Sunday, September 16, 2007

உங்க வரலாறு என்ன?

அப்பாவுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்றால் அது கடன் தான். கடன் வாங்குவது மட்டுமல்ல.. யாருக்காவது கடன் கொடுப்பது என்றாலும் சுத்தமாக பிடிக்காது. சின்ன பென்சில் பேனா கடன் வாங்கினாலே, ஒழுங்காக அதே நாள் திருப்பிக் கொடுத்துவிட்டுத் தான் வீட்டுக்கு வர வேண்டும் என்பார். யாராவது கைமாற்றாக பணம் கேட்டால் கூட ‘கடனெல்லாம் எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லி அவர் கேட்ட பணத்தை ‘இதோ வச்சிக்குங்க’ என்று சும்மாவே கொடுத்துவிட்டு வந்து ஏமாளி பட்டம் வாங்கும் ரகம் அவர்.
அவர் பெண் என்ற முறையில் நானும் கூட யாருக்கும் ஒரு ரூபாய் கடன் கொடுக்கவோ வாங்கவோ ஆயிரம் முறை யோசிப்பேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் வங்கிக் கணக்கோடு இலவசமாக கடன் அட்டையும் தருவதாக சொன்னார்கள். கடன் என்ற சொல் வருவதாலேயே அதை வாங்க மாட்டேன் என்று முடிவாக சொல்லிவிட்டேன். வங்கி அலுவலர்கள் அதன் சிறப்பியல்புகளை எல்லாம் பயங்கரமாக விளக்கியபோதும் ‘நோ சான்ஸ்’ என்று முரண்டு பிடித்ததில் ‘ஆளை விடு!’ என்று ஓடி விட்டார்கள்.
அதன்பின்னர் முதல் மூன்று மாதங்களுக்குள் எங்களுடன் வேலை பார்த்த நண்பன் ஒருவனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தது.. நண்பன் பொதுவாக சங்கோசப் பேர்வழி. நான் உட்பட வெகு சிலரே அவனுக்கு அந்த ஊரில் தெரிந்தவர்கள். நானும் மற்றொரு தோழருமாக மாலை அந்த அம்மாவைப் பார்க்கப் போகவும், அவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருந்த மருத்துவமனையிலிருந்து வேறு இடத்துக்கு அழைத்துப் போக வேண்டியதாகிவிட்டது. அலுவலகத்தில் எங்கள் எல்லாருக்கும் குடும்ப சகிதம் மெடிக்ளெய்ம் எடுத்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த ஆஸ்பத்திரி இந்த மருத்துவக் காப்பீட்டின் கீழ் வராது என்பது நண்பனுக்குத் தெரிந்திருக்கவில்லை (என்று நினைவு).. இக்கட்டான அந்த நொடியில் மற்றொரு நண்பர் தனது கடன் அட்டையைத் தேய்த்து மருத்துவச் செலவுகளைக் கொடுத்து ஒருவழியாக பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். இல்லையென்றால் இருபதாம் தேதி வாக்கில் நிகழ்ந்துவிட்ட அந்த செலவைச் சமாளிக்க எங்கள் மூவரின் சம்பளத்தைச் சேர்த்தாலும் முடிந்திருக்காது.
அன்றைக்கு முடிவெடுத்து ஒருவழியாக எங்கள் அலுவலக சிபாரிசில் கடன் அட்டை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினேன். அப்போதெல்லாம், இப்போது போல் நொடிக்கு மூன்று பேர் அழைத்து ‘எங்க வங்கி கடன் அட்டை வாங்குங்களேன்..’ என்று கூவி விற்கும் காலமில்லை.. ஆனால் கடன் அட்டையை பயன்படுத்தாவிட்டால் அதை திரும்ப எடுத்துக் கொண்டுவிடப் போகிறார்களே என்று பயந்தே அதை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.
குறித்த நாளில் கடன் அட்டைக்கான பணத்தைக் கட்டிவிடுவேன். ஒரு முறை கூட வட்டியோ, தாமதத்திற்கான பணத்தையோ, அதிக தொகையையோ கொடுத்ததாக நினைவில்லை.. ‘உனக்கெல்லாம் கடன் அட்டையே தேவையில்லை’ என்று தோழிகளும், ‘கடன் அட்டைன்னு பேர் இருக்கும் போது, அதைப் போய் பயன்படுத்தலாமா?’ என்று வீட்டிலும் என இரு பக்கமும் எனக்கு இடி தான் ;-)
இப்ப என்னத்துக்கு இந்தக் கதையெல்லாம்ங்கிறீங்களா? ம்ஹூம்.. இந்த ஊரில் இப்பத்தைய என் மிகப் பெரிய பிரச்சனையே கடன் வரலாறு இல்லாதது தான்.. வீடு கொடுப்பதானாலும், போன் இணைப்பு கொடுப்பதானாலும், அட கரண்ட் கனெக்ஷனுக்குக் கூட கடன் வரலாறு இருக்கான்னு கேட்கிறாங்க இங்க..
‘ஐயா, பணமா கொடுத்துடறேன்.. கடனே வேண்டாம்னு’ சொன்னால்.. ‘பணமெல்லாம் வாங்க மாட்டோம். உங்க கடன் அட்டை எண்ணைக் கொடுத்தாலே போதும்.. அப்புறம் நாங்க உங்க கடன் வரலாற்றைக் கண்டு பிடிச்சிகிட்டு வரோம்.. அதுக்குக் கூட அதிகம் சார்ஜ் பண்ண மாட்டோம்’ என்று ஒரு உதார்.
‘எனக்கு இந்த ஊரில் கடனும் இல்லை அதனால் வரலாறும் இல்லை, இந்திய கடன் அட்டை நம்பர் கொடுக்கவா? அதோட வரலாற்றைத் தெரிஞ்சிகிட்டு வரீங்களா? ‘
‘அந்நிய நாட்டு விவரங்களை நாங்க நம்ப மாட்டோம். உங்க பாஸ்போர்ட் எண்ணையே எங்க அரசாங்க முத்திரை இருந்தா தானே நம்புவோம்.. ‘
‘ம்கும்.. இப்ப நான் என்னதான் பண்ணனும்?’
‘எங்க நாட்டில் நல்ல கடன் வரலாறு இருக்கிற ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தா உங்களுக்கு வீடு தரோம்.. ‘
‘இல்லைன்னா?’
‘இல்லைன்னா, சரியான கடன் வரலாறு இல்லைங்கிறதுனால நீங்க இன்னும் அதிக டெபாசிட் கட்ட வேண்டி இருக்கும். ‘
“கடன் அன்பை முறிக்கும்” என்று விழுந்து விழுந்து சொல்லிக் கொடுத்த அப்பாவிடம் சொல்லிக் கத்த வேண்டும் போலிருந்தது.. கடனுக்கு -இல்லை- கடன் வரலாறுக்கு இங்கே எத்தனை மதிப்பு என்பதைப் பற்றி..

