கடந்த ஒரு வருடமாக இந்தப் பக்கம் நானே வரவில்லை.. வேறு யாராவது வந்து போகிறீர்களா ?
நியூயார்க்கிலிருந்து திரும்பி வந்து கணவரோடு சேர்ந்து வாழத்
தொடங்கியபோது, வாழ்க்கை ரொம்ப வேகமாகப் போகத் தொடங்கிவிட்டது.. முதலில்
வீடு மாறினோம், அப்புறம் தோட்டம் போடத் தொடங்கினோம், பிறகு வேலை மாறினேன்
(மாறினோம்), கொஞ்ச நாள் சமையலில் நேரம் போனது. பின்னர் புதுப் புதிதாக
வீடியோ கேம் விளையாடக் கற்றேன். நிறைய புத்தகம் படித்து முடித்தேன். இதோ
புதுவருடம் தொடங்கிய போது, எல்லாமே பழகிய விசயங்களாகி, பழசாகி, போரடிக்கத்
தொடங்கிவிட்டது.
அடுத்த திட்டம் - நான் ஒரு half-marathon ஓடப் போகிறேன்.. Team In
Training என்று ஒரு இயக்கம். என்னை மாதிரி ஏதேனும் செய்யத் தயாராக
இருப்பவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஓட வைக்கிறார்கள். என்ன, அவர்களின்
மற்றொரு இயக்கமான புற்று நோயாளிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும்
ஆராய்ச்சிக்கு உதவும் Leukemia & Lymphoma Society க்கு பணம்
சேகரித்துக் கொடுக்க வேண்டும்.
நான் தேர்ந்தெடுத்திருப்பது Avenue of Giants - Half Marathon
- இது எங்கள் ஊருக்கு மேற்கே Eureka என்ற ஊரில் நடக்கிறது. இதில் பங்கு
கொள்ள நான் $ 2,400 சேர்த்துக் கொடுக்க வேண்டும். எப்படிச் செய்வது என்று
பார்க்க வேண்டும்.
முதலில் போன புதன்கிழமை அவர்களின் information meeting இருந்தது.
வீட்டிலிருந்து 30 நிமிட தொலைவு என்ற போதும், வருவது வரட்டும் என்று
கிளம்பிப் போய்விட்டேன். அவர்கள் பேசிய விதத்தில் இந்த 2400 டாலர்
பயமுறுத்திய போதும் தைரியமாக பேர் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்ததாக நேற்று - வியாழக்கிழமை மாலை இங்கிருந்து 1 மணி நேரத் தொலைவில்
அடுத்த மீட்டிங்க்.. இது ஒரு kick off meeting. இதற்குப் போகணுமா வேண்டாமா
என்று ரொம்பவே யோசித்து, எப்படியும் தினப்படி பொழுதுபோகாத தன்மையைப்
போக்கத் தான் இந்த முடிவே.. இதையும் நான் முழுமையாக செய்யாவிட்டால் எப்படி
என்று கிளம்பிப் போனேன்.
இவர்கள் இந்த ஓடுதலையும், ஓடுவதற்கான பயிற்சியையும் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறார்கள் (1942 முதல் என்கிறார்கள்).
1. ஓடுதல் - பாதி மெரத்தான் (marathon என்பதை அப்படித் தான் சொல்லவேண்டுமாம்) அல்லது முழு மெரத்தான்
2. நடத்தல் - பாதி அல்லது முழு மெரத்தான்
3. மலை ஏறுதல்
4. ட்ரையத்லான் (நீச்சல், ஓட்டம், சைக்கள் ஓட்டுவது எல்லாம் ஒரே சமயத்தில்)
5. சைக்கிள் ஓட்டுவது.
என்று ஐந்து வகையான விளையாட்டுக்கள்.
ஓடுவது /நடப்பதற்கு மட்டும் நிறைய கூட்டம் கூடுவதால், அதை மட்டும்
இரண்டு குழுவாக பிரித்து south bay team, peninsula team என்கிறார்கள்..
