Wednesday, April 12, 2006

யானை யாத்திரை

துளசி அக்கா மாதிரி பயணக் கட்டுரை எழுதுவது இதன் நோக்கம் அல்ல.. எழுதாம விட்டுட்டால், மறந்துடப் போறேன்னு பதியறேன்.

மதுரை பக்கத்துல பொட்டப்பாளயத்துல ஒரு காலேஜுல எழுத்து, நேர்முக, பின்முகத் தேர்வெல்லாம் நடத்தி பட்டம் பெறப் போகும் பட்டதாரிகளை எங்க கம்பனிக்கு தேர்வு செய்வது தான் முக்கிய பணி.. ரெண்டு நாள் பத்தாது, வேற வேலை எதுவும் வச்சிக்காதீங்கன்னு சொல்லி அனுப்பி இருந்ததுனால, எப்படியும் மீனாக்ஷி கோயிலுக்காவது போய்ட்டு வந்துடலாம்னு தருமி சார்கிட்ட எப்படிப் போறதுன்னெல்லாம் கேட்டு வச்சிகிட்டேன்..

ஆனா பாருங்க, எங்க கம்பனி பேரு கேட்டதும் எல்லாரும் ஓடிப் போய்ட்டாங்க போலிருக்கு.. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு.. திங்கள் இரவு தான் வண்டின்னு சொன்னதுனால, சுறுசுறுப்பா இருந்த மூணு பேர் மட்டும் ஊர்சுத்தப் போனோம். புத்திசாலித்தனமா தருமி சாரோட போன் நம்பர் எல்லாம் வீட்லயே விட்டுட்டுப் போய்ட்டேன்.. இருந்தாலும் அங்கங்க விசாரிச்சிகிட்டே கோயிலுக்கெல்லாம் போய்ட்டோம்..

முதல்ல மீனாக்ஷி கோயிலுக்குத் தான் போனோம்.. அம்மனைப் பாத்தோம், பார்வதி கூட ஒரு போட்டோ எடுத்து கிட்டோம்.. பார்வதியோட குட்டி வேற இருந்துச்சு.. நல்லா பழக்கி வச்சிருக்காங்க. பத்து ரூபா குடுத்தா, பார்வதி அழகா போட்டோவுக்கு போஸ் வேற குடுக்குது.. வெளில வந்து வாழைப்பழம் வாங்கிட்டு போய் குடுத்தேன். நல்லா சாப்டுச்சு..

அப்புறம் பெரியார் பஸ் ஸ்டாண்டு போய் பஸ் பிடிச்சு திருப்பரங்குன்றம் போனோம், அங்க ஔவையாரை ஒரு போட்டோ. திருப்பரங்குன்றம் யானையைப் பத்தி இங்க சொல்லணும். நாங்க ஏதோ ஆர்வமா பூஜை பண்ண தேங்காயை ஒரு பாதி குடுத்தோம்.. அந்தப் பாகன், "யானை தேங்கா எல்லாம் சாப்பிடாது" ன்னு சொல்லிட்டான். ஓட்டை உடைச்சு குடுத்தப்போ சாப்பிடுது.. தேங்காயை உடைச்சு சாப்பிடக் கூட தெரியலை அந்த யானைக்கு..

சின்ன வயசிலேயே பிடிச்சிகிட்டு வந்து சாப்பாடு போட்டு வளர்த்துவிட்டுர்றாங்க.. அதுக்கு தேங்காய் உடைப்பது மாதிரியான அதன் இயல்பான வேலைகளே தெரிவதில்லை :(..

திரும்பி மதுரை வந்து அழகர் கோயில், நூபுரகங்கை வரை போனோம்; ஆனா, துளசி அக்கா சொன்ன ஒத்த கை குரங்கைத் தான் பார்க்க முடியலை.

அழகர்கோயில் ஆண்டாளோட வாலிலேர்ந்து முடி எடுத்து ஒரு முடி இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு விக்கறாங்க.. பாவம், அந்த நேரம் யாரையும் கிட்ட விடுறது இல்லை.. ஆனா யானை தான் பாவம்.. :(.

