Monday, February 12, 2007

சாகரனுக்கு அஞ்சலி....


காலை அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தவுடன் தலை பாலபாரதியிடமிருந்து அந்தத் துக்ககரமான தொலைபேசிச் செய்தி... தேன்கூடு நிறுவனரும், தமிழார்வலருமான சாகரன் என்னும் கல்யாண் அவர்களின் மரணச் செய்தி !

29 வயதெல்லாம் மாரடைப்பு வரும் வயதா என்ன?! கொடுமை!

அதிகம் பழகியதில்லை என்றாலும், சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்புக்கு இனிப்புகளுடன் வந்து இனிமையாக கலந்து கொண்ட கல்யாண் இன்று நம்மிடையே இல்லை என்பதை நம்பவே முடியவில்லை!

தமிழோவியத்துடன் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் பரிசுக்கான தேர்வு முறைகள் அத்தனை நேர்த்தியாக இல்லை என்ற எங்களின் குறைகளைக் கேட்டுவிட்டு, சீக்கிரத்தில் வேறு விதமான போட்டி ஒன்றைத் துவங்கப் போவதாகச் சொல்லிச் சென்றார். பிப்ரவரி நான்காம் தேதி, (கடந்து போன ஞாயிற்றுக்கிழமை!) அன்று தொடர்ச்சியாக, சுடர் விளையாட்டின் துவக்கத்தை பற்றி மடலனுப்பி இருந்தார். வெளியூரில் இருந்தமையால், கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து, வேறொருவர் பெயரைப் பரிந்துரைத்து எழுதியது, நேற்று நடந்தது போல் இருக்கிறது!

அதிர்ச்சியிலிருந்து மீண்டுவரவே இன்னும் நாளாகும் போல் இருக்கிறது.

கல்யாண் அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்! :(

13 comments:

We The People said...

காலன் இவ்வளவு கொடூரமானவனா??

அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்!

:((((

முத்துகுமரன் said...

மிகவும் வேதனையளிக்கும் செய்தி. எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Hari said...

என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

சாகரனாருக்கு கண்ணீர் திவலைகளை காணிக்கையாக்குகிறோம்.

Hariharan # 26491540 said...

முகமறியாமல் அவரது தேன்கூடு திரட்டியைப் பயன்படுத்திக் கொள்கிறவன் நான்.

அவர் குடும்பத்தினர்க்கு
அதிர்ச்சியுடன் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

29 வயதில் மாரடைப்பா? :-((

சென்ஷி said...

முகமறியாமல் அவரது தேன்கூடு திரட்டியைப் பயன்படுத்திக் கொள்கிறவர்களில் நானும் ஒருவன்.

அவர் குடும்பத்தினர்க்கு
அதிர்ச்சியுடன் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.

உண்மையில் காலனுக்கு கண்கள் கிடையாதா?

சென்ஷி

வல்லிசிம்ஹன் said...

ஹரிஹரன் சொன்னதுபோல் முகம் அறியாமல் என்னைப் போன்றவர்களுக்கு எளிதில் அணுகும்படி வடிவமைத்துக் கொடுத்த சின்னவயதுக்காரர்.
பெரிய செயலுக்குரியவர்.
அவரது குடும்பத்துக்கு ஆறுதல் என்று ஒரு வார்த்தைதான் எழுத முடிகிறது.

ஒப்பாரி said...

சாகரன் குறித்து தொடர்ந்து வரும் பதிவுகள், அவரின் மரணம் பதிவுலகில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.முகம் தெரியாத சிலரும் வருந்தியிருப்பது அவரின் மீதான மரியாதையை கூட்டுகிறது. சாகரன் அவர்களின் இழப்பு குறித்த பதிவுகளை முழுவதும் அவர்களின் குடும்பத்தாற்க்கு பிறகு ஒரு வேளையில் தெரியப்படுத்தினால் அவர்களின் இழப்பை பகிர்ந்து கொண்டதாய் இருக்கும்.

எல்லோருக்கும் இனியவரான சாகரன் எனக்கு மரணம் மூலம் அறிமுகமாகியிருக்கக்கூடாது.

தருமி said...

என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமி said...

என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

SK said...

திரு. கல்யாணின் நினைவினைப் போற்றும் வகையில் ஒரு 24 மணி நேரத்திற்கு அவருக்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகளைத் தவிர மற்றெந்தப் பதிவையும் அனுமதிக்காமல் அவருக்கு மரியாதை "தேன்கூடும், தமிழ்மணமும்" செய்ய வேண்டும் என ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்!
நன்றி.

Ramani said...

Pons, This is extremely shocking. I just happened to read thenkoodu today after a long time and couldn’t believe this at first. I haven't met him but I have talked to him and exchanged tons of emails. May his soul rest in peace.

-Ramani

Deepa J said...

Dear All,
Please check the following website for Sakaran's funeral rites schedule updates.

http://djanakiraman.googlepages.com/
Thanks
Family