4 comments:

பொன்ஸ்~~Poorna said...



நான் கூட உங்க பாலிசிதான் (அதாவது, கடன் வாங்கக் கூடாது, கடன் அட்டை கூடாது etc.). Debit card (இதுக்கு தமிழ்ல என்ன?) இருப்பதால் கடன் அட்டை வைத்துக் கொள்ளவில்லை. இதுவரை எனது கடன் வரலாற்றை யாரும் கேட்டது கிடையாது. அப்படி எங்காவது தேவைப்பட்டா என்ன செய்யறதுன்னு யோசிக்கணும் :)
Comment by Voice on Wings — September 21, 2007 @ 10:10 am

:) :) :)

கடன் அட்டை போக debit அட்டையிலும் கூட கடன் வைத்திருக்கும் ஆள் நான்..சிங்கப்பூர், ஜெர்மனி, நெதர்லாந்து என்று பல நாட்டு வரலாறோடு கடன் புவியியல் கூட இருக்கு..அமெரிக்காவுல என்னை ஏத்துக்குவாங்களா :)

கடனாளிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புன்னு பழமொழியை மாத்திடலாமா :) ?
Comment by ravishankar — September 21, 2007 @ 10:53 am

கை வசம் என்னென்னமோ அட்டைகள் எல்லாம் இருக்கு. ஆனா அது எல்லாம் என்ன என்ன ன்னு இன்னும் சரியா தெரியலை, :)
Comment by கலை — September 21, 2007 @ 11:38 am

இந்த விவகாரம் எல்லாம் தெரிஞ்ச நாள தான்.. நான் நான் எந்த வெளி நாட்டுக்கும் போக ஆசை படலை, :)
Comment by யெஸ்.பாலபாரதி — September 21, 2007 @ 10:17 pm

ஹை, புது காடு. கரும்பு நல்லா இருக்கும் போலிருக்கே!!