நாங்க போனப்போ ஆண்டாளுக்கு உணவு நேரமாம்... உள்ள அழகருக்கு நைவேத்தியம் முடிஞ்சு சாப்பாடு வரணுமாம். பாவம், அதுக்கு ஏதாச்சும் வாங்கிக் குடுக்கலாம்னா கடை தான் இல்ல.. அதுக்கு அரை மணிநேரம் முன்ன தான் நாங்க நல்லா கொய்யாப் பழம் சாப்பிட்டோம். ரொம்ப வருத்தமா போச்சு..

அப்புறம், மறுபடி மதுரை, வண்டியூர் மாரியம்மனோட எங்க தல (யானை??? !!!) யாத்திரையை முடிச்சிகிட்டு ரெயிலேறிட்டோம்... யானைகள் போட்டோ இங்கே.

22 comments:

பொன்ஸ்~~Poorna said...

யானையைப் பத்தி எழுதினதுனால, ஊரெல்லாம் தப்பு தப்பா வந்துடுச்சு.. சரி பண்ணிடறேன்..

Unknown said...

Confusion? mmmmm

Pavals said...

யானை எப்பவுமே ஒரு fantasy'ஆன விஷயம்ங்க.. இன்னும் யானை பார்க்கறதுக்காகவே நான் அடிக்கடி டாப்ஸ்லிப் போறேன் .. ஆனா கோயில் யானைக கொஞ்சம் பாவப்பட்ட ஜீவன்க, சமயத்துல அவ்ளோ பெரிய உருவம், கைநீட்டி பிச்சை எடுக்கறத பார்க்கும் போதுதான் மனுஷனே அசிங்கமா தெரியறான். :(


ஆமா, யானை மட்டும் தான் பார்த்தீங்க.. வேற ஒன்னும் விஷயம் இல்லையே..எல்லாம் மாத்தி மாத்தி எழுதியிருந்தீங்களே அதான் கேட்டேன் ;)

துளசி கோபால் said...

யானைன்னு பார்த்ததும் அடிச்சுப்பிடிச்சு ஓடியாந்தேன்.

நல்லா இருக்கும்மா பொன்ஸ். ஆனா இந்த பார்வதியோட புள்ளையை அன்னிக்குப் பார்க்கலையேன்னு கவலை.
அதுக்குப் புள்ளை இருக்கறதே தெரியாமப்போச்சு. அவ்வையாரையும் பார்க்கலை. வெளியே போயிருந்தாங்களாம்.
அழகர் கோயிலில் கல்யாணிதான் அன்னிக்கு இருந்தா.

நல்ல வேளை போட்டோ போட்டு என் வயித்துலே பாலை வார்த்தேம்மா.

எனக்கு இப்படி ஒரு 'வாரிசு' வந்துக்கிட்டு இருக்கறது சந்தோஷம்தான்.

நல்லா இரு தாயி.

G.Ragavan said...

ஆகா! ஆனைகளை வரிசையாப் படம் பிடிச்சித் தள்ளீருக்கீங்க...பிரமாதம். பார்வதி புத்திரன்னு போட்டிருக்கீங்க.....பேரு இல்லையா.....முருகன்னு இருக்கப் போகுது....

என்னது தேங்காய ஒடைக்கத் தெரியலையா....நான் பாத்திருக்கேன். கும்பகோணத்துல கும்பேசுவரர் கோயில்ல ஆனைக்குத் தேங்காயக் குடுத்தேனே....நச்சுக்குன்னு ஒரு மிதி....தேங்காச்சில்லு கலகலன்னு வந்து விழுந்திருச்சு....தும்பிக்கைல தூக்கி கபுக்குன்னு வாய்க்குள்ள அமுக்கீருச்சி. அந்தப் பாகன் வேணுமின்னே சொல்லீருக்கலாம். அப்பத்தான் காசு குடுப்பீங்கன்னு. சங்கரங்கோயில்ல கோமதி செஞ்ச வம்பு இருக்கே....அதுக்கு நான் இன்னும் நாலு பதிவு எழுதனும். ம்ம்ம்...

Maraboor J Chandrasekaran said...

