Thursday, May 17, 2007

கெளம்புறேங்க..


'வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடத்தில் வீடு வாங்கிவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.' என்று சமீபத்தில் எங்கோ படித்த நினைவு.. நிஜத்தில் எப்படியோ, மெய்நிகர் உலகமான இணையத்தில் சொந்த வீடு சுலபமான விசயம் தான் என்பது வாங்கிப் போட்டபோது தான் தெரிந்தது..

கூகிளின் தீவிர விசிறியாதலால், கூகிள் ஆப்ஸ் மூலம் முதலில் தளம் வாங்கிப் போட்டாச்சு.. ஆனால் வோர்ட்பிரஸ் மென்பொருளுக்குத் தான் அதில் இடமிருக்கவில்லை :(



சரியென்று, உள்நாட்டு இடம்வழங்கித் தளமான தமிழாவிடமிருந்து இடம் வாங்கி ஒருவழியாக மென்பொருளும் நிறுவியாச்சு..

பழைய இடுகைகளுக்குத் தான் இடமில்லை அங்கே.. அதனால் கொஞ்சகாலத்துக்கு பழைய இடுகைகளை இங்கேயே விட்டுவிட்டு நான் மட்டும் இப்ப

கெளம்புறேங்க..



அங்க வந்து கண்டுக்கோங்க :)

12 comments:

- யெஸ்.பாலபாரதி said...

அப்பாடா.. நிம்மதி.. இனி பா.க.சங்கத்து வேலைகள் கொறஞ்சுடும்....

வாழ்த்துக்கள்.

:)

தமிழ்நதி said...

எனக்கொரு இடம் வாங்கிக்கொடுங்களேன். நானும் 'தனிக்குடித்தனம்' போயிடுறேன்.:)

சென்ஷி said...

இப்படி ஆத்தோரத்துல விட்டுட்டு போனா எப்படி..


சென்ஷி

சென்ஷி said...

//♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
அப்பாடா.. நிம்மதி.. இனி பா.க.சங்கத்து வேலைகள் கொறஞ்சுடும்....

வாழ்த்துக்கள்.

:)//

இப்படில்லாம் சந்தோஷப்படக்கூடாது.
அப்புறம் இதுக்காகவே அக்கா வருத்தப்படும் :)

சென்ஷி

Ayyanar Viswanath said...

நானும்,,நானும்..பொன்ஸ் என்ன இந்த கடலில் தள்ளி விட்டது நீங்கதான் ஒழுங்கா 'தனி' கரை சேர்த்துடுங்க
:)

siva gnanamji(#18100882083107547329) said...

அங்கே எப்படி வருவது? எனக்குத் தெரியலியே.......

துளசி கோபால் said...

ஹை...... புதுவீடா?

வாழ்த்து(க்)கள்.

நானும் ரெண்டு வருசமாச்சு மனை வாங்கிப்போட்டு.

கட்டத்தெரியாம உக்காந்துருக்கேன் ச்சும்மா(-:

G.Ragavan said...

சென்று வா மகளே
சென்று வா
அறிவை வென்று வா மகளே
வென்று வா
பதிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் பதியாதவள் என்று நினைக்கின்றது
தமிழா வாசல் அழைக்கின்றது
தமிழிருக்கும் வரைக்கும் கலக்கமில்லை
எந்த தளத்திலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகளே
சென்று வா
அறிவை வென்று வா மகளே
வென்று வா

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் பொன்ஸ். எப்படி அங்கே வரதுனு சொல்லுங்க.

பொன்ஸ்~~Poorna said...

பாலா, பாகச என் வாழ்நாள் கடமை.. ;) அத்தச் செய்யாம எங்க போகப் போறோம் :))

நதி, வாங்கிட்டாப் போச்சு..

சென்ஷி, நடு ஆத்துல வுடாம இருக்கேறன்னு மகிழ வேண்டாமோ? ;)

அய்யனார்.. கடைசியாக் கிடைச்ச தகவல் படி, நீங்க அடர்கானகத்துல இருக்கிறதா இல்ல சொன்னாங்க, கடலுக்கு எப்ப போனீங்க? ;)

சிஜி, வல்லியம்மா,
http://pookri.com அடிச்சு அங்க வரலாம்..

துளசியக்கா,
கட்டலாமே, சுலபம் தானே.. உதவி வேணுமா?

யாரங்கே..
சந்தக்கவி பாடும் எங்கள்
மகரந்தக்கவி ராகவனுக்குத் தகுந்த சன்மானமாக, இரண்டு இலந்தைவடை எடுத்து வாருங்கள்!! ;)

siva gnanamji(#18100882083107547329) said...

pookri.com போனேன்.அங்கே ப்ரியன் கவிதை, யானை படம்,மற்றும் ஒரு பத்தி உள்ளது
நீங்க எங்கே?

VSK said...

saஇப்படி பொசுக்குன்னு கிளம்பினா எப்படீங்க!


சரி, கெளம்பறேன்னு சொல்லிட்டீங்க!

நல்லபடியா போய், சேர்ந்ததும் ஒரு கடுதாசி போடுங்க!