எனக்கும் இந்த கடன் பிரச்னை வந்த போது - இந்த ஊர்ல முதன் முதல்ல கடன் அட்டை வாங்கும் போது - ‘என் சம்பளம் இவ்வளவு, மாதம் இத்தனை செலவழிக்கப் போகிறேன்’ என்று சம்பளம் சேமிக்கும் வங்கி மூலமாக அட்டை வாங்கினேன். அப்புறம் அட்டையின் யோகம் தான்.

நடத்துங்க!
Comment by கெக்கெபிக்குணி — September 22, 2007 @ 8:39 am

பொன்ஸ்~~Poorna said...

//
குறித்த நாளில் கடன் அட்டைக்கான பணத்தைக் கட்டிவிடுவேன். ஒரு முறை கூட வட்டியோ, தாமதத்திற்கான பணத்தையோ, அதிக தொகையையோ கொடுத்ததாக நினைவில்லை
//
நீங்கள் கடன் அட்டை வைத்திருக்கும் லட்சத்தில் ஒருவர்.

இதை போல மற்றவர்களும் இருந்தால் பிரச்சனை இருக்காது. கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் recovery agent தொல்லையால் தற்கொலை என செய்தியும் வராது.

கடனட்டை இரு புறம் கூர் கொண்ட கத்தி சரியாக பயன்படுத்தாவிட்டால் வட்டி குட்டி போடும் அப்புறம் குட்டியும் குட்டிபோடும் வெகு சீக்கிறம் இந்த குட்டிகள் எல்லாம் சேர்ந்து கடன் தொகையை விட அதிகமாக நிற்கும்.

//
இல்லையென்றால் இருபதாம் தேதி வாக்கில் நிகழ்ந்துவிட்ட அந்த செலவைச் சமாளிக்க எங்கள் மூவரின் சம்பளத்தைச் சேர்த்தாலும் முடிந்திருக்காது
//
வயதானவர்கள் வீட்டில் இருக்கும் போது மருத்துவத்திற்கென reserve ல் பணமும் மெடிக்ளைமும் வைத்திருக்க வேண்டியது அவசியம் க்ரெடிட் கார்ட் அல்ல.

சரி உங்க க்ரெடிட் லிமிட் தாண்டி பில் வந்தா என்ன செய்வீங்க?
Comment by மங்களூர் சிவா — September 22, 2007 @ 1:44 pm

எதிர்பாராத விதமாக பூக்ரி.காம் திறந்தால் புதுப்பதிவு
சிரிக்குது……..
கடனேனு படிச்சேன்………
புதுப்பதிவு போட்டா சொல்லுங்க………
அல்லது
புதிதா பதிவு போட்டீங்க என்பதை அறிந்துகொள்ளும் வழிகூறுங்க
Comment by சிவஞானம்ஜி — September 25, 2007 @ 11:11 am

கடன் அட்டை - ஓரளவு தமிழாக்கம் சரி, ஆனால், credit historyக்கு “கடன் வரலாறு” ன்னு சொல்றது கொஞ்சம் (கொஞ்சமா???) பொருள்குற்றமாயில்லை? நல்ல credit historyனா, நல்லா கடன் இருக்கணும்னு தப்பான அர்த்தமில்ல கொடுக்குது? நல்ல credit historyனா, எங்கயும் கடன் இல்லாம (கடன் இருக்கலாம், கட்ட முடியாம போயிருக்கக்கூடாது), நல்ல சம்பாத்தியம் வைச்சு, சிலபல வருடங்கள் நிலையாக வாழ்க்கை நடத்திக்காட்டியிருக்கவேண்டும் (மிக முக்கியமான பாயிண்ட்)- னுதான் எனக்கெல்லாம் தெரியும்.

என்ஸாய் அமெரிக்கா. :-)
Comment by Premalatha — September 25, 2007 @ 2:57 pm

[…] எல்லா க்ரெடிட்டும் கிடைக்கும்? (க்ரெடிட்னா ”கடன்”னு வேற சொல்றாங்…, ). அதனாலயே தன் முத்திரையைப் […]
Pingback by யாரு சமையல்? « கோம்பை — September 25, 2007 @ 6:00 pm

அமெரிக்காவிலும் கோயிந்துகள் இருப்பது உறுதியாகியிருக்கிறது :-)
Comment by லக்கிலுக் — September 26, 2007 @ 11:39 am

ம்ம்ம்…பல பழைய ஞாபகங்களை நினைவூட்டியது உங்களின் இப் பதிவு.

செல்லிடப்பேசி சேவைக்கே இங்கே ஒருவரின் கொடுக்கல்/வாங்கல் [Credit history] வரலாற்றைப் பார்ப்பார்கள்.