பொன்ஸ், இப்பதான் உங்க பதிவெல்லாம் எடுத்துவெச்சுப் பார்க்கறேன். துளசியக்கா மாதிரியே ஸ்டைலு! பட்டையக் கிளப்புங்க! சரி, நெஜம்மாலுமே தெரியாமதான் கேக்குறேன், ஏன் யானைக்குப் பொம்பள பேரார் வெச்சாங்க? இல்ல, நீங்க பார்த்ததெல்லாம் பொம்பள் யானைங்களா? இல்ல, ஆம்பள யானை பார்க்கமாட்டேன்னு ஏதும் திட்டம் வெச்சுருக்கேங்களா? நானும் மதுரக்காரந்தான். சும்ம இருந்த என்னைய ஊர் பேரச் சொல்லி உசுப்பி விட்டுட்டேங்க! ஹ¤ம்.!! இனி போனாச் சொல்லுங்க, நானும் வாரேன்! நல்லா சுத்திக்காட்டறேன். எப்படியோ எங்கிட்ட சொல்லாம போனாலும் எங்காளுங்களை அழகர் கோவில்ல பார்த்துட்டு வந்துட்டீங்க! :-)

பொன்ஸ்~~Poorna said...

சாதா குழப்பம் தான் தேவ்.. நீங்க வேற கட்சி அது இதுன்னு எக்ஸ்ட்ரா குழப்பமாக்கிட்டீங்க.. :)

ராசா, யானை மட்டும் தாங்க பார்த்தேன். மீனாக்ஷி, முருகர் எல்லாம் கூட ரெண்டு நிமிஷம் தான் பாக்க விட்டாங்க.. நகருங்க நகருங்கன்னு எல்லா இடத்திலயும் கூட்டம், ரெண்டு ரூவா, பத்து ரூவா டிக்கெட்டு.. சாமி பாக்க டிக்கெட் எடுக்கறது எனக்குப் பிடிக்காது. என்ன பண்ணறது?!!!

Unknown said...

யார் நாங்க குழப்புனோம்... ஆகா இது நல்ல கூத்துங்கோ

பொன்ஸ்~~Poorna said...

துளசி அக்கா, யானை, பூனை மட்டும் இல்ல, எனக்கு எல்லா மிருகமும் பிடிக்கும்.. ரெட் க்ராஸ்ல சேந்துடலாமான்னு பாத்துகிட்டிருக்கேன். நான் யானையைப் பாத்து சந்தோஷப் பட்டதைப் பாத்து என் கூட வந்தவங்க எல்லாம் பயந்துட்டாங்க.. இது என்ன சின்ன புள்ள மாதிரி குதிக்குதேன்னு :) இருந்தாலும், யானை யானை தான்.. அது மாதிரி வராது...

ராகவன்,
பேரு கேக்கலைங்க.. தேங்கா உடைக்கிற யானையை நான் கூட பாத்திருக்கேன்.. எங்கன்னு நினைவில்ல.. ஆனா இந்த யானை உடைச்சு குடுத்ததும் நல்லா சாப்டுச்சு.. சங்கரன்கோயில் கோமதிய பத்தி எழுதுங்க.. படிக்கலாம்..

பொன்ஸ்~~Poorna said...

அபிராமன், மதுரை ஜிகிர்தண்டாவைப் பத்தி நான் காதல் படத்துல தான் தெரிஞ்சிகிட்டேன். இந்த முறை போனப்போ சாப்பிட்டுட்டு தான் வந்தேன்.. யானை பயணம்னு எழுத உக்காந்ததுனால, அது எழுதத் தோணலை.. அதே மாதிரி, அழகர் கோயில்ல பதனீர் கூட சாப்பிட்டேன். பதனீர்ங்கற பேர்ல அதை நான் சாப்பிட்டதே இல்லை.. பூனால நீரான்னு தருவாங்க.. அது தான் பதனீர்னு இப்போ தான் தெரியும் :(

சந்திரன், அக்கா மாதிரி எழுதணும்னு நான் நினைக்கலைங்க.. ஏதோ அதுவா வருது.. இதுக்கு முன்னாடி கதை எல்லாம் படிச்சவங்க, குமுதம் ஸ்டைல்னு சொன்னாங்க.. ஏதும் மத்தவங்க ஸ்டைல் வராம எழுத முடியுதான்னு பாக்கறேன்..

