்களின் நடுவில் இருந்து குதிக்கும்போது குதித்து, பாடும்போது பாடி, ஒருங்கிணைத்து வேலைசெய்து என்று அது ஒரு நல்ல ஓய்வு நேரமாக இருந்தது இன்றுடன் முடிவடைகிறது. இனிமேல் இங்கே கோடை விடுமுறை. இன்னும் மூன்று மாதங்களுக்குப் பள்ளி இல்லை. இந்தப் பிள்ளைகளை இனி் பார்க்க செப்டம்பர் வரை பொறுக்க வேண்டும். அப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு நான் இனி ‘ப்ரீஸ்கூல் ஒன் டீச்சர்’. அடுத்த வருடம் வேறு வகுப்பு, வேறு ஆசிரியர், புதிய பாடங்கள், வேறு புதுப் பாடல்கள்.
ஆனால் செப்டம்பரில் வேறு புதிய மனிதர்கள் எனக்கும் கூடத் தான் அறிமுகமாவார்கள், என்றபோதிலும், இந்த வகுப்பு இப்போது கொஞ்ச நாட்களுக்கு இருக்காது என்பது பெரிய வருத்தம் தான். ‘மூஊஊஊன்று மாதங்களா கோடை விடுமுறை தருவார்கள்? அதிகமாக இல்லை?!’ என்று குழந்தை மாதிரி கேட்டுக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன். அதுவரை இந்த உயிரற்ற, ஓடாத கணினிப் பெட்டிகளைத் தட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும்!
பின்குறிப்பு: கலிபோர்னியா தமிழ் அகதமி மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்மொழி சொல்லிக் கொடுக்கும் மகிழ்ச்சியான வேலையைப் பற்றித் தான் இந்த இடுகை. தென்றலில் அகதமி.
Hi5 - இங்கே வளரும் பிள்ளைகளுக்கு இது ஒரு பாராட்டு போல. நம் கைகளை நீட்டினால் அவர்கள் தம் பிஞ்சு கைகளால் அதை அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள்
TimeOut: தண்டனை தான். நம்ம ஊரில் ‘கிளாஸுக்கு வெளியே நிறுத்திவிடுவேன்’ என்று சொல்வதை இங்கே வகுப்புக்கு உள்ளேயே தனியே சேர் போட்டு ஐந்து பத்து நிமிடம் உட்கார வைத்து தண்டிப்பது.

Subscribe to:
Posts (Atom)