நெருங்கிய உறவினருக்கு விபத்து. ஆஸ்பத்திரி, எலும்புமுறிவு, சர்ஜரி, பிஸியோதெரபி, ஹிந்தி, மராத்தி, சப்பாத்தி, சப்ஜி என்று கழிந்ததில் தமிழ்மணம் பார்க்காமல் கழித்த முதல் முழு வாரம்!
பலர் சொல்வது போல் கைகால் நடுக்கமெல்லாம் இல்லை என்றாலும், இல்லாத ஒரு வாரம் மடல் அனுப்பியும் பின்னூட்டமிட்டும் குறுஞ்செய்திகளிலும், தேடிய நண்பர்களுக்கு நன்றி. ஒவ்வொரு மடலாகப் படித்துக் கொண்டிருக்கிறேன், பதில்கள் மெல்ல வரும். கொஞ்சம் டைம் ப்ளீஸ்..!
திரு கலந்து கொண்ட பழைய வலைபதிவர் சந்திப்பின் தீர்மானங்கள் எல்லாம் முடித்தபின் அடுத்த சந்திப்புக்குப் போனால் போதும் என்று முடிவெடுத்திருந்தமையால், ஊரில் இருந்திருந்தாலும் செந்தழல் ரவி சந்திப்புக்கு வரும் எண்ணம் இருக்கவில்லை. சந்திப்பு எப்படிப் போச்சு? நடேசன் பார்க் மட்டுமா? அல்லது ரத்னா கபேயுமா?
மற்றபடி என்ன நடந்தது, நடக்கிறது என்று பார்த்துவிட்டு அப்புறம் வருகிறேன்.. சர்வேசன் போட்டிக்குப் பேர் கொடுத்ததோடு முடிந்துவிட்டது.. இனிமேல் போய், தக்காளி வெங்காயம் வாங்கி.. ம்ஹும்.. நான் இல்லப்பா...
ஐந்து பத்து நிமிடத்திற்கொருமுறை ஜிமெயிலையும், தமிழ்மண முகப்பையும் புதிதுப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்த உந்துதல் குறைந்து, ஓரளவுக்குப் பழகியும் விட்டதால், அப்படியே அப்பீட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது ;) (யாருப்பா அங்க, சந்தோசத்துல குதிக்கிறது?! )
15 comments:
இது நல்லால்ல சொல்லிபுட்டேன்.
உங்க பேர்ல பினாமியா நானே ஒண்ணு போட்டுடவா? :)
என்னடா யானைகள் நடமாட்டத்தையே காணமே, முதுமலை மேட்டர் ஏதாவது ஆரம்பிச்சிட்டாங்களான்னு நெனச்சேன் :)))
வேலை விசயமா வெளியூர் போயிட்டீங்க என்று நினைத்தேன்.
அது சரி ஹிந்தி, மராத்தி சப்ஜி சப்பாத்தி? அப்போ வெளியூர்தான்?
வாங்க அம்மணி! (சகோதரி)
உங்கள் வரவு நல்வரவாகுக!
உங்கள் பா.க.ச தலைவர் உங்களையெல்லாம் காணாமல் நொந்து நூலாகிப் போயிருக்கிறார்.
முதலில் அவரைப் பார்த்து விடுங்கள்!
நல்வரவு
கோல்ட் டர்க்கி இல்லாம 6 வாரத்தைக் க(ளி)ழிச்ச அனுபவம் கைவசம் இருக்கு:-))))
வாங்க வாங்க. வந்து டோண்டு சாரை என்னான்னு கேளுங்க.
//ஜிமெயிலையும், தமிழ்மண முகப்பையும் புதிதுப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருந்த உந்துதல் குறைந்து, ஓரளவுக்குப் பழகியும் விட்டதால், அப்படியே அப்பீட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது ;)//
ஏன்?....என்னாச்சு.....?
வந்தாச்சு ... வந்தாச்சு அப்டின்னு தலைப்பு கொடுத்திட்டு கடைசி வரிய இப்படி எழுதினா என்னங்க அர்த்தம் ..?
வாங்க வாங்க... :)
பொன்ஸ் அக்கா, இதுவும் சிகரெட்ட உடறது மாதிரிதான். ரெண்டு நாள் நல்லாதான் இருக்கும். மூணாவது நாள் பழைய கதை ஆயிடும்.
எனவே.....
....
....
அவசரப்பட்டு சந்தோஷத்துல குதிக்க மாட்டேன்:-))
//"வந்தாச்சு.. வந்தாச்சு.." //
மணி யோசை கேட்டு எழுந்தேன்...!
:))
யானைக்குட்டி இல்லாம வீடே வெறிச்சோடிப் போனமாதிரி ஒரு ஃபீலிங்க்....
அப்பால அந்த கடைசிலைன்...ச்ச்சும்மாச்சுக்கும்தானே...!
ada...வந்தாச்சா?
வெல்கம் பேக்!
:-(
இனி சங்கத்து வேலைகளும் துவங்கீடுமே!
//பொன்ஸ் அக்கா, இதுவும் சிகரெட்ட உடறது மாதிரிதான். ரெண்டு நாள் நல்லாதான் இருக்கும். மூணாவது நாள் பழைய கதை ஆயிடும்.
எனவே.....
....
....
அவசரப்பட்டு சந்தோஷத்துல குதிக்க மாட்டேன்:-)) //
ஏன் தல, இவ்ளோ ஆத்திரம் அக்கா மேல
:))))))))))
சென்ஷி
//பழகியும் விட்டதால், அப்படியே அப்பீட் ஆகவும் வாய்ப்பிருக்கிறது //
எனக்கு அழுகாச்சியாக வருது
//எனக்கு அழுகாச்சியாக வருது//
//பாலபாரதி - இனி சங்கத்து வேலைகளும் துவங்கீடுமே! // :-((
பாலாதான் குதிக்கிறார்னு நினைக்கேன். எங்க பாகச மீண்டும் தங்கத் தலைவியின் தலைமையில் புதுப்பொலிவு பெற்று நட்சத்திர வாரத்தில் தன்னுடைய வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றிவிடுவர்களோ என்ற பயமாக இருக்கலாம். அவருடைய பின்னூட்டத்திலுள்ள பயத்தைப் பாருங்கள்.
Post a Comment