எல்லாம் பெண் யானைங்க தாங்க.. ஏன்னு தெரியலை... இல்லை என்னைப் பாத்த உடனே எல்லாம் பெண்யானை பேரா சொன்னாங்களான்னு தெரியலை. நீங்களும் மதுரைக்காரர்னு தெரியாதுங்க.. அப்படியே நான் உங்களைக் கூப்பிட்டிருந்தாலும் நீங்க தான் அதே வேலைக்காக பூனா போயிருந்தீங்களே!!!

சிங். செயகுமார். said...

அரசியல்லதான் வாரிசுன்னு சொல்லுவாங்க! அடடே வலைபதிவிலுமா அடிச்சி ஆடுங்க! அம்மா ஆட்சியில எல்லாம் நடக்கும்!=))

Geetha Sambasivam said...

என்ன பொன்ஸ், நான் 2 நாள் தமிழ் மணம் பக்கம் வரலைன்னதும் நைஸாக மகளிர் அணித் தலைவியா கிட்டீங்களே. இது நியாயமா? இங்கே வந்து பார்த்தால் சாவகாசமாக யானை பற்றிப் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் அந்த தேவ், பார்த்திபன், கட்டதுரை வேலையா? இப்போ சிபியைக் கூட உங்கள் கட்சிக்கு இழுத்து இருக்கிறீர்கள். அவர் பாட்டுக்குக் குமார காவியம் எழுதிக் கொண்டிருந்தார். எல்லாம் தலைவர் இல்லாத காரணம்தான்.

Karthik Jayanth said...

பொன்ஸ்,

இப்படி எல்லாரும் ரவுண்டு கட்டி எங்க ஊர் பத்தியே எழுதுனா, நாங்க எல்லாம் எப்படி கடைல உக்காந்து வேலய பாக்குறது. அப்புறம் உடனே ஊருக்கு போறதுக்கு துளசி அம்மாவும், நீங்களும் தல புராணம் எழுதிய எங்க ஊர் அய்யா எல்லாருந்தான் டிக்கெட்டு தரணும் சொல்லிட்டேன் :-)..

இன்னும் ஒரு தடவை நிதானமா எங்க ஊருக்கு போய் இருக்குற எல்லா சாமியும் பாருங்க...

பொன்ஸ்~~Poorna said...

//அரசியல்லதான் வாரிசுன்னு சொல்லுவாங்க! அடடே வலைபதிவிலுமா அடிச்சி ஆடுங்க! அம்மா ஆட்சியில எல்லாம் நடக்கும்!=)) //
என்ன சிங், நல்ல விஷயங்களைத் தொடர்வது நல்லது தானே!! :)

//அது சரிங்க எனக்கு தெரிஞ்சவங்க ரெசூமே அனுப்பினா வேலை கொடுப்பீங்களா? :) //
நம்ம கைல என்னாங்க ராஜ் இருக்கு.. அனுப்பி விடுங்க பார்க்கலாம் :)

//அப்புறம் உடனே ஊருக்கு போறதுக்கு துளசி அம்மாவும், நீங்களும் தல புராணம் எழுதிய எங்க ஊர் அய்யா எல்லாருந்தான் டிக்கெட்டு தரணும் சொல்லிட்டேன் :-)..//
திரும்பி போகறதுக்கு டிக்கெட்டு, நீங்க வாங்கிகீறீங்களா??! உங்க கடைல அப்புறம் ஏதாச்சும் சொல்லப் போறாங்க.. :) ஏதோ, உங்க ஊரைப் பத்தி எழுதினா உங்களுக்கு சந்தோஷமா இருக்குமேன்னு பார்த்தேன்! இதுக்கு நான் தலபுராணம் எழுதிய ஐயா ஊருக்கே போயிருக்கலாம் போலிருக்கே!! :)

பொன்ஸ்~~Poorna said...