நாங்கள் இருக்கும இடம் தெற்கில் வருதவதால் - south bay.
South Bay Teamஉக்காக மட்டும்:
1. ஒரு டீம் காப்டன்
2. 2 காப்டன்கள் - தண்ணீர் கொடுக்கும் அணிக்கு
3. 2 காப்டன்கள் - ஆங்காங்கே வழியும் நீளமும் குறிக்க
4. 1 web captain - website management உக்கு
5. 1 கோச் - run coach
6. 3 walk coach
7. 2 காப்டன்கள் - நிதி சேர்க்கும் வழிமுறைகளுக்கு உதவ
8. 5-6 mentorகள்
என்னைப் போல் குழுவில் சேரும் ஒவ்வொருவருக்கும் ஒரு மென்டர்
கொடுக்கிறார்கள். என்னுடைய மென்டருக்கு ஒரு 5-6 mentoree இருக்கிறார்கள் -
அதாவது அவர்கள் ஒரு 5-6 பேரைப் பார்த்துக் கொள்கிறார்கள். புது ஆட்களான என்
போன்றவர்களுக்கு, நிதி திரட்ட என்னென்ன செய்யலாம், டீம்மில் ஏதாவது
வேண்டும் என்றால் எப்படிக் கேட்பது என்று அந்த organization உக்கு ஒரு
முகமாகவும் அதே சமயம் எங்களுக்கு ஒரு முதல் துவக்கப் புள்ளியாகும் இவர்கள்
உதவுவார்கள்.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த முடிவு சரிதானா என்று யோசித்து நான்
விலகுவது என்றாலும் செய்யலாம்.. ஒரு மாத பயிற்சி எப்படிப் போகிறது என்று
முதலில் பார்க்க வேண்டும்..
வாராவாரம் இரண்டு நாள் குழுப் பயிற்சி. மீதி மூன்று நாள் சொந்தமாகப் பயிலச் சொல்கிறார்கள். இரண்டு நாள் ஓய்வு.
நான் ஓடப் போகிறேன் என்றதும் தானும் வருவதாக சொன்ன என் கணவர், இதை ஒரு
சாக்காக வைத்து நான் பதிவெழுதத் தொடங்கினால் என்ன? என்றார்.. முதலில்
இதையெல்லாம் எழுதுவார்களா என்று யோசித்தாலும்.. இதோ பதிவு எழுதியாச்சு..
இந்த முறை எல்லாவற்றையும் ஆங்கிலத்திலும் எழுதப் போகிறேன் இந்த இடத்தில்
ஆங்கிலப் பதிவைப் பாருங்க..
ஒவ்வொரு பயிற்சியைப் பற்றியும் தெளிவாக எழுதப் போகிறேன். அடுத்தடுத்து என்னென்ன செய்தோம் என்பது உட்பட…
நேற்றைய மீட்டிங்கில் சுப்பு என்ற தெலுகு நண்பர் கிடைத்தார். சிலிக்கான்
பள்ளத்தாக்கின் ஒரு பிரபல கம்பனியில் வேலை செய்கிறாராம். கம்பனி சார்பாக
ஓடப் போகிறாராம் (நிதி திரட்டுவது மட்டும் அவர் தான் சேர்க்க வேண்டும்!)
இப்படிக் கூட இருக்கிறார்களா என்று ஆச்சரியமாகி விட்டது..
எப்படியோ.. என்னுடைய பிச்சை பக்கம் இங்கே !
அமெரிக்க வாசிகள் முடிந்தால் பணம் கொடுங்க.. நான் எதிர்பார்த்த மாதிரி இது
புது விசயமாக இருக்கிறதா என்று பார்ப்போம்.. அத்தோடு, இந்த சாக்கிலாவது
நான் தொடர்ச்சியாக இந்தப் பக்கம் வருகிறேனா என்றும் பார்ப்போம்!