அத்துடன் மக்கள் தமது கொடுக்கல்/வாங்கல் [Credit history] வரலாற்றை ஆகக் குறைந்தது இரு வருடங்களுக்கு ஒரு முறையாவது பார்த்துக் கொள்ளவது நல்லது என அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இங்கே identity theft என்று சொல்லும் குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பது. Identity theft என்பது உங்கள் SSN/SIN போன்றவற்றைத் திருடி உங்களின் பெயரில் கடன் அட்டைகள் பெறுவது போன்ற செயல்கள்.

எனவே உங்களின் கொடுக்கல்/வாங்கல் [Credit history]வரலாற்றை சோதிப்பதன் மூலம், உங்களின் பெயரில் Identity theft நடந்திருந்தால் தெரிய வரும்.

ஆக, கொடுக்கல்/வாங்கல் வரலாறு நீங்கள் சொல்வது போல மிக முக்கியமானது.
Comment by வெற்றி — September 26, 2007 @ 10:04 pm

பொன்ஸ்~~Poorna said...



VoW, //நான் கூட உங்க பாலிசிதான் // நான் இப்ப இந்தப் பாலிசி எல்லாம் பேப்பர்ல தான் வச்சிருக்கேன்.. நான் மட்டுமில்ல, எங்க அப்பாவையே ‘திருத்தி’ கடன் அட்டை வாங்க வச்சிட்டேன்னா பாருங்க..

ரவி,
debit cardஇல் எப்படிங்க கடன்? கலக்குறீங்க போங்க…

கலை, எல்லாம் சரியா பார்த்து வச்சிக்குங்க.. வெற்றி சொல்றதைப் பார்த்தா பயம்ம்மா இருக்கு..

பாலா, நீங்க ஆசைப்படலைன்னா யார் விட்டா உங்களை? ஒரு நாள் நீங்களும் “ஏர்ல போகணும்னு” சொல்லப் போறாங்க உங்க ஆபீஸ்ல, அப்ப தெரியும் ;-)

கெபி, நம்ம நிலைமையும் அப்படித்தான் ஆகும்போல தெரியுது.. பார்க்கலாம்..

மங்களூர் சிவா, //சரி உங்க க்ரெடிட் லிமிட் தாண்டி பில் வந்தா என்ன செய்வீங்க?// அப்படி எல்லாம் வருமா என்ன? கொடுத்த காசைத்தான் அதிகமா திருப்பிக் கொடுக்கச் சொல்லிக் கேட்பாங்களே தவிர இப்படி அதிகமா காசு கொடுக்கிறதெல்லாம் நம்ம வங்கிகளில் நடக்க வாய்ப்பே இல்லையே…

சிஜி, நானே எழுதிடறேன்.. உங்களுக்கு.. ஆனா மெயிலில் subscribe பண்ணலாம்.. உங்க மடல் ஐடியைப் போட முடியுதான்னு பார்க்கிறேன்..

பிரேம்லதா.. நீங்க சொல்லும் விளக்கம் எல்லாம் சரி தான்.. எந்தக் கடனும் இல்லாம தானே நான் இருக்கேன்.. ஆனா இவங்க என்ன சொல்றாங்க, கடன் வாங்கி அடைச்சிருந்தாத் தானே அது வரலாறுன்னு சொல்றாங்க? அப்ப அது கடன் வரலாறு தானே! கடனில்லா வரலாறு வச்சிருக்கிற என்னை நம்ப மாட்டேங்கறாங்களே! ;)

லக்கி, ஒண்ணா ரெண்டா.. இங்க கோயிந்துகள் இல்லாம இருந்தா எங்களை எல்லாம் ஏன் கூப்பிடப் போறாங்க ;)

வெற்றி, இங்கயும் identity theftஆ! பயம்மா இருக்கே!! :(
Comment by poorna — September 27, 2007 @ 12:44 am

இங்க என் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் zeroவாக இருந்தாலும் கூடுதலாக -1000 வரை debit card மூலம் பணம் எடுக்கலாம். அடுத்த மாதம் சம்பளம் வந்தால், அடுத்து நாம் பணம் போட்டால் மொத்தமாக அப்படியே எடுத்துக் கொள்வார்கள். கடன் அட்டை மாதிரி கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கட்ட முடியாது. நமக்கு நிறைய சம்பளம் இருந்தால் -1000க்கு மேலும் பணம் எடுக்க விடுவார்கள்.
Comment by ravishankar — September 27, 2007 @ 1:01 am