// என்ன பொன்ஸ், நான் 2 நாள் தமிழ் மணம் பக்கம் வரலைன்னதும் நைஸாக மகளிர் அணித் தலைவியா கிட்டீங்களே. இது நியாயமா? இங்கே வந்து பார்த்தால் சாவகாசமாக யானை பற்றிப் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் அந்த தேவ், பார்த்திபன், கட்டதுரை வேலையா? இப்போ சிபியைக் கூட உங்கள் கட்சிக்கு இழுத்து இருக்கிறீர்கள். அவர் பாட்டுக்குக் குமார காவியம் எழுதிக் கொண்டிருந்தார். எல்லாம் தலைவர் இல்லாத காரணம்தான். //

என்ன கீதாக்கா, இப்படி சொல்லிட்டீங்க.. நிங்களும் நானும் அப்படியா பழகினோம்?!!! என்னிக்குமே நீங்க தாங்கா தலைவி. நான் உங்க கீழ குற்றேவல் புரியும் தொண்டர்படையின் தொண்டரடிப் பொடிப்பொண்ணாக்கும்... நீங்களே சொல்லிட்டீங்க, நான் எவ்ளோ வெள்ளை உள்ளத்தோட யானையைப் பத்தி எழுதிகிட்டிருக்கேன்னு.. பேசாம, நீங்களும் நானும், ஒரு வா.வ சங்கம்(வாலிபர்களை வருத்தபடவைக்கும் சங்கம் ;)) ஆரம்பிச்சுடலாமா???!!! என்ன சொல்றீங்க!!!

Geetha Sambasivam said...

அதெல்லாம் புதுசாகச் சங்கம் ஆரம்பிக்க _முடியாஆஆஆஆது..பேசாமல் தலைவி பதவியை விட்டுக் கொடுத்துடுங்க. ஆமாம், அது என்ன ஆர்வத்திலே எழுதினதைக் கூட நான் புரிஞ்சுக்க மாட்டேனா என்ன? எல்லாம் சரியாத்தான் எழுதி இருக்கீங்க.இப்படி இருந்தா சங்க வேலையெல்லாம் எப்படி செய்வீங்க?அதான் என்னை மாதிரி அனுபவம் வேணுங்கிறது.

Geetha Sambasivam said...

அப்புறம் காயெல்லாம் கூட அவர் நறுக்குவார்தான். இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பாங்களா? உங்களுக்கும் தெரிஞ்சுக்க வயசு ஆயிடுச்சுல்ல.புரிஞ்சுக்கணும்.குழந்தையாக இருக்கீங்களே.

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி, பொன்ஸ் மற்றும் அம்பிக்கு. அம்பி, உங்கள் பதிவைப் படித்து வருகிறேன்.நீங்கள் எழுதி இருப்பதில் இருந்து உங்களுக்கு போலி டோண்டுவைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று புரிந்து கொண்டேன். நல்லவேளை அவன் உங்கள் மனதைச் சோர்வடையச் செய்யவில்லை. கடவுளுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

என்ன பொன்ஸ், மூன்று நாளாக ஆளையே காணோம். யானை சவாரி உங்களை எங்கே கூட்டிப் போச்சு தெரியலியே.

பொன்ஸ்~~Poorna said...

அதை யேன் கேக்கறீங்க.. யானை மேல போனதுல நேரம் காலமே தெரியலைன்னு சொல்ல ஆசை தான் ஆன எங்க வீட்டு இணையம் திடீர்னு வேலை செய்யலை. அதான் காணாம போய்ட்டேன். தேவ் அண்ணன் வேற ஏதோ வாக்குறுதி, அடின்னு சொன்னதுல சத்தம் காட்டாம, வீட்லயே முடங்கிட்டேன்..

அக்கா, நீங்களே தலைவியா இருந்துக்குங்க.. இந்த பேர்வைக்கிற வேலை மட்டும் என்கைல விட்டுருங்க, ஆமாம் சொல்லிட்டேன்..

தருமி said...

எங்க ஊருபக்கம் சொல்லுவாங்க: பட்டிக்காட்டான் மிட்டாய்கடைய / யானைய பாத்தது மாதிரின்னு...

நான் ஒண்ணும் உங்கள சொல்லலை..

பொன்ஸ்~~Poorna said...

//பட்டிக்காட்டான் மிட்டாய்கடைய / யானைய பாத்தது மாதிரின்னு...//
ஒருவிதத்துல உண்மை தான் தருமி.. திரும்பி வந்து சென்னைல யானையே இல்லையேன்னு எனக்கு ஒரே வருத்தம்.. இருந்தாலும், எத்தனை நாள் ஆனாலும் இந்த யானை மேல இருக்குற க்ரேஸ் குறையவே குறையாதுன்னு நினைக்கிறேன்.. ஓவர் டூ துளசி அக்கா :)