// பிரேம்லதா.. நீங்க சொல்லும் விளக்கம் எல்லாம் சரி தான்.. எந்தக் கடனும் இல்லாம தானே நான் இருக்கேன்.. ஆனா இவங்க என்ன சொல்றாங்க, கடன் வாங்கி அடைச்சிருந்தாத் தானே அது வரலாறுன்னு சொல்றாங்க? அப்ப அது கடன் வரலாறு தானே! கடனில்லா வரலாறு வச்சிருக்கிற என்னை நம்ப மாட்டேங்கறாங்களே! //

நீங்க விளையாட்டுக்காக இப்படியே நீடிச்சுக்கிட்டுப் போறீங்கன்னு நினைக்கிறேன். கடன் வாங்காமலேதான் நானெல்லாம் credit history build பண்ணினேன். கடன் வாங்கி அடைத்திருந்தாலும் (அடைத்தது தான் முக்கியம். வாங்கியது அல்ல) உதவும். but it is not just that. financial backgroundங்கிறதைத்தான் credit historyனு சொல்றான்.

//debit cardஇல் எப்படிங்க கடன்? கலக்குறீங்க போங்க…//
over draftனு சொல்றது. நம்ம வங்கி கணக்கில மைனஸ்ல வாங்கிக்கலாம். நம்ம ஊர்ல business காரங்களோட சேமிப்புக் கணக்குல overdraft தருவாங்கன்னு நினைக்கிறேன். UKல (அமெரிக்காவும் அப்படித்தான்னு நினைக்கிறேன்) personal current accountல தருவாங்க. இதுக்கும் நல்ல credit history இருக்கணும். வெறுமனே நிறைய சம்பளம்-னா நல்ல credit history வந்துடாது. credit history ஒரு point system. பொதுவா கொஞ்சம் time period கழித்துத்தான் build ஆகும். புதுசா வர்றவங்க யாருக்கும், கொம்பனா சம்பளம் வாங்கினாலும், credit history சரியா இல்லைன்னுதான் சொல்லி அலைய விடுவாங்க.

//வெற்றி, இங்கயும் identity theftஆ! பயம்மா இருக்கே!!//

எல்லா ஊர்லயும் வசிக்கிறது “மனுச” இனம்தானே. கையின்னு இருந்து ஐந்து விதமான விரல்களும் இருக்கத்தான் செய்யும்.

//அப்படி எல்லாம் வருமா என்ன? //
லிமிட் தாண்டி ஒரேயொரு transaction போகும். அதாவது உங்க லிமிட் $1000னு வைச்சுக்குங்க. இதுவரை நீங்க செலவு செய்தது $995னு வைச்சுக்கங்க, இப்போ $10க்கு சாமான் வாங்கிட்டு கார்டை நீட்டினீங்கன்னா, transaction ஒத்துக்கொள்ளப்படும். இப்போ $1005 உங்க அட்டையின் மொத்த கணக்கு. இதுக்கப்புறம் அட்டை block பண்ணப்படும். வேலை செய்யாது. லிமிட்டுக்கு மேலே போனதுக்கு ஒரு fine போடுவான். (அதுவும் லிமிட்டுக்கு மேலதான போகும்?!) அட்டைக்காரன்கிட்ட போன்போட்டு பேசி மன்னிச்சிடச்சொன்னா மன்னிச்சிடுவான். பணத்தைக்கட்டிட்டீங்கன்னா அட்டை மறுபடி உபயோகத்துக்கு வரும். முழு கடனும் கட்ட வேண்டிய அவசியமில்லை. உடனே கொஞ்சம் கட்டி லிமிட்டுக்குக் கீழே வந்துட்டாப் போதும். அட்டை மறுபடி உபயோகத்துக்கு வரும்.

கடன் அட்டையில் தேர்ந்த பழம் போட்ட கொட்டை நானெல்லாம். வேணும்னா கேளுங்க tricks of the tradeலாம் சொல்லித்தரேன்.
Comment by Premalatha — September 27, 2007 @ 11:47 am

பொன்ஸ்~~Poorna said...



/* வெற்றி, இங்கயும் identity theftஆ! பயம்மா இருக்கே!! */

பூர்ணா, சில மாதங்களுக்கு முன் எனக்கு நடந்த அனுபவத்தைச் சொல்கிறேன்.

எனது பணிமனை downtown ல் உள்ளது. Downtown ல் முக்கிய பகுதியில் உள்ள ATM ஐத் தான் காசு எடுப்பதற்குப் பயன்படுத்துவேன் [எனது வங்கி அட்டையை பாவித்து]

இப்படி ஒரு நாள் ATM ல் பணம் எடுக்க முயன்ற போது என்னால் பணம் எடுக்க முடியவில்லை. ATM திரையில் என்னை எனது வங்கிக் கிளையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும் எனும் தகவல் வந்தது.

பின்னர் நான் வங்கியுடன் தொடர்பு கொண்ட போது எனது வங்கி அட்டையைத் தாம் இடைநிறுத்தி வைத்துள்ளதாகச் சொன்னார்கள். காரணம் , யாரோ எனது இரகசிய இலக்கத்தைப் [PIN number] எடுத்து எனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முயற்சித்ததாகவும், அதனால் தாம் வாடிக்கையாளரான எனது பாதுகாப்புக் கருதி இப்படிச் செய்ததாகவும் சொன்னார்கள். பின்னர் நான் புதிய வங்கி அட்டை எடுக்க வேண்டியதாயிற்று. :-))
Comment by வெற்றி — September 27, 2007 @ 10:19 pm

Facts
Identity theft has become one of the fastest growing crimes in Canada and the United States. In the United States, identity-theft complaints to the Federal Trade Commission have increased five-fold in the last three years, from 31,117 in 2000 to 161,819 in 2002. In Canada, the PhoneBusters National Call Centre received 7,629 identity theft complaints by Canadians in 2002, that reported total losses of more than $8.5 million, and an additional 2,250 complaints in the first quarter of 2003 that reported total losses of more than $5.3 million. In addition, two major Canadian credit bureaus, Equifax and Trans Union, indicate that they receive approximately 1400 to 1800 Canadian identity theft complaints per month, the majority of which are from the province of Ontario.

One reason for the increase in identity theft may be that consumers often become victims of identity theft without having any direct contact with the identity thieves who acquire their personal data. Simply by doing things that are part of everyday routine — charging dinner at a restaurant, using payment cards to purchase gasoline or rent a car, or submitting personal information to employers and various levels of government – consumers may be leaving or exposing their personal data where identity thieves can access and use it without the consumers’ knowledge or permission.

பூர்ணா, மேலே உள்ள தகவல்கள் கனடிய மத்திய அரசின் தகவல்கள். கனேடிய மத்திய அரசு இந்த
identity theft பற்றி மக்களுக்குப் பல தகவல்களை அளிப்பதற்காக ஒரு இணையத்தளமே வைத்திருக்கிறார்கள். அதில் இக் குற்றம் பற்றி நீங்கள் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

அத் தளத்தின் முகவரி:

http://www.publicsafety.gc.ca/prg/le/bs/consumers-en.asp
Comment by வெற்றி — September 27, 2007 @ 10:29 pm

நானும்.. வைச்சுருக்கேன்.. செலவுப் பண்ணி சழற்சி எல்லாம் செய்திருக்கேன்… தெரிஞ்வுக்கணும்னு தெரிஞ்சு செய்தேன்..

தெரிஞ்சுக்கிட்டதுல முக்கியமான சேதி.. உங்க அப்பா.. எங்க அப்பா மாதிரி.. இலட்சக் கணக்கான மக்கள் வாயைக் கட்டி வயத்தைக் கட்டி சேமிக்கும் பணம்.. பால் காரன்.. பெட்டிக் கடைக் காரன் தபால் ஆபீஸில் சேர்க்கும் பணம்..

இப்படிப் பட்ட பணம் தொழில் துவங்குவோருக்காகவும்.. அவசர அவசியத் தேவைக்காகவும் பயன் படுத்தலாம்.. ஆடம்பரத்துக்கு ?

துகள்தீர் பெருஞ்செல்வம் என்கிறது நாலடியார்.. குற்றமற்ற/ அறவழியில் மேற்கூரியோர் ஈட்டிச் சேர்க்கும் பணம்.. அவ்வழியிலேயே செலவுச் செய்ய ஊக்குவிக்கப் படுதல் உத்தமம்..

பல பேர் மாத வருமானத்தைக் காட்டி வெட்டியாச் செலவு செய்கிறார்கள்.. சிலர் உண்மையிலேயே அவசியத்துக்கும் அவசதத்துக்கம் பயன் படுத்தறாங்க..

நான் ரெண்டாவது இரகத்துக்குத் தாவ போறென்.. நீங்க?
Comment by ஆமாச்சு — October 29, 2007 @ 11:03 am